முடிவுற்ற பரிசுப் போட்டி ரூ.1000/- : தைப் பொங்கல் திருநாள் படைப்புகள் - தமிழர் பொங்கல் பண்டிகை ஒர் பார்வை

படுகையில் நடைபெறும் பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் ஓட்டெடுப்பினை நடத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்துவது மற்றும் அறிவிக்கப்பட போட்டிப் பதிவுகளை அத்தலைப் பதிவுடன் பின்னூட்டமாகச் செய்ய வேண்டிய மையம்.
Forum rules
உங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.
Locked
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12036
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

முடிவுற்ற பரிசுப் போட்டி ரூ.1000/- : தைப் பொங்கல் திருநாள் படைப்புகள் - தமிழர் பொங்கல் பண்டிகை ஒர் பார்வை

Post by ஆதித்தன் » Sun Jul 15, 2012 7:55 pm

தைப் பொங்கல் திருநாள் படைப்புகள் - 2012

தைப் பொங்கல் திருநாளை வரவேற்கும் விதமான, வாழ்த்து படங்கள், வாழ்த்து கவிதை, பொங்கல் கட்டுரைகள், பொங்கல் திருநாள் வரவேற்பு விடியோ, பொங்கல் அனிமேஷன், பொங்கல் பண்டிகை சிறப்பு இமேஜ்.
நாளை வரயிருக்கும் தமிழர் பண்டிகையாம் தைப் பொங்கல் திருநாள்-ஐ வரவேற்கும் விதமாக உங்கள் பார்வையில் கட்டுரையாகவோ, கதையாகவோ, கவிதையாகவோ, நகைச்சுவை துணுக்குத் தொகுப்பாகவோ, அல்லது அதனை வெளிப்படுத்தும் படங்களாகவோ, விடீயோவாகவோ, மற்றும் சிறப்புச் செய்தியாகவோ என எப்படி வேண்டும் என்றாலும், உங்கள் சிறப்புத் திறமைகளைக் கொண்டு, படைப்பினை சிறப்பாக செய்து இந்நூலின் பின்னூட்டப் பதிவாக பரிசுப் போட்டிக்கான ஆக்கங்களாக கொடுக்க வேண்டும்.

மேலும், எப்பொழுதும் போல.. எது செய்தாலும் முதல் கிரிடிட் படுகைக்கு வழங்க வேண்டும் என்பது கட்டாய விதிமுறை. அதாவது, கவிதை ஆனாலும் சரி கட்டுரை ஆனாலும் சரி... அது உங்களுடைய சொந்த ஆக்கமாய் இருக்க வேண்டும். அதனை முதல் முதலில் படுகையில் தான் பதிந்திருக்க வேண்டும். படங்கள் மற்றும் வீடியோ எனில் சொந்தமாக செய்து, ப்ளாக்கர்/யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டாலும் அதில் படுகை.காம் என்ற வார்த்தையை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.
[td=200,#008000][b][center][color=#FFFF00]பரிசு விவரம்:[/color] [color=#FFFFFF]முதல் பரிசு : ரூபாய். 1000 2 வது பரிசு : 5000 பாயிண்ட்ஸ்[/color][/center][/b][/td]
[td=200,#FF0000][b][color=#FFFFFF] [center][size=150]போட்டி ஆரம்ப நாள் : 4.1.2012 ஓட்டெடுப்பு ஆரம்ப நாள்: 19.1.2012 போட்டியின் கடைசி நாள்: 20.1.2012 ஓட்டெடுப்பின் கடைசி நாள்: 23.1.2012 வெற்றியாளர்கள் அறிவிப்பு: 24.1. 2012 [/size][/center] [/color][/b][/td]
[td=200,#008000][b][center][color=#FFFF00][size=150][u]வெற்றியாளர்கள் விவரம்[/u][/size][/color] [color=#FFFFFF]முதல் பரிசு : ரூபாய். 1000 - [url=http://www.padukai.com/member2357.html]Aruntha[/url] : >>> [img]http://www.padukai.com/images/ranks/awardflowgold.png[/img] 2 வது பரிசு : 5000 பாயிண்ட்ஸ் - [url=http://www.padukai.com/member3315.html]sumayha[/url] : >>> [img]http://www.padukai.com/images/ranks/awardflowsilver.png[/img][/color] =thanks[/center][/b][/td]

பரிசுப் போட்டியில் வென்ற நபர்களுக்கு என் வாழ்த்துகள்.

போட்டிக்களத்தினை வேட்பாளராக அழங்கரித்த நபர்களும், வரும் நாளில் வெற்றியாளர்களாக மின்ன என் வாழ்த்துகள்.

Image


போட்டிக்கான நிபந்தனைகள்:

1. போட்டியின் வெற்றியாளர்கள் ஓட்டெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்க படுவார்கள். (படுகை பரிசுப்போட்டி விதிமுறைகள் அடங்கும்) மேலும், வாக்கு அளிப்பவர்கள் கண்டிப்பாக இங்கு ஒர் பின்னூட்டப் பதிவினையாவது கொடுத்துச் செல்ல வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

2. குறைந்தது 3 சிறந்த சொந்த ஆக்கங்களை போட்டிக்காக செய்து பின்னூட்டமாக கொடுத்தவர்கள் மட்டுமே வேட்பாளாராக தேர்ந்தெடுக்கப்படுவர். 15 க்கும் மேற்பட்டவர்கள் சிறந்த ஆக்கங்களை செய்தால், அதில் சிறப்பாக செய்தவர்களில் 15 பேர் மட்டுமே வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டியின் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படுவர்.

3. இது மிக முக்கியமான நிபந்தனை. அனைவரும் தனது சொந்த ஆக்கத்தை மட்டுமே இங்கு பதிய வேண்டும். மற்றவர்களின் பதிப்பையோ, பிற தளங்களில் வெளியானவற்றையோ இங்கு பதியக்கூடாது. மீறி பதிந்தால் அவர் போட்டியின் வேட்பாளர் தகுதிக்கு தேர்ந்தெடுக்கப்படமாட்டார். [-X

4. போட்டியின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் மாற்றி அமைக்கும் அதிகாரம் போட்டி அமைப்பாளருக்கும், படுகை நிர்வாகத்திற்கும் உண்டு.

விளக்கமாக:

போட்டி தொடங்கிய நாள் : 4.1.2012
போட்டிக்காக நீங்கள் செய்யும் அனைத்து ஆக்கங்களையும் இன்று முதல் இப்பதிவின் பின்னூட்டப் பதிவாக கொடுத்து வரலாம்.

போட்டி நிறைவு நாள் : 20.2.2012
ஒருவர் எத்தனை கவிதைகள், கட்டுரைகள், இமேஜ்கள் மற்றும் வீடியோ என செய்யும் ஆக்கங்களை அனைத்தையும் ஒவ்வொன்றாய் 31 ஆம் தேதிக்குள் பின்னூட்டமாக கொடுத்திட வேண்டும்.

போட்டிக்கான ஓட்டெடுப்பு தொடங்கும் நாள் : 19.1.2012

மேலும் இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் 19 ஆம் தேதிக்கு முன்னர் 3 சிறந்த சொந்த ஆக்கத்தையாவது செய்திருக்க வேண்டும், அதற்கு பின்னர் கலந்து கொள்பவர்கள் ஓட்டெடிப்பில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள். மேலும், ஓட்டெடுப்பிற்கு சிறந்த ஆக்கங்களை கொடுக்கும் 15 நபர்களே ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். அதற்கும் மேலானவர்கள் 3க்கும் மேற்ப்பட்ட சிறந்த சொந்த ஆக்கத்தினை செய்திருந்தால் 15 நபர்கள் என்பதில் விதிமுறை தளர்வு இருக்கலாம். ஆனால், அர்த்தமற்ற மொக்கை பதிவுகள் போட்டிப் பதிவாய் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும், வாக்கு அளிக்கும் உரிமை 50 பதிவுகளைக் கடந்து வாக்குரிமைப் பெற்ற Voters, Gold Members, Private Friends, Contributors மற்றும் படுகை முக்கிய அங்கத்தினர்களுக்கு மட்டுமே உண்டு.

போட்டி ஓட்டெடுப்பு நிறைவு நாள் : 23.1.2012
போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அதிக வாக்குகளை பெறுபவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். மேலும் வாக்கெடுப்பு , இந்த தேதியின் 24 மணி நேரத்தில் எந்த நேரத்திலும் நிறுத்தப்படலாம், அது நிர்வாகத்தின் உரிமை.


வெற்றியாளர் அறிவிப்பு : 24.1.2012

ஓட்டெடுப்பினை வெளிப்படையாக நடத்துவதன் மூலம், வெற்றியாளரை 23 ஆம் தேதியே அறிந்தாலும்.... கள்ள ஓட்டுக்கள் விழுந்திருக்கலாம் என்ற கருத்து ஏற்படின், வோட்டெடுப்பை மறுபரீசிலனைக்கு உட்படுத்தியப் பின்னர் சரியான வெற்றியாளரை அறிவிக்கவே ஒர் நாள் தாமத அறிவிப்பு.

போட்டியின் வெற்றியாளர்க்கு பரிசுப் பணம் மூன்று வங்கி வேலை நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும். வங்கி கணக்கு இல்லாதவர்க்கு காசோலையாகவே அல்லது வெஸ்டர்ன் மணி ட்ரான்ஸ்பர் வாயிலாகவோ பரிசுப் பணம் வழங்கப்படும்.

=====================================================
:!! :!! :!! :!!
போட்டி களத்தின் படைப்பில் சில உங்கள் பார்வைக்காக!!!

:s_thumbsup :s_thumbsup
===========================================

சிறப்புக் கட்டுரை

எங்கே செல்லும் இந்த பாதை?

மாறிவரும் பொங்கல் கொண்டாட்டம் எனும் தலைப்பில் நான் முன்னர் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அதில் இன, மத, கலப்பற்ற தூய்மையான திருநாளாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டு வந்த பொங்கல் திருநாள் நாளடைவில் சூரியனையும் மாடுகளையும் வழிபடும் இந்து மத வழிபாடாகவே மாறிவிட்டதை சுட்டிக்காட்டி, அவை மாற வேண்டும், தமிழர்கள் என்ற ஒரே பார்வையில் அனைத்து சமுதாயமும் ஒன்றிணைந்து அதை கொண்டாட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன்.

அயல்நாட்டு கலாச்சாரம் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் புகுந்ததன் காரணமாகவே நமது பண்பாடும் கலாச்சாரமும் மங்கி மறைந்து வருகின்றன. படுகை நண்பர்கள் குறிப்பிடுவது போல, தமிழகத்தில் பொங்கல் பண்டிகை என்று ஒன்று இருந்தது, அது இப்படித்தான் இருந்தது என்று பழைய படங்களை காண்பித்து நமது குழந்தைகளுக்கு சொல்லும் நிலை விரைவிலேயே ஏற்படும் என்றே தோன்றுகிறது.
காரணம் என்னவெனில், இந்த வருட பொங்கல் பண்டிகையின் போது டாஸ்மாக் மதுக்கடைகளில் 276 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்ததாக நாளிதழ்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அயல்நாட்டு கலாச்சாரமான புதுவருட கொண்டாட்டத்திலும் கள்ளக்காதலர் தினத்திலும் கோடி கோடியாக மது விற்பனை செய்யப்படுவதும் ஆபாசம், கற்பழிப்புகள், கொலைகள் நடைபெறுவதும் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.
http://i1119.photobucket.com/albums/k62 ... on84-2.jpg[/fi]ஆனால் பொங்கலுக்கும் மதுவிற்கும் என்ன சம்பந்தம். சாதாரண நாட்களில் மது அருந்துபவன் கூட பொங்கல் நாட்களில் மனைவியுடன், குழந்தைகளுடன், நண்பர்களுடன், ஊர் மக்களுடன் பண்புடனும் மகிழ்ச்சியுடனும் நடப்பதையே விரும்புவான். குடித்து கும்மாளமிட்டு சண்டை சச்சரவுகளை ஏற்படுத்துவதையோ வீதியில் வீழ்ந்து கிடப்பதையோ அவன் விரும்பமாட்டான். ஆனால் தன்மான தமிழன் இன்று பொங்கல் திருநாளிலும் மதுக்கடையே கதி எனக் கிடக்கின்றான். நல்லதொரு நாளாம் பொங்கல் திருநாளில் குழந்தைகளுடன் தனது நேரத்தை செலவிட வேண்டிய தந்தையும் தனயனும் மதுக்கடையில் வீழ்ந்து கிடப்பதை எந்த தாய்தான் பொறுத்துக் கொள்வாள்!
http://i1119.photobucket.com/albums/k62 ... on85-1.jpg[/fi]பெண்களுக்கும் சமஉரிமை

இதற்கு மிகமுக்கிய காரணம் அரசும் அரசியல்வாதிகளும் தான் என்பதை மறுப்பதற்கில்லை. மக்களுக்கு இலவசங்களை வழங்க வேண்டுமென்றால் மதுக்கடையை தொடர்ந்தாலே அது சாத்தியமாகும் என்று பொய்க் காரணங்களை கூறி தங்களது வாழ்வை வளமாக்கிக் கொள்கின்றனர். ‘மது வீட்டுக்கும் நாட்டுக்கும் உயிருக்கும் கேடு’ என்று ஸ்டிக்கரை ஒட்டிவிட்டு அதை விற்பனை செய்யும் அயோக்கியத்தனமான அரசாங்கத்தை வேறு எங்கும் பார்க்க முடியாது. குடிமக்களின் உயிருக்கு கேடு விளைவிக்கும் பொருளை விற்பனை செய்யும் அரசு மானமுள்ள அரசாகுமா? நமது நாட்டுக்கு கேடு விளைவிப்பவனை நமது ராணுவமும் காவல்துறையும் சும்மா விட்டு விடுமா? ஆனால் நாட்டுக்கு கேடு விளைவிக்கும் பொருளை விற்பனை செய்ய நமது அரசே குத்தகைக்கு எடுத்துள்ளது என்பது வேடிக்கையல்லவா? அத்தகைய அவமானமிக்க அரசின் கீழ்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
http://i1119.photobucket.com/albums/k62 ... on83-1.jpg[/fi]காவல்துறையினர் கள்ளச்சாராயம் விற்றவர்களை தடாலடியாக கைது செய்வார்கள். ஏனெனில் வருமானம் தனிநபருக்கு செல்கிறதல்லவா? அரசு விற்பது நல்ல சாராயமாம், தனிநபர் விற்பது கள்ள சாராயமாம். உயிரைக் குடிக்கும் சாராயத்தில் நல்லது வேறு இருக்கின்றதோ?

மதுவினால் ஏற்படும் தீமைகளை விளக்கி அரசே மாநாடு நடத்துவதும் அதற்காக கோடி கோடியாக செலவு செய்வதும் விழிப்புணர்வு நடத்துகிறோம் என்பதும் நயவஞ்சகத்தை தவிர வேறென்ன?

குடி போதையில் ரகளை, போதையில் கொலை, கற்பழிப்பு என்று செய்தி வராத ஒரு நாளிதழையாவது இன்று நம்மால் காண முடியுமா? முல்லை பெரியார் பிரச்சனைக்காக எண்ணிக்கைக்குட்டபட்ட விவசாயிகளின் நலனுக்காக போராடும் தமிழக அரசியல்வாதிகளும் சமுதாய அமைப்புகளும் கோடானுகோடி மக்களின் நலனை பாதுகாக்க முன்வராதது ஏன்? மதுக்கடையை இழுத்து மூடும் போராட்டத்தை அறிவிக்காதது ஏன்? ஒட்டு மொத்த பெண்களின் ஆதரவும் கிடைக்குமே? கூடங்குளம் அணுஉலையால் தீமையாம்! அதற்காக இன்று போராடுகிறார்களாம்! மதுவினால் மக்களுக்கு நன்மையோ? கூடங்குளம் அணுஉலையால் வருங்காலத்தில் தான் தீமை! மது நிகழ்கால தீமையல்லவா?

காலையிலிருந்து மாலை வரை உழைக்கும் ஒருவன் தனக்கு கிடைக்கும் 200 ரூபாயை அப்படியே மதுக்கடையில் கொண்டு போய் கொடுக்கின்றான். அவனை எதிர்பார்த்து வீட்டில் காத்திருக்கும் மனைவி, குழந்தைகளுக்கு ஏமாற்றமே மிச்சம்! உணவுக்கு பணம் கேட்டால் அடி, உதை. குழந்தை தொழிலாளர்களை பாதுகாப்போம் என விதிக்கு வீதி முழக்கமிடும் அரசிற்கு ‘குடிகார தந்தையால் தான் பள்ளிக்கு செல்ல வேண்டிய குழந்தைகள் பணிக்கு செல்கின்றன’ என்பதை ஏன் விளங்க முடியவில்லை. ஒருவேளை உணவுக்கும் வழி இல்லாததால் கண்ணீருடன் மாற்றானுக்கு முந்தானை விரிக்கும் தாய்மார்களை கண்டும் ஏன் இந்த அரசு வாளாவிருக்கின்றது. சரி! பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு அரசு சத்துணவு வழங்குகிறது. வறுமையின் காரணமாக விபச்சாரத்திற்கு தள்ளப்பட்ட தாய்மார்களுக்கு அரசு என்ன திட்டம் வகுத்துள்ளது. ஆட்சியாளர்களும் அதிகாரமும் மாறுகின்றதே தவிர மக்களின் வாழ்வு கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இதற்கு யார் தான் பொறுப்பு?
பாழாய்போன அரசால் தமிழர் திருநாளும் இன்று மது அருந்தும் திருநாளாய் மாறிவிட்டதே!

மாற்று கலாச்சாரம் நம் மண்ணில் புகுந்ததால்
மண்ணின் பண்பாடு கலையிழந்து போயிற்று!
அது நன்னாளாம் பொங்கலையும்
தனக்குள்ளே விழுங்கிற்று.

ஒற்றுமையை பறைசாற்றி
மகிழ்ச்சியை பங்கு வைக்கும்
அத் திருநாள் மீண்டும் வருமா?
மது, மங்கை கலப்பற்ற
மண்ணின் திருநாள்
மறுபடியும் மலருமா?


--ராஜா

Image

==================================

Image
By Sumayha
By Aruntha
By Muthulakshmi123
By revathimani2011
By MohammedNaseer

Image
By Sumayha

விதை நெல்....

பருவ மழை
பெய்யுமின்னு
பகலிரவா பாத்திருந்து
பக்குவமா எடுத்துவச்ச
வெத நெல்ல
பதறாம தெளிச்சு விட்டு
மொள விட்ட பயிற
பாத்திகட்டி நட்டு வச்சு
மடையடைச்சு
உரம்போட்டு
களை நீக்கி,
வெளஞ்ச நெல்ல
ஆடு, மாடு
மேஞ்சறாம
காவல் காத்துக்
கண்ணசந்த நேரத்துல

நெல்ல வித்த காசுல
தலப் பிரசவத்துக்கு
வந்த மக மனசு கோணாம
சிறப்பா
சீர் செஞ்சு மறுவீடு
அனுப்பி....

பட்டணத்துல படிச்சபய
பதுவிசா போயி வர
புதுசா வந்த வண்டி
வாங்கிக் குடுத்து
வாயடைச்சு...

காலமெல்லாம்
கட்டுப்பட்ட பொஞ்சாதிக்கு
கழுத்துச் சங்கிலி
மாத்திப் போட்டு
அழகு பாத்து...

பட்டுன்னு விழுந்த
ஒத்தத் துளியில
பதறி எழுந்து பையநடந்து
வீட்டுக்கு வாரதுக்குள்ள
வெரசா வந்துருச்சு மழையும்
வெளிய வர வகையில்லாம
டிவியப் போட்டா
தானேன்னு சொல்லி
தலையில இடியா
எறங்குச்சு செய்தி...


அடுத்தவார அறுவடைக்காக
ஆளான பயிரெல்லாம்
கழுத்தளவு தண்ணியில – நான்
கண்ட கனவெல்லாம்
கதிகலங்கி நிக்குதே
வெதநெல்லுக்குக் கூட
வழியில்லாம...
குதிருக்குப் போகாமலே
ஊறிப் போச்சே...
பொங்கித்தின்ன வழியில்ல
பொங்கலுக்கு என்ன செய்ய?
பேஞ்சு கெடுத்துருச்சே
பெருமாளே என்ன செய்ய?
By Sumayha

Image
By Athithan
By Aruntha
By MohammedNaseer
By Rajathiraja
BY revathimani2011


பொங்கலோ பொங்கல்
எங்கெல்லாம் தமிழன்
வாழ்கிறானோ...!
அங்கெல்லாம்
பொங்கல் பொங்கட்டும்.
எங்கெல்லாம் தமிழன் வாழ்கிறானோ...!
அங்கெல்லாம்
சமாதானம் பொங்கட்டும்.

எங்கெல்லாம் தமிழ் வாழ்கிறதோ
அங்கெல்லாம்
மகிழ்ச்சி பொங்கட்டும்
தன்னை வருத்தி
உதிரத்தை வியர்வையாய் சிந்தி
உலகுக்கு உணவு தந்த
உழவ பெருமக்கள் வாழ்வில்
வறுமை நீங்கி
செல்வம் செழிக்கட்டும்

தென்னஞ் சோலைக்குள்
நுழைகின்ற
இதமான தென்றலாய்
தமிழன் வாழவில்
மகிழ்ச்சி நுழைந்து
இன்பம் பொங்கிட்டும்
பொங்கலோ பொங்கல்...!

By MohammedNaseer

By Muthulakshmi123

Image
By Sumayha
By Aruntha

Image

அடுத்த வருஷத்திலிருந்து குரங்கு பொங்கலும் கொண்டாடுறோம்னு வாக்கு கொடுங்க. விட்டுடுறோம்.
இல்லைன்னா வீட்டுக்கு போக முடியாது.
உங்களின் இந்த வருஷ பொங்கல் நடுரோட்டில் எங்களோட தான்.

--ராஜா rajathiraja
By revathimani2011
By Aruntha

மாறிவரும் பொங்கல் கொண்டாட்டம்


தமிழர்களின் திருநாளாகவும் விவசாயிகளின் கொண்டாட்டமாகவும் வருடத்திற்கு ஒருமுறை வருவது தான் பொங்கல் திருநாள். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ வேறுபாடின்றி அனைவருமே அதை கொண்டாடி வந்தனர்.

அது பின்னாளில் இந்து மத வழிபாடாக மாறியது. அதாவது அன்றைய தினம் சூரியனை வணங்குவது முக்கிய வழிபாடாக மாறியது.

பொங்கலின் மறுநாளான மாட்டு பொங்கல் என்பது நிலத்தை உழுவதற்காக பயன்படுத்தும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவற்றை அலங்கரித்து தமது சந்தோஷத்தை வெளிப்படுத்துவர். தற்போது அதுவும் மாறி மாடுகளை வணங்கும் வழிபாடாக மாறிவிட்டது.

Image

ஆறறிவு படைத்த மனிதன் ஐந்தறிவு படைத்த மாடுகளை வணங்குவதை யார் தான் ஏற்றுக் கொள்ள முடியும். நாம் வணங்குவது அவற்றிற்கு தெரியப் போவதுமில்லை. நமக்கு அவை வரம் கொடுக்கப் போவதுமில்லை. அதே நிலை தான் சூரியனை வணங்கும் போதும் எற்படும். நாம் சூரியனை வணங்கினாலும் வணங்காவிடினும் அது மறைவதையோ உதிப்பதையோ நிறுத்த போவதில்லை.

மாடுகளுக்கு நன்றி செலுத்துவதாக இருந்தால் அதற்கு வேளாவேளைக்கு உணவு கொடுத்து நோயுறும் போது மருத்துவம் செய்வது தான் சிறப்பானதாக அமையும்.

பண்டைய காலங்களில் அறுவடை செய்த புதுநெல் மூலம் பொங்கல் வைப்பது வழக்கமாக இருந்தது. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் என்ற மத வேறுபாடு மறந்து தமிழ் பேசும் அனைவருடைய வீட்டிலும் பொங்கல் வைப்பது வழக்கமாக இருந்தது.

சூரியனையும் மாட்டையும் வணங்கும் வழிபாடாக பொங்கல் பண்டிகை மாறியபோது இறைவன் இல்லை என சொல்லும் பெரியார் கொள்கைக்கு சொந்தக்காரர்களும் ஒரே இறைவனை மட்டும் வணங்கும் முஸ்லிம்களும் பொங்கல் கொண்டாடுவதை தவிர்த்து வந்தனர். தற்போதும் தவிர்த்து வருகின்றனர். தமிழர் திருநாள் என்று பெயரளவில் தான் சொல்லப்படுகிறதே தவிர தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் பண்டிகையாக தற்போது இது இல்லை.

தமிழகத்தில் வாழும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், நாத்திகர்கள் என தமிழ் பேசும் அனைவரும் தமிழர்கள் தான் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தமிழ் பேசும் இந்துக்கள் மட்டுமே தமிழர்கள் என்ற நிலை தான் தமிழகத்தில் நிலவி வருகின்றது. தமிழ் பேசும் முஸ்லிம்கள் அரபு நாட்டு இறக்குமதியை போன்றும் கிறிஸ்தவர்கள் இஸ்ரேலிய இறக்குமதி போன்றும் பார்க்கப்படுகின்றனர்.

தமிழர்களின் பண்டிகை தடம் மாறி போனதால் காதலர் தினம், புதுவருட பிறப்பு போன்ற அயல்நாட்டு கலாச்சாரம் தமிழகத்தில் வேரூன்றி விட்டது. அது ஒரு பண்டிகையாகவே தற்போது கொண்டாடப்பட்டும் வருகின்றது. இவ்விரண்டிலும் காமம் தலைதூக்கி நிற்பதை காணலாம். ஆனால் விளைச்சலையும் ஒற்றுமையையும் முற்படுத்தி சொல்லும் தமிழர் திருநாள் மட்டுமே தூய்மையான திருநாள். காதலோ காமமோ அற்ற தூய திருநாள். அது அயல்நாட்டு இறக்குமதியல்ல. விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற வடநாட்டு இறக்குமதியுமல்ல. தமிழர்களுக்கு சொந்தமான பண்டிகை. எனவே தமிழன் எனும் போர்வை போர்த்தி மத கலப்பின்றி அனைவரும் அதை கொண்டாடுவோம்.

- படுகைக்காக ராஜாதிராஜா
By Muthulakshmi123
By Sumayha
Locked

Return to “படுகை பரிசுப் போட்டி மையம்.”