Page 1 of 1

"சொர்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா"

Posted: Wed Sep 05, 2012 8:52 pm
by karthick
நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே 'கரூர்' தான்..

அது எங்க இருக்குனு யோசிகிறீங்களா ! திருச்சி அருகே இருக்குங்க.
சேர சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய (வஞ்சி மாநகரம்) கரூர் சுமார் 2000 ஆண்டுகள் வரலாறு மிக்கது.
சேரர்கள் மட்டும் இல்லைங்க பாண்டிய மற்றும் சோழ அரசுகளின் சாம்ராஜ்யங்களும் இதில் அடக்கம்.
இன்னும் பல மன்னர்கள் கரூரை ஆண்டுள்ளனர்.

என்னோட ஊர்ல இதுவரைக்கும் கிடைக்காதது ஏதும் இல்ல.
என்னோட பள்ளி பருவத்துல படித்ததெல்லாம் இப்ப நினச்சு பாத்தாலும் இனிமைதான்.

அழகான சூழ்நிலைகளையும் கரூர் கொண்டுள்ளது.ஊரை சுற்றி பல கிராமங்களும் உள்ளது.
கரூர் கண்ணுக்கு நல்லதுன்னு சொன்னா தப்பே இல்லைங்க. ஏனென்றால் எனது ஊரை சுற்றி வெறும் பசுமையே.!
வெறும் கையோடு வருபவர்களுக்கு நல்ல தொழில் வாய்பையும் நல்ல வாழ்கையும் அமைச்சு தரதுல எனது ஊர் பேர் போனது தான்.

இன்னும் சொல்லலாம் ,எனது திருப்திக்கு இதுவே போதும் என நினைக்கிறேன்...

Re: "சொர்கமே என்றாலும் அது நம்ம ஊற போல வருமா"

Posted: Wed Sep 05, 2012 9:17 pm
by சாந்தி
கண்ணுக்கு அழகான பசுமையான ஊரில் இருந்தாலே மனதுக்கு அமைதியாக இருக்கும்... அப்படித்தானே!

Re: "சொர்கமே என்றாலும் அது நம்ம ஊற போல வருமா"

Posted: Wed Sep 05, 2012 10:40 pm
by ஆதித்தன்
பிறக்கும் முன்னே வரம் பெற்ற வந்தவர் கார்த்திக்!

அப்படித்தானே! இல்லைன்னா, இத்தனை பெருமை கொண்ட ஊரில் பிறந்திருக்க முடியுமா!!!

சூப்பர்.

Re: "சொர்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா"

Posted: Sat Sep 08, 2012 1:43 pm
by karthick
உண்மைதான் ஆதித்தன் சார்...

ஷான்பூ கூறியதும் உண்மைதான்..ஆனால் நான் இப்பொழுது சென்னையில் இருப்பதால் எனது ஊரை தவற விடுகிறேன்..

Re: "சொர்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா"

Posted: Fri Dec 14, 2012 10:36 pm
by sk3662
கொஞ்சம் பொறுமையா இருங்க சார் எப்படியும்....நம்ம ஊருக்கு போய்தான் ஆகணும்........