முடிவுற்ற தீபாவளி பண்டிகை திருநாள் வாழ்த்துகள் Diwali- Deepavali -தீபாவளி-Articles-Poems-Images-PhotoS

படுகையில் நடைபெறும் பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் ஓட்டெடுப்பினை நடத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்துவது மற்றும் அறிவிக்கப்பட போட்டிப் பதிவுகளை அத்தலைப் பதிவுடன் பின்னூட்டமாகச் செய்ய வேண்டிய மையம்.
Forum rules
உங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.
Locked
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12035
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

முடிவுற்ற தீபாவளி பண்டிகை திருநாள் வாழ்த்துகள் Diwali- Deepavali -தீபாவளி-Articles-Poems-Images-PhotoS

Post by ஆதித்தன் » Sun Jul 15, 2012 7:53 pm

Image
தீபாவளி பரிசு போட்டி - ரூபாய் ஆயிரம்
வணக்கம் நண்பர்களே!

கடந்த ஒர் சில நாட்களுக்கு முன்னர்தான் வெற்றிகரமாக வரவேற்பு படங்களை உருவாக்கம் செய்யும் போட்டியினை நடத்தி முடித்தோம். அதற்குள், ஒர் புதிய போட்டியினை அறிவிப்பது எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால், தீபாவளி நெருங்குகிறதே!! இப்பவே பலர் தீபாவளி பட்டாசு விற்பனைக்கு தயாராகிவிட்டார்கள். அப்படியிருக்கையில் நாம் மட்டும், தீபாவளியை கையில் எடுக்காவிட்டால் எப்படி? அதனால், இன்றே போட்டியினை தொடங்கிவிடுகிறேன். இதில் நாம் கலந்து கொள்ளுவதற்கு முன் ஒர் சில நாட்கள் ரெஸ்ட் எடுத்துக் கொண்டாலும், புதியவர்கள் உடனடியாக கலந்து கொள்ள ஏதுவாய் இருக்கும் என்பதற்காகத்தான்.

முந்தைய போட்டியைப்போல் அல்லாமல் இந்த போட்டியில், நாம் தீபாவளி பற்றிய வாழ்த்து கவிதைகள், தீபாவளி பற்றிய புராண கட்டுரை, தீபாவளி நாட்களில் நம் வீட்டு கொண்டாட்டம், தீபாவளி கால பலகாரங்கள், தீபாவளி நேர பாதுகாப்புகள், தீபாவளியும் பட்டாசும் என கவிதை கட்டுரைகள் என எழுதுவது மட்டுமின்றி .. தீபாவளி வீடியோ கிளிப்ஸ்.. தீபாவளி கொண்டாட்ட படங்கள், என அனைத்தையும் செய்யலாம்.

ஆனால், எப்பொழுதும் போல.. எது செய்தாலும் முதல் கிரிடிட் படுகைக்கு வழங்க வேண்டும் என்பது கட்டாய விதிமுறை. அதாவது, கவிதை ஆனாலும் சரி கட்டுரை ஆனாலும் சரி... அது உங்களுடைய சொந்த ஆக்கமாய் இருக்க வேண்டும். அதனை முதல் முதலில் படுகையில் தான் பதிந்திருக்க வேண்டும். படங்கள் மற்றும் வீடியோ எனில் எங்கு பதிவேற்றம் செய்யப்பட்டாலும் அதில் படுகை.காம் என்ற வார்த்தையை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.

என்னொரு இனிப்பு செய்தியும் இருக்கிறது... அது என்னவெனில், முன்புபோல் வெற்றியாளர்க்கு படுகை கேஸ் பாயிண்ட் வழங்குவதற்கு பதில் ரூபாய் ஆயிரம் (Rs.1000/-) பரிசுப் பணமாய் வழங்கப்படும், மற்றவர்களுக்கு படுகை கேஸ் பாயிண்ட் பரிமாற்றம் செய்யப்படும்.

விதிமுறைகள்:

போட்டி தொடங்கிய நாள் : 22.09.2011
போட்டிக்காக நீங்கள் செய்யும் அனைத்து ஆக்கங்களையும் இன்று முதல் இப்பதிவின் பின்னூட்டப் பதிவாக கொடுத்து வரலாம்.

போட்டி நிறைவு நாள் : 18.10.2011
ஒருவர் எத்தனை கவிதைகள், கட்டுரைகள், இமேஜ்கள் மற்றும் வீடியோ என செய்யும் ஆக்கங்களை அனைத்தையும் ஒவ்வொன்றாய் 18 ஆம் தேதிக்குள் பின்னூட்டமாக கொடுத்திட வேண்டும்.

போட்டிக்கான ஓட்டெடுப்பு தொடங்கும் நாள் : 15.10.2011

மேலும் இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் 15 ஆம் தேதிக்கு முன்னர் 5 சிறந்த சொந்த ஆக்கத்தையாவது செய்திருக்க வேண்டும், அதற்கு பின்னர் கலந்து கொள்பவர்கள் ஓட்டெடிப்பில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள். மேலும், ஓட்டெடுப்பிற்கு சிறந்த ஆக்கங்களை கொடுக்கும் 20 நபர்களே ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். அதற்கும் மேலானவர்கள் 5க்கும் மேற்ப்பட்ட சிறந்த சொந்த ஆக்கத்தினை செய்திருந்தால் 20 நபர்கள் என்பதில் விதிமுறை தளர்வு இருக்கலாம். ஆனால், அர்த்தமற்ற மொக்கை பதிவுகள் போட்டிப் பதிவாய் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

போட்டி ஓட்டெடுப்பு நிறைவு நாள் : 22.10.2011
போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அதிக வாக்குகளை பெறுபவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

வெற்றியாளர் அறிவிப்பு : 23.10.2011

ஓட்டெடுப்பினை வெளிப்படையாக நடத்துவதன் மூலம், வெற்றியாளரை 22 ஆம் தேதியே அறிந்தாலும்.... கள்ள ஓட்டுக்கள் விழுந்திருக்கலாம் என்ற கருத்து ஏற்படின், வோட்டெடுப்பை மறுபரீசிலனைக்கு உட்படுத்திய பின்னர் சரியான வெற்றியாளரை அறிவிக்கவே ஒர் நாள் தாமத அறிவிப்பு.

போட்டியின் வெற்றியாளர்க்கு பரிசுப் பணம் மூன்று வங்கி வேலை நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும். வங்கி கணக்கு இல்லாதவர்க்கு காசோலையாகவே அல்லது வெஸ்டர்ன் மணி ட்ரான்ஸ்பர் வாயிலாக பரிசு பணம் வழங்கப்படும்.
[td=390,red][size=150][color=#FFFF00]தீபாவளி பரிசுப் போட்டி முடிவுகள்[/color][/size][/td]
இடம் நபர் பரிசு
முதல் பரிசு அஜித் பாபு ரூபாய் ஆயிரம்
இரண்டாம் பரிசு ரேவதி மணி 800 பாயிண்ட்ஸ்
மூன்றாம் பரிசு அருந்தா 600 பாயிண்ட்ஸ்
நான்காம் பரிசு தேவிகா 300 பாயிண்ட்ஸ்
ஐந்தாம் பரிசு உமாஜனா 100 பாயிண்ட்ஸ்
தீபாவளி பரிசுப் போட்டிகள் களந்து கொண்டு போட்டியினை சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

=thanks =thanks =thanks

[td=570,red][center]போட்டித் தொடரில் இடம் பெற்ற பதிவுகளில் சில உங்கள் பார்வைக்காக.....[/center][/td]
[/size]
Image
Image
வெளியிலே தீபாவளி!
வேதனை உள்ளுக்குள்ளே...

கரு வினிலே உருவாகி
களிப்பெய்தும் வேளையிலே..
கடல்கடந்து சென்றுவிட்டாய்
காண்பது தான் எந்நாளோ!

வெளியிலே தீபாவளி!
வேதனை உள்ளுக்குள்ளே...

காசு அனுப்பி வைத்துவிட்டாய்-உன்னை
கட்டி அணைக்க முடிந்திடுமோ!
நகை அனுப்பி வைத்துவிட்டாய்-உந்தன்
நகம் தீண்டும் சுகம் தருமோ!

வெளியிலே தீபாவளி!
வேதனை உள்ளுக்குள்ளே...

பட்டாசு பட்சணங்கள்
புத்தாடை இருந்தாலும்
பிஞ்சுமகன் கேட்கின்றான்
'அப்பா வருவாரா?'.....

வெளியிலே தீபாவளி!
வேதனை உள்ளுக்குள்ளே...

திரும்பி வரும் நன்னாளே
தீபாவளி எங்களுக்கு..
திசை பார்த்து காத்திருப்போம்
தீபாவளித் திருநாளை.
Image
டாடி மம்மி வீட்டில் இல்லை
வடை போட யாரும் இல்லை
வெடியோடு வாங்கள் உள்ளே.. வெடிப்போமா.

பட்டாசு பார்த்ததில்லை
பணங்காசு சேர்த்ததில்லை
வயசானக் காலம் வேற
தில்...... ஆனால் ?

தீபம் ஒளியை ஏற்றுங்கள்
கோபம் கொள்வதை மாற்றுங்கள்
தித்திக்கும் தீபாவளி
பத்திக்கும் பார்த்து வெடியுங்கள்.
Image
தீபாவளி நினைவுகளும் மாற்றங்களும்

அன்னையின் ஸ்பரிசத்தில் தலைகுளித்து
மஞ்சள் பூசிய புத்தாடை உடுத்தி
அப்பா பட்டாசு வெடிக்க
வெடிக்கை பார்த்து
மகிழ்ந்த்து ஒரு காலம்.

அன்னை சொல் கேளாமல் பட்டாசுக்கு
உடன்பிறப்புடன் சண்டையிட்டு தந்தையின்
தலையிட்டால் சமபங்கு பிரித்து பட்டாசு வெடித்து
மகிழ்ந்த்து ஒரு காலம்.

காலை முதல் மாலை வரை
ஊர்சுற்றி திரிந்து இருட்டியபின்
வீடு சேர்ந்து வீட்டில் இருந்த பட்டாசுகளை
நான் வெடிக்க பெற்றவர்கள் பார்த்து
மகிழ்த்தது ஒரு காலம்.

சுயமாய் சம்பாதித்து என் வீட்டாருக்கு
புத்தாடை எடுத்து, சம்பாதித்ததில் பெரும்பங்கை
பட்டாசுக்காக செலவழித்து,
தந்தையிடம் அரிவுரை வாங்கி
மகிழ்த்தது ஒரு காலம்.

இன்று பிழைபிற்காக வெளிதேசம் வந்து
கணினி முன் அமர்ந்து என்முகம்
அவர்கள் பார்க்க அவர்கள் முகம் நான் பார்க்க பேசி
மகிழ்வது இக்காலம்.கணினிக் காலம்.
Image

Image

Image
பள்ளி சென்ற வயதில்
பார்த்து பார்த்து வளர்த்த
பச்சிளம் மகளுக்கு
பரம்பரை அழிந்திடாது
மாமன் மகனை
நிச்சயம் பண்ணினர்
திருமணமும் முடித்தனர்!

அவள் வயதோ 10
அவன் வயதோ 12
காலம் செய்த கோலம்
காலனவன் அவனுயிரை
காவு கொண்டு சென்று விட
பருவமே எய்தாத அந்த
பச்சிளம் நெஞ்சுக்கு
பெரியவர் இட்ட பெயர்
அதிஸ்டமில்லாதவள்
விதவை என்று!

துள்ளித் திரியும்
துடுக்கான வயதில்
வீட்டுக்குள் அடங்கினாள்
கட்டாயத்தின் பெயரில்
பள்ளிப் படிப்பு முதல்
பாசமான உறவுகள் வரை
தடை போட பட்டது!

இன்னும் அந்த பிஞ்சிற்கு
இனிமையான தன்
இறுதித் தீபாவளி
நினைவில் நின்றது
தன்னை மணம்முடிக்க
காத்திருந்த உறவுடன்
சேர்ந்து மகிழ்ந்த அந்த
வான வேடிக்கைகள்
அவனோடு சேர்ந்து
ஆவலாய் கொழுத்திய
பட்டாசு வெடிகள்....!

பாதி மகிழ்ச்சியில்
பரிதாபமாய் பற்றிக் கொண்ட
அந்த பட்டாசு நெருப்பில்
பாவை இவள் கண் முன்னே
பஸ்பமாக எரிந்து
சாம்பலான அவள்
வாழ்வின் உறவு
எதையுமே மறக்க முடியாது
சோகத்தை கூட வெளிப்படுத்த
தெரியாது விம்மி அழுத படி!

எல்லோர் வீட்டிலுமோ
தீபத்தின் ஒளிமயம்
இவள் வாழ்வோ இன்று
அதே தீபத்தால் ஒளி இழந்து
இன்று முழுதும் இருட்டாக
இது அவள் செய்த பாவமா?
அவள் உறவுகள் செய்த பாவமா?
விதியின் விளையாட்டில்
அவள் ஓர் விளையாட்டு பொம்மையாக!
Image
ஆனந்தக் கொண்டாட்டமே
அது தானே தீபாவளி!

ஆடு மீனு கோழியின்னு
அத்தனையும் சமச்சுவச்சு
கூடி நின்னு குடும்பத்தோட
கொண்டாடும் தீபாவளி!

ஆனந்தக் கொண்டாட்டமே
அது தானே தீபாவளி!

வீடு தோறும் கோலமிட்டு
வீதி எங்கும் விளக்கு ஏற்றி
மாடி முதல் குடிசை வரை
மணக்கும் இந்த தீபாவளி!

ஆனந்தக் கொண்டாட்டமே
அது தானே தீபாவளி!

வானைப் பிளக்கும் ஒளி வெள்ளம்
வந்ததனாலே இருள் செல்லும்
போனது துன்பம் நண்பர்களின்
பொன் போல் ஒளிரும் வாழ்த்துகளால்!

ஆனந்தக் கொண்டாட்டமே
அது தானே தீபாவளி!
Image
நீ சிரித்தாள் தீபாவளி
அதை நான் ரசித்தால் போகுமே வலி
புத்தாடையுடுத்தி
பல வண்ணக் கலரில் மத்தாப்பு கொளுத்தி.
பலவகை இனிப்போடு
புது வகை பூரிப்போடு
பஜனை பாடியப் பிறகு
டமால் ....டமால் ..வெடிசத்தம்.

உற்றார் உறவினர் ஒரு பக்கம்
நண்பர் நண்பிகள் மறு பக்கம்
இதனைக் காணும் கண்களுக்கு
காணக் கிடைக்காத வரப் பிரசாதம்
மகிழ்ச்சி அடையும் இதயம்ங்கள்
வாழ்த்து சொல்லுகிறேன் எல்லோருக்கும்.
Image
தலைதீபாவளி

தலைதீபாவளிக்கு வந்திருந்தாள்
புஸ்வானமாக்கி விட்டுப் போனவள்
சரவெடி வெடிக்க...
பற்றவைக்கும்போது கூட
என் நெஞ்சு
புகைந்து கொண்டுதான் இருந்து
என்னவாகிவிடுமோ என்று
பயந்து
கண் மூடி திறந்தபோது
என் மனசு போல
அவள் கையில் இருந்த
நெருப்பும்
அணைந்திருந்தது!
காலைக் கதிரவன்
கைகளை பரப்பி
அன்றைய பொழுதை
ஆசையுடன் ஆரம்பிக்க
கண்விழித்த உறவுகள்
சுறுசுறுப்பாய் தொழிற்பட
அடுப்படியில் அம்மா
ஆகுதிகள் செய்திட
கடைத்தெருவில் அப்பா
தீபச் சுட்டிகள் வாங்கிட
வீட்டினிலே அக்கா
விதம் விதமாய் இனிப்புகள்
விரும்பியே ஆக்கிட
கோவிலிலே அண்ணா
கூட்டமாய் சேர்ந்து
அலங்காரங்கள் பலவற்றை
பொறுப்பாக செய்திட
சிறுவர்கள் நாம் இங்கு
சூரியனின் அஸ்தமனத்தை
ஆவலாய் எதிர்பார்த்து
கைகளில் பூந்திரியும்
விதவிதமாய் பட்டாசும்
பலவித வானவேடிக்கையும்
வாங்கியே வைத்தபடி
இனியமாலை பொழுதிற்காய்
இனிமையுடன் காத்து நிற்க
பக்கத்து வீட்டு
பாசமான பாட்டி வந்து
பக்குவமாய் எம்மை
பாங்குடனே வழிநடத்தி
இனிய தீபாவளியை
இனிப்பாக கொண்டாட
வேண்டிய அறிவுரைகள்
விரும்பியே வழங்கி நிற்க
தீபாவளி திருநாள்
இனிமையாக கழிந்தது
தீபாவளி

உறங்கும் முன் புத்தாடைஎடுத்து,
உணர்ச்சிப்பெருக்கால்
ஊரெல்லாம் நான் காட்டி,
மனதுக்குள் சொல்லிக்கொண்டேன் ,
நாளை திபாவளி.

கனவில் கூட புத்தாடை உடுத்தி,
கண்டபடி பட்டாசு வெடித்து,
இரவெல்லாம் ஒத்திகைபார்த்து,
கனவிலும் சொல்லிக்கொண்டேன்,
நாளை தீபாவளி.

விடிந்தும் விடியாததுமாய்,
விரட்டிய இரவை எண்ணி ,
விழித்தஉடன் சொல்லிக்கொண்டேன்,
இன்று தீபாவளி.

தலையிலே எண்ணெய் வைத்து,
வெந்நீரில் தலைகுளித்து,
தவிப்பிலே சொல்லிக்கொண்டேன்,
இன்று தீபாவளி.

புத்தாடை அணிந்துகொண்டு,
புதுப்போளிவாய் வந்துநின்று ,
புன்னகையில் சொல்லிக்கொண்டேன்,
இன்று தீபாவளி.

பட்டாசு நான் வெடிக்க,
பலகாரம் பல கிடைக்க,
பரவசத்தில் சொல்லிக்கொண்டேன்,
இன்று தீபாவளி.

வீதியெங்கும் வீடுகளில்,
விதவிதமாய் விளக்கெரிய,
விளையாடாய் சொல்லிக்கொண்டேன்,
இன்று தீபாவளி.

பட்டாசும் தீர்ந்துபோக,
மத்தாப்பும் தீர்ந்துபோக,
பதைபதைப்பில் சொல்லிக்கொண்டேன்,
முடிந்தது தீபாவளி.

மனமெல்லாம் கனகனக்க,
கண்களும் மழை பொழிய,
விடைகொடுத்து எதிர்பார்த்தேன்,
அடுத்த தீபாவளி.
Image
Image
தீபாவளி

வணக்கம் நண்பர்களே,

முன்னுரை:

ன்னைப் பற்றி நான் சொல்லட்டுமா? நான் தீபாவளி, ஆதித்தனின் தீபாவளி. என்னை ஆதித்தன் நான்காக பிரித்துப் பார்க்கிறான். மேலும், என்னைப் பற்றிய ஆதித்தனின் பார்வைகள் புதுமையானது... வினோதமானது. ஆகவே, தீபாவளி என என்னைப்பற்றி சொல்வதைக் காட்டிலும் "ஆதித்தனின் தீபாவளி" பற்றி கூறுகிறேன், கவனமாக கேளுங்கள் கேட்டுக் கைத்தட்டுங்கள்.
"ஆதித்தனின் தீபாவளி"
ஆதித்தன்:
தென் தமிழகத்தின் ஒர் சிறு கிராமத்தில் பிறந்த தமிழன். அவன் படித்தது கொஞ்சம், அதிலும் தமிழ் காவியங்கள், புராணக்கதைகள், தமிழ் காப்பியங்கள், தமிழ் பதினெண்கீழ்கணக்கு நூல்கள், ஆற்றுப்படை நூல்கள் மற்றும் பழைய இலக்கியங்கள், கதைகள், புதியவைகள் என எதையும் சரியாக படித்திராதவன். ஆனால், தன் வாழ்நாளில் பிறர் அதிலிருந்து பயன்படுத்தி வரும் "மேற்கோள்"(Quote) வார்த்தைகளைக் கொண்டு.. சிற்றறிவு கொண்டவன்.

தீபாவளி:
என்னை தீபாவளி என்றும் தீபத் திருநாள்/தீப ஒளித்திருநாள் என்றும் சொல்கிறார்கள். என்னை வருடத்திற்க்கு ஒர் முறை, அதுவும் ஐப்பசி மாதம் வரும் அம்மாவாசைக்கு முந்தின நாளான நரக சதுர்த்தசி அன்று இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். தீப ஒளியான என்னை ஏற்றி, மனதில் உள்ள பொறாமை, அகங்காரம், தீய எண்ணம் போன்றவற்றை மனதைவிட்டு அகற்றி, ஒளி நிறைந்த சுத்த நல்மனிதனாய் தன்னை அவதரிக்க உரித்தான நாள் என்றுகூட சொல்லலாம்... புராணத்தில், நரகாசுரன் என்ற ஒர் தீய அசுரனை வதம் செய்த வெற்றி நாள் என்றும் எல்லோரும் மகிழ்ச்சியாய் கொண்டாடும் ஒர் நாள் என்றும் கூறுகிறார்கள். .. அதிகாலை நேரம் பார்த்து குளிக்கனும்...ஆரியர்கள் கொண்டாட்டம்.. திராவிட தமிழன் கொண்டாடக் கூடாது.. என பலர் கருத்துக்கள்..அப்படி இப்படின்னு பத்திரிக்கைகள் வெளியிட்டாலும்..., ஆதித்தன் என்ன சொன்னான் தெரியுமா? அட... போங்கப்பா தீபாவளின்னா.. எனக்கு தெரிந்தது நான்கு தீபாவளிங்க. அவை, 1. ஐந்து ரூபா தீபாவளி 2. ஐயாயிரம் ரூபா தீபாவளி, 3. பணமில்லா தீபாவளி மற்றும் 4. பாசம் கொண்ட தீபாவளி. ஆதித்தன்,அதென்ன அஞ்சு ரூபா தீபாவளி .. அய்யாயிரம் ரூபா தீபாவளி? எனக் கேட்டேன். அதற்கு விளாவாரியா சொல்கிறான் பாருங்க....

1. ஐந்து ரூபா தீபாவளி:
து ஒன்றும் இல்லைங்க ... சின்ன வயசில் வீட்டில் ரொம்ப கஷ்டம். தீபாவளி அன்று வீட்டு வாசலில் இருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருந்தது இன்றும் அப்படியே என் மனதில் இருக்கிறது... பின்னர், அம்மா கொடுத்த ஐந்து ரூபாயக் கொண்டு ஊசி வெடி வாங்கி கொழுத்தினேன்.. அதைக் கூட நானா கேட்டு வாங்கல .. என் அண்ணன் தான்.. அம்மாகிட்ட கேளு அம்மாகிட்ட கேளுன்னு சொல்லியதால் வாங்கிய காசு...அதுலையும் நானு ரொம்ப நல்ல பையனாச்சா... அப்பா இறந்த பொழுது, அம்மாவிடம் கையில் பணம் ஏதும் இல்லை என்ற நிகழ்வு என் மனதில் அப்படியே பதிந்திடுச்சா ... ஐயா, உனக்கு வேணுமாய்யா? என்ற வார்த்தை எங்க அம்மாகிட்ட இருந்து வந்தாலே! எனக்கு வேண்டாம் எனச் சொல்லிடுவேன், புத்தாடைகள் கூட பல நிகழ்ச்சிகளுக்கு எடுத்தது இல்லை. அம்புட்டு நல்ல பிள்ள!!! :s_laughat :s_laughat

சரி... அதென்ன ஐந்தாயிரம் ரூபா தீபாவளி?


2. ஐந்தாயிரம் ரூபா தீபாவளி:

மேல் சொன்னதில் இருந்தே தெரியலையா? ஐந்து ரூபாய்க்கே கஷ்டப்பட்ட காலம் போய் ... ஐந்தாயிரத்திற்கும் மேல் மேல் மதிப்பிலான ரூபாயில் வெடி கொண்டு கொண்டாடிய தீபாவளி... அதுவும் தீபாவளி வருவதற்கு 30 நாட்களுக்கும் முன்னரே எங்க வீட்டுக்கு வெடியெல்லாம் வந்திடுச்சி ... ஒர் பெரிய கிப்ட் பாக்ஸ் + பெரிய அட்டப்பெட்டி நிறையா வெடி ... அதுவும், என் ரூமில் வைத்ததால் .. தினமும் இரவு ஒவ்வொன்றையாக பார்த்திட்டுத்தான் தூங்குவேன்... அதைப் பார்க்கலன்னா தூக்கமே வராது ... அம்புட்டு சந்தோசம்னா சந்தோஷம் போங்க!!! :s_tongue :s_tongue

சரி சரி.. ஆதித்தன்...ரொம்பத்தான் பீய்த்திக்காதீங்க ... அடுத்தது சொல்லுங்க.


3. பணமில்லா தீபாவளி:
துவரை பாசத்தின் அரவணைப்பில் இருந்த நான், இப்பொழுது சொந்தக் காலில் நிற்பதற்காக வேலைக்கு சென்ற காலக்கட்டம். வேலை செய்யனும்.. நல்லா சம்பாதிக்கனும்னு ஆர்வம் இருந்தது. ஆனால், என் குணம் யாரின் கீழும் வேலை செய்ய ஒத்துழைக்கவில்லை. அதனால், இணையம் மூலம் முதலீடே இல்லாமல் சுயதொழில் செய்து அதிகம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் பெரு நேரத்தை இணையத்தில் செலவிட்ட காலக்கட்டம் ... தீபாவளி ... காலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை உடுத்தி .. பட்டாசு கொளுத்திய பழைய காலங்களின் நினைவுகளுடன் மடிகணிணியில் வாழ்த்துக்களை பெயரளவில் .. யாரென்றே தெரியாதா ... ஏதோ ஒர் எந்திர ரோபக்களுடன் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட காலம். மனம் முழுவதும் ... பணம் பணம் பணம் எனச் சொல்லிக் கொண்ட காலம்... ஆனால், கைக்குத்தான் பணம் எட்டவேயில்லை. பணம் இருந்தால் எல்லாம் நம்மை தேடிவரும் ... அன்று நாமும் கொண்டாடலாம் தீபாவளி...???? :s_empathy

சரி சரி கவலைப்படாதீங்க ஆதித்தன். பணம் சம்பாதிச்சிக்களாம். என்னொன்று இருக்குள்ள அந்த தீபாவளியையும் சொல்லிடுங்க ஆதித்தன்...


4. பாசம் கொண்ட தீபாவளி:
ழ்மையின் தீபாவளி ... சந்தோஷ தீபாவளி ... பணம் பேசும் தீபாவளி என மூன்றை சொல்லிட்டேன். இந்த பாசத் தீபாவளி ... என்ற ஒன்று முன் நடந்திருக்கவில்லை. இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கும் உழைப்பிலான தீபாவளிதான் என் பாசத் தீபாவளி. இங்கே என்னுடன் இணைந்து தீபாவளி கொண்டாட்டத்தை தன் உழைப்பால் கொண்டாடிக் கொண்டிருக்கும் எவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்ததில்லை. ஆனால், ஒன்றிணைந்தோம், படுகை என்ற உறவால் ஒன்றிணைந்தோம், ஒன்றாய் தீபாவளியைக் படுகையில் கொண்டாடுவோம். நீங்க எல்லாம் எனக்கு கிடைத்த பாசக்காரங்க ஆச்சே! அதான் பாசம் கொண்ட தீபாவளி :s_yahoo :s_yahoo :s_yahoo

:eek: :eek: :eek:
என்ன ஆதித்தன் இப்படி பண்ணிட்டான்??? .. நான் கூட "ஆதித்தனின் தீபாவளி"ன்னு டைட்டில் கொடுத்தவுடன் சோழர்கால வரலாற்று தீபாவளியைச் சொல்லி என்னை பெருமைப்படுத்த இருக்கிறான் என்றுதான், ரொம்ப ஆர்வமாய் கேட்டுக் கொண்டே இருந்தேன். ஆனால், கடைசி வரைக்கும் தீபாவளியாகிய என்னைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் விட்டுப்பிட்டானே!!!! :s_cry :s_cry :s_cry

முற்றுரை:
புத்தாடை உடுத்தி ..பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்படும் தீபாவளி நாளில் பெயர்க் காரணத்திற்கு தகுந்தவாறு மனதின் இருட்டை அகற்றி ..ஒளி ஏற்றினார்களோ இல்லையோ, அனைவரும் மகிழ்வாய் இருக்க வேண்டும். ஆனால், அதிலும் பணப்பிரச்சனையால் என்னை கொண்டாடுபவர்கள் மனம் வேதனை அடைகிறது என்பதனை "ஆதித்தனின் தீபாவளி" மூலம் அறிந்து கொண்டேன். இதற்கான தீர்வை தீபாவளியாகிய என்னால்கூட கூறமுடியவில்லை என்பதில் வருத்தமே!. ஆனாலும், இதனை வெளிக் கொண்டுவந்த ஆதித்தனுக்கு நன்றி சொல்வதுடன், வரும் காலம் எல்லோர்க்கும் எல்லாம் என்ற கோட்பாடுடன் அமைய என் தீபத்தை ஏற்றுங்கள்.
:s_roses :s_roses :s_roses

குறிப்பு:
போட்டியின் முடிவுகள் மற்றும் விதிமுறைகளை படுகை.காம்- தன்னிச்சையாக எடுக்கவும்.. விதிமுறையை போட்டியின் நடுவே மாற்றியமைக்கவும் அதிகாரம் கொண்டுள்ளது என்பதனையும்.. படுகையின் நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன் என்பவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். மற்றவர்கள் தவிர்க்கவும்.
Locked

Return to “படுகை பரிசுப் போட்டி மையம்.”