பரிசுத் தொகை ரூ.25000-க்கான கட்டுரை எழுதும் வாய்ப்பு போட்டி

படுகையில் நடைபெறும் பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் ஓட்டெடுப்பினை நடத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்துவது மற்றும் அறிவிக்கப்பட போட்டிப் பதிவுகளை அத்தலைப் பதிவுடன் பின்னூட்டமாகச் செய்ய வேண்டிய மையம்.
Forum rules
உங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.
Locked
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12036
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பரிசுத் தொகை ரூ.25000-க்கான கட்டுரை எழுதும் வாய்ப்பு போட்டி

Post by ஆதித்தன் » Mon Jul 16, 2012 12:02 am

வார்த்தை கொண்டு கட்டுரை எழுதும் பணி
ARTICLE WRITING JOB
இணைய தளங்களுக்கு மிக முக்கியமானது கட்டுரைகள்(Article). எந்தவொரு வெப்சைட்டை எடுத்துக் கொண்டாலும் சரி, அதனுடைய வாசகர்களின் எண்ணிக்கை, அத்தளத்திலுள்ள கருத்து மிகுந்த கட்டுரையைப் பொறுத்துத்தான் அமைகிறது. பலர் இணையப் பக்கங்கள் வைத்திருந்தாலும், தன் தளத்திற்கான கட்டுரைகளை அவர்களால் எழுத முடிவதில்லை. ஆகையால், பிறரிடம் இருந்து தனக்கான வார்த்தை அல்லது பொருள் பற்றிய கட்டுரையை எழுதி வாங்கித் தன் தளத்தில் வெளியிடுகின்றனர். கட்டுரையின் வார்த்தைகளின் அளவை பொறுத்து விலை நிர்ணயம் செய்து, கட்டுரை எழுதுபவர் பணம் பெற்றுக் கொள்கிறார். குறிப்பாகச் சொல்லப் போனால், ஒர் கட்டுரைக்கு ரூபாய் 20-லிருந்து 200 வரை பெறுகின்றனர். நாம், பள்ளியில் "காந்தி பற்றி கட்டுரை வரைக", "ஆறு தன் நிலை கூறுவது போல் கட்டுரை வரைக", வாழை தன் வரலாறு கூறுதல்- கட்டுரை வரைக... என வரும் கேள்விகளுக்கே.... கொஞ்சம் தட்டுத் தடுமாறித்தான் பதில் எழுதுவோம். அப்படியிருக்க, ஒர் பொருளை அல்லது வார்த்தையைக் கொண்டு கட்டுரை வரைவது என்பதும் கொஞ்சம் கடினமான பணிதான். அது பற்றிய விவரம் நமக்கு இருந்தால் மட்டுமே நம்மால் கட்டுரை எழுத முடியும் அல்லது அதனைப் பற்றித் தேடிப் படித்து விவரமாக எழுதணும், அவ்ளதான். சரி இருக்கட்டும். நானும் உங்களுக்கு ஒர் கட்டுரை எழுதும் பணியை கொடுக்கப் போகிறேன். அப்பணிக்கு ரூபாய் 150/= வெகுமானம் நிர்ணயம் செய்துள்ளேன். ஆகையால், கீழ் கொடுத்துள்ள வார்த்தை கொண்டு 400 வார்த்தை அல்லது 60 அடிகளுக்கு குறையாமல் கட்டுரைகளை எழுத வேண்டும். குறிப்பாக ரூ.25,000/= பரிசுத் தொகையின் மூலம் குறைந்தப்பட்சம் 60 நபர்கள் தமிழ் ஆன்லைன் ஜாப் பற்றிய கட்டுரையை எழுதித் தெளிவும் நேர்த்தியும் அடைவார்கள் என்பதே சிறப்பு. மேலும், போட்டியின் நடு நடுவே கட்டுரைகளை தணிக்கை செய்து ஏற்கப்பட்ட விவரம் அறிவிக்கப்படும். ஆகையால் முதன்மையாக வரும் நபர்களுக்கே இப்போட்டியில் பங்கேற்று பரிசு பெறும் வாய்ப்பு கிட்டும் என்பதனை மனதில் கொள்ளுங்கள்.


கட்டுரைகளுக்கு தலா ரூபாய்.150/-

கட்டுரை எழுத வேண்டிய வார்த்தை
தமிழ் ஆன்லைன் ஜாப் (Tamil Online Job)
"தமிழ் ஆன்லைஜ் ஜாப்" பற்றியும் அதில் படுகை.காம் (padugai.com)-ன் பங்களிப்பு பற்றி, படுகை வழங்கும் ஆன்லைன் ஜாப் பற்றிய விவரம், படுகை ஆன்லைன் ஜாப்பில் எவ்வாறு எல்லாம் சம்பாதிக்கலாம், தமிழ் ஆன்லைன் ஜாப்பின் வருங்காலம், படுகை ஆன்லைன் ஜாப்பில் பணிபுரிந்ததில் கிடைத்த அனுபவம், படுகை ஆன்லைன் ஜாப் சிறப்பு, இணைய உலகில் கிடைக்கும் ஆன்லைன் ஜாப்போடு படுகை தமிழ் ஆன்லைன் ஜாப் பற்றிய ஒப்பீடு போன்றவற்றைக் கொண்டு நேர்மறையாக கட்டுரை எழுதப்பட வேண்டும். கட்டுரையில் எனது பெயரினை சேர்க்க வேண்டாம்.
எழுதும் கட்டுரைகளை இன்று முதலே நீங்கள் சமர்ப்பிக்கலாம்.

விதிமுறைகள்:
[*] கட்டுரை கொடுக்கப்பட்ட வார்த்தையை மையமாகக் கொண்டே எழுதப்பட வேண்டும்

[*] 60 அடிகளுக்கு குறைவில்லாமல், சொந்த எழுத்து நடையில் இருத்தல் வேண்டும்.
[*] கட்டுரையை இப்பதிவின் பின்னூட்டமாக பதிந்தால் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
[*] இங்கு பதியப்படும் கட்டுரை வேறு தளங்களில் வெளியிடப்பட்டிருத்தல் கூடாது மற்றும் வெளியிடக் கூடாது.
[*] ஒருவர் எழுதிய கட்டுரையைப் போன்றே மற்றொருவர் மீள் படிவம் போன்று நகல் எடுத்து எழுதுதல் கூடாது.
[*] கட்டுரைகள் வாசிப்பதற்கு ஏற்ற சொற்றொடருடனும் பிழையின்றியும் இருக்க வேண்டும்.
[*] ஒருவரிடம் இருந்து அதிகபட்சம் 3 கட்டுரைகள் ஏற்கப்படும். தங்களது 3 கட்டுரைகள் ஏற்கப்படும் வரை மீண்டும் மீண்டும் முயற்சிக்கலாம்.
[*] கட்டுரைக்கான பரிசுத் தொகை, உங்களது படுகை கணக்கில் வரவு(Cash Balance) வைக்கப்படும். அதனை குறைந்தப் பற்றத் தகுதித் தொகையுடன் பெற்றுக் கொள்ளலாம்.
[*] கட்டுரைகளை ஏற்றுக் கொள்வது என்பது படுகை நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
[*] போட்டியின் நடு நடுவே கட்டுரைகள் தணிக்கை செய்யப்பட்டு ஏற்கப்பட்ட கட்டுரைகளின் விவரம் அறிவிக்கப்படும்.
[*] இடையில் விதிமுறைகளை மாற்றியமைக்கவும் பரிசுத் தொகையை மாற்றியமைக்கவும் படுகை நிர்வாகத்திற்கு உரிமை உண்டு என்பதனை மறவாதீர்.
[*] இவ்வாய்ப்பினை என்று வேண்டுமானாலும் அறிவிப்பின்றி நிறுத்தம் செய்யவும் படுகை உரிமம் கொண்டுள்ளது.

:thanks:
அன்புடன் ஆதித்தன்
நாள் : ஜீலை 16 - 2012
[/color][/b]
Image
பரிசு பெற்றக் கட்டுரைகளின் பதிவு முகவரிகள்:

விரைவில்...
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பரிசுத் தொகை ரூ.25000-க்கான கட்டுரை எழுதும் வாய்ப்பு போட்டி

Post by muthulakshmi123 » Wed Jul 18, 2012 5:45 pm

இணையத்தில் வேலை;
கணிணி இண்டர்நெட் கனெக்‌ஷன் எல்லாம் இல்லாத வீடே கிடையாது.கணிணியை இயக்க தெரியாத குடும்ப உறுப்பினர்களையும் இன்று காண்பது அரிது.. குழந்தை வளர்ப்பு, அவர்களின் படிப்பு, மற்றும் கணவரின் வேலை காரணமாக வெளியூர், வெளி நாடு என இடமாற்றத்திற்கு ஆளாகி, வெளியே சென்று முழு நேரம் வேலை செய்ய முடியாத பெண்களுக்கு இணைய தள வேலைகள் ஒரு வரப் பிரசாதம்.

அதிலும், கணிணியை இயக்கத் தெரிந்தாலே போதும்.மெயில் பார்ப்பது, எஸ் எம் எஸ் விளம்பரம் பார்ப்பது இது மாதிரி சின்ன சின்ன வேலைகள் செய்து சம்பாதிக்கலாம். பெரிய தொழில் நுட்ப அறிவு தேவையில்லை..என வரும் வாய்ப்புக்களை காண நேரிடும் பெண்கள் அடையும் ஆனந்த்த்திற்கு அளவேது!!!!!!!!
தாமும் சம்பாதித்து நேரத்தை பயனுள்ளதாக, குடும்பத்திற்கு உபயோகமாக கழிக்க நினைக்கும் பெண்களுக்கு படுகை இணையம் ஓர் ஆதார சுருதியாக இருக்கும் என்றால் மிகையில்லை...


படுகை .காம்:

நட்பு என்னும் வானவில்லில் கடல் தாண்டியும் வண்ணம் தீட்ட முடியும் என உணர்த்திய படுகைக்கு வாழ்த்துக்கள். .

இது போல் ஓர் இணையம்
கண்டதில்லை......

இங்கு போல் அன்பு இதயங்கள்
எங்குமில்லை....
இந்த இணையத்தில் இணைந்தவுடன் எவ்வாறு பணிபுரிய வேண்டும் என்பதை எளிய தமிழில்

டெமோ மூலம் தெளிவுபடுத்துகிறார்கள்.டெமோ வேலை செய்யும் போது ஏற்படும் சந்தேகங்களை

உடனுக்குடன் தீர்த்து வைப்பார்கள்...முந்தைய உறுப்பினர்களும், பதிய உறுப்பினருக்கு வழிகாட்டுவது இத்
தளத்தின் சிறப்பு.

இந்த தள டெமோ பணிகளை செய்யும் போதே ஓர் நிறைவு,நாமும் சம்பாதிக்க முடியும் என்ற ஒரு மன திடமும் ஏற்படும் என்பதில் எள்ள்ளவும் சந்தேகமில்லை.....படுகை உறுப்பினர்கள்:

படுகை உறுப்பினர்கள் இல்லை இல்லை உறவுகள் அனைவரின் அறிமுகத்தை கூற முடியாவிட்டாலும் சிலரது அறிமுகத்தை கூற விரும்புகிறேன்.

எல்லா உறுப்பினர்கள் இடும் பதிவுகளுக்கும்,சந்தேகங்களுக்கும்,உடனுக்குடன் பதிலளித்து ஊக்கப்படுத்தும் ஆணிவேர் ஆதித்தன் சார் அவர்கள்,

தப்பை தப்பென தப்பாமல் கூறும் தம்பி மணி அவர்கள்,

உழைப்பை உழைப்பென பாராமல் வழங்கி மகிழ்வித்த நஸீர் அவர்கள்,

தெளிவான அழகான சிந்தனைகளை கூறும் உமாஜனா அவர்கள்,

நல்லிரவிலும்(பேயே இங்கு கிடையாது என மனதை உறுதி படுத்தி) நல்ல நல்ல பதிவுகளையும் ஊக்க

சக்தியையும் வழங்கும் ராஜா அவர்கள்,

தெளிவான பட தொகுப்புக்கள்,கவிதைகள் ,தொடர் கதைகள் என வழங்கி வரும் அருந்தா அவர்கள்,

சிறுகதைகள், கவிதைகள், விடுகதைகள், என தம்பதி சமேதராக வழங்கி வரும் ராம் ருக்மணி அவர்கள்,

வேலை பளுவுக்கு இடையிலும் பதிவிடும் சுமையா அவர்கள்,

தோழியாக ,அக்காவாக, அறிவுரை கூறும் அம்மாவாக, பாட்டியாகவும் பணியாற்றும் நான்,

இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்....

இத்தகைய அன்பு உறவுகள் உள்ள இணையத்தில் இணையுங்கள்.படுகையும் முன்னேறி தன்

இணையத்தில் இணைந்தவரை இன்பத்தில் ஆழ்த்தட்டும்.

வாழ்த்துக்கள்,

வே.முத்துலெஷ்மி..
குறிப்பு:
படுகை மென்மேலும் வளர ஆணிவேர்(ஆதித்தன் சார்) பூமிக்கடியிலேயே இருக்காமல் ஆலமர

விழுதாக வெளியேறினால் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து...
Last edited by muthulakshmi123 on Fri Jul 20, 2012 6:27 am, edited 1 time in total.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

தமிழ் ஆன்லைன் ஜாப் (Tamil Online Job)

Post by mnsmani » Thu Jul 19, 2012 12:13 pm

தமிழ் ஆன்லைன் ஜாப், இன்றைய நவீன உலகத்தில் அனைவரும் ஏதொ ஒரு துறையில் பணியாற்றிகொண்டிருந்தாலும், தங்களது பொருளாதாரத்தை பெருக்கி கொள்ள பல வழிகளிலும் முயற்சி செய்கின்றனர். இதில் அரசு, தனியார், சுய வேலைவாய்ப்பு என்று பல விஷயங்கள் இருந்தாலும் அனைவரின் எதிர்பார்ப்பு மாதம் ஒன்றுக்கு இப்பொது கிடைக்க கூடிய வருமானத்தை போல இன்னும் ஒரு பங்கு கூடுதலாக கிடைத்தால் நன்றாயிருக்கும். காரணம், வேகமான இந்த உலகத்தில் நாம் அடைய வேண்டிய வசதிகள் நிறைய உள்ளன. நமக்கென்று ஒரு வீடு, ஒரு கார்,இரு சக்கர வாகனம், குளிர்சாதன வசதி, குளிர்களத்தில் ஹீட்டர்,துனி துவைக்கும் இயந்திரம், மிக்சி,மின்விசிரி, சொந்தமாக ஒரு கணனி, இப்படி சொல்லிகொண்டே போகலாம். இது அவரவர் வசதிக்கு தகுந்தார்போல சற்று கூட குறைய இருக்கலாம். ஆனால் அனைவரும் தற்போதுள்ள வாழ்க்கை தரத்தில் இருந்து சற்று மேலே செல்லாவே ஆசைபடுவர். ஒருசிலர் மட்டும் போதும் என்ற மனமே பொன் செய்யும் மனம் என்று இருந்துவிடுவர். அப்படி அவர் இருந்தாலும் அவரின் சுற்றத்தார், மற்றும் குழந்தைகள் அவரிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று அரிக்க துவங்கும் போதுதான் இப்படி ஏதாவது பகுதி நேர வேலை கிடைத்தால் செய்யலாமெ என் என்னி அதற்கேற்றார் போல ஒரு வேலையை தேட முனைவர். அப்ப்டி தேடினாலும் அவர்களுக்கு நேரம் ஒரு பற்றாகுறையாகவே இருக்கும். அரசு வேலையில் கூட சில துறைகளில் ஞாயிரன்றும் பனியாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றால் நம்பூவீர்களா. அப்ப்டி இருக்கும் சூழ்நிலையில் தனியார் துறையை பர்றி சொல்லவே வேண்டாம். காலையில் 7.30 பேருந்தை பிடித்தால் இரவு எப்போது வீட்டுக்கு வருவோம் என்பது அவர்களுக்கே தெரியாது. இது போக மருத்துவ விடுப்பு, உறவினர் வீட்டு விஷேஷம், என்று 2 நாட்களுக்கு மேல் விடுமுறை எடுத்தால் ஊதிய பிடித்தம் வேறு. ஆக இப்படி நமது பொருளாதாரம் என்றைக்கு கீழே விழும் என்று ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் வேலையில் காற்றுள்ள போதே தூற்றி கொள் என்ற பழமொழிக்கேற்ப்ப நமது உடலில் சக்தி இருக்கும் போதே நம்மால் இயன்ற வரை வருமான ஈட்டி, நமது கடமைகளை நமது காலத்திலேயே நிறைவேற்றிவிட்டால் பிற்காலம் நமக்கு சுகமாக இருக்கும். இப்படித்தான் நம் படுகை தம்மை நாடி வரும் அனைவருக்கும் உதவிட காத்திருக்கிறது. பல்வேறு தளங்கள் ப்ல்வெறு வழிகளில் வருமானம் ஈட்டகூடிய வாய்ப்புகளை வழங்குகிறது. அவை எவ்வளவு தூரம் உண்மை என்பது நாம் அதில் சேர்ந்து பின் பாதிக்கபடும் போதுதான் தெரிகிறது. ஆனால் இனையத்தில் வேலை செய்ய வெண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்களுக்கு ஒரு கேள்வி? இனையத்தில் எந்த மாதிரியான வேலை உங்களுக்கு வேண்டும். அதில் எவ்வளவு தூரம் உங்களுக்கு போதிய பயிற்சி உள்ளது என்றல் பதில் ஒரு ? தான். காரன்ம் எந்த பயிற்சியும் இல்லாமல், 5000 ரூபாய் பனம் கட்டிவிட்டு மாதம் தரபடுகின்ற 500 விளம்பரங்களை பார்த்தால் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 2000 வரும் என்று நம்பி பனம் கட்டுவது. அல்லது முன் செலுத்து தொகையாக ரூபாய் 10000 செலுத்தினால் மாதம் ஒன்றுக்கு ரூபாம் 1000 வீதம் 60 மாதங்களும் பின்னர் 60வது மாத்தில் நீங்கள் செலுத்திய 10000 திருப்பி கொடுக்கபடும் என்ற விளம்பரங்களை நம்பி பனம் செலுத்துவது, இது போக டேட்டா என்றி வேலை தருகிறோம் என்று சொல்லி அதற்க்கு காப்பீட்டு தொகையாக 2500 முதல் 10000 வரை பெற்று கொண்டு அவர்கள் தரும் 60 பக்கங்களை முடித்து கொடுத்துவிட்டு, பக்கத்திற்க்கு 40 ரூபாய் வீதம் 20000 ரூபயை எதிர்பார்த்து கொண்டிருக்கும் போது அவர்களிடமிருந்து ஒரு பதில் வரும். உங்கள் டேட்டா வேலைகள் 96% Accuracy கீழ் இருப்பதால் உங்களுக்கு பனம் தர இயலாது. மீண்டும் ஒருமுறை எங்களது மாத்ரி டேட்டா வேலைகளை செய்து பழகிவிட்டு மீண்டும் நாங்கள் தரும் வேலைகளை செய்து தருங்கள் என்று. நீங்கள் எத்துனை முறை முயற்சித்தாலும் இதேதான் பதில். ஆக இப்படியான ஏமற்று வேலைகளில் பாதிக்கபட்ட ஒருவெர் இனையம் என்றாலே வேண்டாம் என்று சொல்லும் அளவிற்க்கு வந்துவிடுவர். நல்லது. இப்படியான இனைய உலகில் நம் தமிழில் ஒரு தளம் உங்களுக்கு தேவையான அனத்து பயிற்சிகளையும் கொடுத்து, இதில் உள்ள ஒரு விசயத்தை எடுத்து கொண்டு உங்களை இனையத்தில் இனைத்து கொண்டால் நீங்கள் எதிர்பார்க்கும் இதர வருவாய் கண்டிப்பாக ஈட்டலாம். எப்படி, அதற்க்கு படுகை பயிற்சி பணிகளை பாருங்கள். சாதரனமாக இனையத்தில் வருமானம் ஈட்டகூடியதில் முதன்மையாக விளங்குவது Google Adsense. அதற்க்கு உங்களுக்கு ஒரு தளம் வேண்டும். உங்கள் தளத்தில் என்னென்ன விசயங்கள் இருக்க வேண்டும். அதை ச்ப்படி அமைப்பப்து என்பது பற்றி படுகை பயிற்சி பனிகள் உங்களுக்கு கற்று தருகிறது. 1 முதல் 5 வரை உள்ள பயிற்சிகள் உங்கள் தளத்தில் உங்களை பற்றி உள்ள செய்திகள். (About Us). 6,7,8 பயிற்சிகள் உங்கள் தளத்தில் நீங்கள் வழ்ங்கும் கட்டுரைகள் மற்றும் பின்னுட்டங்கள் எப்படி என்று. 9 பனி உங்கள் தளத்தில் உங்கள் புகைபடங்கள், மற்றும் நீங்கள் ரசித்த, பார்த்த, படங்களை எப்படி இனைப்பது, கானொளி காட்சி, இனைப்பது பற்றியும்,10வது பனி உங்கள் தளத்தை எப்படி விளம்பர படுத்துவது என்பது பற்றி, 11பனி தமிழ் மற்றும் ஆங்கில தொலைகாட்சிகளில் செய்தி பிரிவில் இடம்பெறும் சற்றுமுன் செயதிகள். (இது போன்ற ஒரு தளம் நீங்கள் அமைத்தால் பார்வையாளர்கள் கூட்டம் உங்கள் தளத்துக்கு அதிகரிக்கும்)12, Reffereal Marketing என்று சொல்லபடுகின்ற நம் தளத்துக்கு வரும் வாடிக்கையாளர்களையே மற்றும் ஒருவரை நம் தளத்தை காண சிபரிசு செய்ய சொல்தல், 13,14 மற்றும் 15 முறையே டேட்டா எண்ட்ரி ஜாப், சர்வே ஜாப் மற்றும் சமையல் கலை பற்றியது. உங்கள் தளம் ஏதாவது ஒரு கருபொருளை கொண்டே அமைய வேண்டும். அதற்காகதான் இந்த 3 பனிகளும். இதில் உங்களுக்கு எது விருப்பமோ அதை உங்கள் தளத்தில் செயல்படுத்தலாம். 16வது பணி உங்கள் தளத்தை பறிய ஒரு வரி செய்தி. அதாவது திரைபடங்கள் எடுப்பதற்க்கு முன் One Line Story என்று சொல்வார்களே அதுபோல,இதை பல பாரங்களில் கீழே Signature பகுதியில் உங்கள் தளத்தை விளம்பரபடுத்தலாம், 17வது பணி 12 வது பனியை போன்றதுதான், இதன் காரனமாக 18 வது பணியில் உங்களுக்கு வருவாய் கிடைக்க வழிசெய்து கொள்ளலாம். 19வது பனி உங்களுக்கு மிகவும் பயனுள்ளது. உங்களுக்கு தேவையான கனணை மற்றும் இனைய சம்பந்தமான வேலைகளை நீங்கள் கோரலாம் அல்லது வேரொருவர் கொறியதை நீங்கள் முடித்து கொடுத்து வருவாய் ஈட்டலாம். 20 பனி உங்கள் தளத்தை Search Engine Optimization செய்வது எவ்வாறு. இது மிகவும் முக்கியமான ஒன்று. உங்கள் தளத்தை SEO செய்தால்தான் பார்வையாளர்கள் உங்கள் தளத்துக்கு வருவார்கள். இல்லை என்றால் 3 மில்லியன் தளங்களுடன் உங்களதும் ஒரு ஓரமாக போய்விடு. கவனம் தேவை. ஆக இதன் படி வழிநடந்து உங்களுக்கென்று ஒரு தளம் வடிவமைத்து அதில் கூகுள் விளம்பரங்கலை போட்டு, உங்கள் தளத்தை நன்கு விளம்பரபடுத்தினால் கண்டிப்பாக மாதம் ஒன்றுக்கு 50000 ரூபாயை பெற்று விடலாம் என்பது உறுதி. அதற்க்கு தேவை. கொஞ்சம் பொறுமை, கொஞ்சம் புரிதல், கொஞ்சம் நேரம் மட்டுமே. இது போக உங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு படுகை வாசகர்கள் உடனுக்குடன் பதில் தர சித்தமாக இருக்கிறார்கள். இது படுகையின் பலம். தனி மரம் தோப்பாகாது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும் என்பது போல தனியாக கிடந்து அல்லாடுவதை விட இதுபோல் ஒருவருக்கொருவர் தமது கருத்துகளையும் , சந்தேகங்களையும் பரைமறி கொள்ளும் போது நமது நோக்காம் மிக விரைவில் ஈடேருவதுடன் மன உலைச்சளையும் குறைக்கிறது. இது போன்ற தலம் தமிழில் பல இருந்தாலும் பருகை போல பக்கத்தில் இருந்து சொல்லி கொடுப்பது போல எந்த தளமும் செய்வதில்லை என்பதை நீங்கள் பல தளங்களையும் பார்த்துவிட்டு வந்தே சொல்லுங்கள். :thanks:

அன்புடன்
மன்னை மனிவண்ணன்.
velsingh
Posts: 108
Joined: Sat Jun 09, 2012 5:16 pm
Cash on hand: Locked

Re: பரிசுத் தொகை ரூ.25000-க்கான கட்டுரை எழுதும் வாய்ப்பு போட்டி

Post by velsingh » Sun Jul 29, 2012 10:38 am

ஆன்லைன் ஜாப்:

:ros: உலகத்தில் எத்தனை எத்தனையோ ஆன்லைன் ஜாப்புகள் குவிந்து கிடக்கின்றன.படித்து கொண்டு இருப்பவர்களும் சரி படித்து

முடித்தவர்களும் சரி, படித்து கொண்டு இருப்பவர்கள் நாம் படித்து கொண்டிருக்கும் போதே எதாவது வேலை கிடைக்குமா என்று இனையதளத்தில்

தேடி அழைகின்றனர் ஆனால் அப்படியே வேலை கிடைத்தாலும் அது நமக்கு ஒத்து வருமா? அதனால் என்ன பயன்? என்ன விளைவு? என்பதை

யோசித்து பார்ப்பது கிடையாது .நமக்கு ஆன்லைனில் வேலை கிடைத்துவிட்டது என்ற ஒரெ சந்தோஸம் தான் அவர்கள் மனதில் பதிந்து இருக்கும்.

ஆன்லைன் ஜாப் என்று கூறி நிறைய மோசடிகளும் நடந்துள்ளன என்பது யாருக்குமே தெரியாத ஒன்று.சொல்லப் போனால் இதில் அதிகம்

ஏமாந்தவர்கள் படித்தவர்களே! படித்தவர்கள் தங்களின் படிப்பிற்கேற்றவாரு வேலை தேடுகின்றனர். தமிழில் வேலை கிடைத்தால் அதை

விரும்புவது இல்லை காரணம் அவர்கள் அதிகம் படித்து இருப்பதுதான். நம்ம இவ்வளவு பெரிய படிப்பு படிச்சிருக்கிறோம் நாம தமிழ்ல வேலை

பார்க்கிறதானு நினைக்கின்றனர்.தமிழ்நாட்டில் தான் நாம் பிறந்துள்ளோம் என்பதை மறந்துவிடுகின்றனர் அவர்கள். என்ன படித்தால் என்ன நமக்கு

வேலைகிடைத்தால் போதும். நமக்கு கிடைக்க கூடிய வேலையை விட்டுவிட்டு இல்லாத்தை தேடி அலைய கூடாது. இந்த காலக்கட்டதில் தமிழ்

ஆன்லைன் ஜாப் என்பது அழிந்து கொண்டே போகிறது. இதை தடுக்கும் பொருட்டு படுகை.காம் என்ற இனையதளத்தை ஆரம்பித்து உள்ளார்கள்.

இவர்களது நோக்கமே ஆங்கிலத்தில் வேலை பார்ப்பது கடினமான விஸயம் என்பதால் தமிழில் வேலை பார்த்து பயன் பெரவேண்டும் என்பதே. :ros:

படுகை.காம்-ன் பங்களிப்பு:


:news: படுகை.காம் மக்கள் எளியமுறையில் வேலையை கற்றுக்கொண்டு அதில் பயன் பெறவேண்டும்என்ற ஒரெ

நோக்கத்தோடு பாடுபட்டுக்கொன்று இருக்கின்றனர்.அதுமட்டும் இல்லாமல் நமக்கு வேலை தெரியாவிட்டாலும் அவர்களே கற்று கொடுக்கின்றனர்.

இதற்க்கு மேல் நமக்கு என்ன வேண்டும்? :news:படுகை வழங்கும் ஆன்லைன் ஜாப்:


:lis: படுகை.காம் ஆன்லைன் ஜாப் வழங்குகிறது ஒரு எளிமையான வேலை. முதலில் நீங்கள் கோல்டுமெம்பர்

ஆகவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. ரிஜிஸ்டர் செய்து கொண்டாலே போதும். அதன் பின்னர் படுகை.காம் டெமோ ஒர்க் வேலை

கொடுக்கின்றது இதன் நோக்கம் நீங்கள் செய்யப்போகும் வேலையை பற்றிய பயிற்சிப்பணி. இதன் மூலம் நாம் என்ன வேலை செய்யபோகிறோம்

என்பதை விளக்கமாக கொடுத்துள்ளனர்.மொத்தம் இருபது டெமோ ஒர்க் உள்ளது, இவை அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற கட்டாயம்

இல்லை, இந்த டெமோ ஒர்க் உங்களை வேலை செய்வதற்க்காக கொடுக்கப்பட்ட பயிற்ச்சி பணிதான். உங்களுக்கு நன்றாக தெரியும் என்றால் நீங்கள்

நேரடியாக வேலை பார்க்க ஆரம்பிக்க வேண்டியது தான்.அதற்க்கு முதலில் கோல்டு மெம்பர் ஆகவேண்டும் .இதன் பலன் என்ன தெரியுமா நீங்கள்

பணம் சம்பாதிப்பதற்கு இதுதான் மூலக்காரணம் .அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு பதிவிற்கு ஒரு ரூபாய் என்ற அடிப்படையில் பதிவு பலன்

ஊக்கத்தொகையும், ஆன்லைன் ஜாப் பற்றிய கட்டுரைகளுக்கும் 5 ரூபாயும், கோல்டு உறுபினர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் 50%(ரூ.500)

விரைவு கமிஷன் என சோல்லிக்கொண்டே போகலாம். :lis:


படுகையில் எப்படி பணம் சம்பாதிப்பது:


:rock: நீங்கள் கோல்டு மெம்பர் ஆனதில் இருந்தே நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு பதிவிற்கும் பலன் கிடைத்து

கொண்டெ இருக்கும்.மேலும் ஒரு முக்கியவானவற்றை மனத்தில் கொள்ள வேண்டும் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு பதிவும் வேரு தளங்களிலோ

செய்திதாளிலோ வந்திருக்க கூடாது. மேலும் படுகை.காமில் கவிதை ஓடை,சிறுகதை மற்றும் தொடர்கதைகள்,சின்னச் சின்ன செய்திகள்,சின்னஞ்

சிறு கட்டுரைகள்,ஆன்மிகப் படுகை எதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து தங்களால் முடிந்த செய்தியை பதிவு செய்தால் போதும்.தினமும் ஒருமணி

நேர வேலைதான்.அதுமட்டும் இல்லாமல் மற்ற நன்பர்கள் அனுப்பும் செய்தியை படித்து அவர்களுக்கு பின்னூடம் இட்டாலும் அதற்கும் பலன்

உண்டு என்பது உண்மை. :rock:


தமிழ் ஆன்லைன் ஜாப்பின் வருங்காலம்:


:great: தமிழில் வேலை பார்த்து மக்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே படுகையின் நோக்கம். இதற்க்கு

தேவையானவை ஒரு கணினியுடன் கூடுய நெட் வசதியும் ஒரு மணிநேரம் செலவழித்தால் போதும்.அதுமட்டும் இல்லாமல் இனி வரும்

காலத்தில் படுகை.காம் என்னும் நல்ல திட்டங்களையும் கொண்டுவரும் என்பதே உண்மை. நல்ல திட்டங்கள் கொண்டு வருவதோடு மக்கள்

நல்லமுறையில் பணம் சம்பாதிக்கவும் வழிவகுக்கும். :great:படுகை ஆன்லைன் ஜாப்பில் பணிபுரிந்ததில் கிடைத்த அனுபவம்:


:clab: படுகையில் பணிபுரிவதற்கு நான் மிகவும் சந்தோஸப்படுகிறேன். படுகையின் மூலம் நிறைய கற்று

கொண்டேன்.படுகையில் பணம் சம்பாதிப்பதோடு நல்ல நன்பர்களும் உள்ளனர். அதுமட்டும் இல்லாமல் எந்த உதவி வேண்டுமானாலும் தாராளமாக

கேட்கலாம்.படுகையில் வேலை பார்க்கும் அனைவரும் பணம் சம்பாதிப்பது உறுதி என்பதை மனப்பூர்வமாக நம்புகிறேன் :clab:
என்றும் அன்புடன் ,


சி.வேல்சிங். :thanks:
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked

Re: பரிசுத் தொகை ரூ.25000-க்கான கட்டுரை எழுதும் வாய்ப்பு போட்டி

Post by rajathiraja » Mon Jul 30, 2012 10:57 pm

'படுகையினால் ஏற்பட்ட பலன்கள்' பற்றி என்னிடம் எழுத சொல்லி இருந்தால் பக்கம் பக்கமா எழுதி இருப்பேன். ஆனால் தமிழ் ஆன்லைஜ் ஜாப் பற்றி கட்டுரை எழுதத சொல்லிட்டீங்களே!
நான் என்ன பண்ணுவேன்! யாரை கேட்பேன்! சொக்கா!
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: பரிசுத் தொகை ரூ.25000-க்கான கட்டுரை எழுதும் வாய்ப்பு போட்டி

Post by சாந்தி » Tue Jul 31, 2012 2:03 pm

Image
முன்னுரை:-

இந்தக் கட்டுரையில், முதன் முதலில் தொடங்கிய “தமிழ் ஆன்லைன் ஜாப் தளம்”...... “படுகை.காம்” சிறப்பு பற்றி விளக்கப் போகிறேன். இந்தத் தளத்தை ஆரம்பித்தவர் திரு.செல்வ ஆதித்தன் என்பவர். “ஆதி” என்றால் “முதல்” என்று "பொருள்". “செல்வ” என்றால் “பணம்” என்று பொருள். முதன் முதலில் தமிழில் ஒரு ஆன்லைன் ஜாப் தளத்தை அமைத்து பணம் சம்பாதிக்கும் வழியைக் கற்றுக் கொடுப்பவர் என்று அர்த்தம்.

சிப்பிக்குள் முத்து:-

நான் ஒரு தனியார் நிறுவனத்தில் செய்து கொண்டிருந்த வேலையிருந்து நின்றவுடன் பைத்தியம் பிடித்ததது போல் இருந்தது. என் குழந்தையையும் கவனித்துக் கொண்டு, வீட்டு வேலைகளையும் செய்து கொண்டு,வீட்டிலிருந்தே எப்படி சம்பாரிக்கலாம் என்று தீவிரமாக யோசித்தேன். வீட்டில் இணையத்துடன் கணிணியும் இருந்தது. வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்யலாம் என்று “கூகுள்” மூலம் தீவிரமாக அலசினேன். தற்செயலாக“படுகை.காம்” கண்ணில்பட்டது. உடனே என் பெயரை பதிவு செய்து உறுப்பினர் ஆனேன்.. நான் இந்தத் தளத்தில் உறுப்பினராகி இருபத்தி ஏழு நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.

சிறப்பு அம்சங்கள்:-

*முதலில் வேலைகளை எப்படி செய்ய வேண்டும் என்று டெமோ மூலம் ஆன்லைனிலேயே தமிழ் மொழியில் கற்றுக் கொடுக்கிறார்கள். மற்ற தளங்களில் எதுவும் கற்றுத் தர மாட்டார்கள்.

*ஆங்கிலம் என்றால் இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும்.பெரிய எழுத்து, சின்ன எழுத்து என்று கவனமாக தட்டச்சு செய்ய வேண்டும். தமிழில் பேச்சு நடையிலேயே எழுத்துக்களைப் பதியலாம்.

*ஆங்கிலத்தில் பதிவதற்கு கட்டாயம் ஆங்கில தட்டச்சு முறை தெரிந்திருத்தல் அவசியம். தமிழில் அவசியம் இல்லை. தமிழ் மென்பொருளை இத்தளத்திலிருந்தே இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த மென்பொருளை எப்படி பதிவிறக்கம் செய்வது, எப்படி கையாள்வது என்ற முறையையும் கற்றுத் தருகிறார்கள்.

* படுகை.காம்-ல் கதை,கவிதை,கட்டுரை,சிரிப்பு,சமையல், சுயதொழில்,சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்கள்,ஆடியோ,வீடியோ editing என பல தரப்பட்ட விபரங்களைப் பதியலாம். எல்லாம் சொந்த பதிப்புகளாகவே இருக்க வேண்டும்.

* ஒவ்வொரு பதிவுகளையும் ஆராய்ந்து.... மிகவும் நன்றாக இருக்கும் பதிவுகளுக்கு சன்மானம் தருகிறார்கள்.

* போட்டிகளும் நடத்துகிறார்கள். நன்றாக செய்பவர்களுக்கு பணப்பரிசும் தருகிறார்கள்.

* படுகை.காம்-ல் கோல்டு உறுப்பினர் ஆவதற்கு ரூ.1000 கட்டினால் போதும். ஆங்கில ஆன்லைனில் பெரிய தொகை கட்ட வேண்டும். உத்திரவாதமும் கிடையாது.

* நீங்கள் புதிதாக படுகையில் ஒருவரை கோல்டு உறுப்பினராக சேர்த்துவிட்டால்...... உங்களுக்கு 50% கமிஷன் (அதாவது ரூ.500) கிடைக்கும். எத்தனை உறுப்பினர்களை வேண்டுமானாலும் கோல்டு உறுப்பினராக அறிமுகபடுத்தலாம். அதற்கேற்ற கமிஷனைப் பெற்றுக் கொள்ளலாம்.

* மேலும், கோல்டன் உறுப்பினர் ஆக இருந்தால் ஆன்லைனிலேயே "போட்டோ ஷாப்"-பும், திரைப்படங்களில் வரும் கிரஃபிக்ஸ் மூலம் செய்யும் வித்தைகளை....படிப்படியாக தமிழில் கற்றுத் தருகிறார்கள். 1000 ரூபாய்க்கு நாம் கற்றுக் கொள்வது மிகவும் அதிகமல்லவா?

நான் "AVID-NON-LINEAR EDITING" படிப்பதற்கு 15000 ரூபாய் செலவு செய்தேன். அதுவும் மறைமலைநகரிலிருந்து கோடம்பாக்கம் சென்று படித்தேன்.
எவ்வளவு அலைச்சல்.... எவ்வளவு பணம்! யோசித்துப் பாருங்கள்

* இது தவிர டெமோ வேலையில் சந்தேகம் வந்தாலும் சரி, மென்பொருள் சம்பந்தமான சந்தேகங்களானாலும் சரி, உடனே நிவர்த்தி செய்யும்
ஒரே தளம் படுகை.காம் மட்டும்தான் என்பதில் சந்தேகமில்லை.

* ஆன்லைன் பள்ளிக்கூடம் வாயிலாக ஆன்லைனிலேயே ஆசிரியர் ஆகும் வாய்ப்பும் இருக்கிறது

முடிவுரை:-

எல்லாவிதமான பயிற்சிகளையும் அளித்து, சம்பாதிக்கும் முறைகளையும் கற்றுக் கொடுத்து, நமக்குள் இருக்கும் திறமைகளையும் வெளிக்
கொணர்ந்து, நம்மை வாழ்வில் முன்னேற வைக்கும் ஒரே தமிழ் ஆன்லைன் ஜாப் தளமான படுகை.காம் வந்து பாருங்கள். வேறு எந்தத் தளத்தையும் எட்டிகூட பார்க்கமாட்டீர்கள். மேலும் தமிழை வளர்ப்பதற்கு இத்தளம் மிகவும் உதவியாக இருக்கும். இந்தத் தளத்தைப் பற்றி மேலும் விபரங்கள் அறிய WWW.PADUGAI.COM என்ற வலை தளத்திற்குள் சென்று பார்க்கலாம். இந்திய நாட்டுக்கு மும்பை எப்படி ஒரு நுழைவு வாயிலாக இருக்கிறதோ....... அதைப் போல் படுகை.காம்.......தமிழ் ஆன்லைன் ஜாப் செய்பவர்களுக்கு ஒரு நுழைவு வாயிலாக விளங்குகிறது.

இத்தளம் எல்லோர்க்கும் ஓர் வரப்பிரசாதம் என்பதில் துளி கூட ஐயமில்லை

Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12036
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பரிசுத் தொகை ரூ.25000-க்கான கட்டுரை எழுதும் வாய்ப்பு போட

Post by ஆதித்தன் » Sat Sep 01, 2012 7:31 pm

பரிசுப் போட்டியில் கலந்து கொண்டு கட்டுரைகளைச் சமர்ப்பித்த, லெட்சுமியம்மா, மணி அண்ணன், வேல்சிங்க் மற்றும் ஷான்பூக்கு என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதைப்போல், அனைவரது கட்டுரைகளும் ஏற்கப்பட்டது என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Locked

Return to “படுகை பரிசுப் போட்டி மையம்.”