முடிவுற்ற தமிழக அரசியல் பார்வை -ரூபாய். 2500 பரிசுப்போட்டி - இன்றைய தமிழக அரசியல்

படுகையில் நடைபெறும் பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் ஓட்டெடுப்பினை நடத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்துவது மற்றும் அறிவிக்கப்பட போட்டிப் பதிவுகளை அத்தலைப் பதிவுடன் பின்னூட்டமாகச் செய்ய வேண்டிய மையம்.
Forum rules
உங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.
Locked
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12036
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

முடிவுற்ற தமிழக அரசியல் பார்வை -ரூபாய். 2500 பரிசுப்போட்டி - இன்றைய தமிழக அரசியல்

Post by ஆதித்தன் » Sun Jul 15, 2012 7:36 pm

இன்றைய தமிழக அரசியல்

பால், பஸ் கட்டண விலை உயர்வு, மின்சார பற்றாக்குறை மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம்.
இன்றைய தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகளான, பால் & பஸ் கட்டண விலை ஏற்றம் மற்றும் மின்சார பற்றாக்குறையான நேரத்தில் கூடங்குளம் அணுமின் நிலையப் போராட்டம், ஆகிய முக்கிய தமிழக பிரச்சனைகளை உங்கள் பார்வையில் கட்டுரையாகவோ, கதையாகவோ, கவிதையாகவோ, நகைச்சுவை துணுக்குத் தொகுப்பாகவோ, அல்லது அதனை வெளிப்படுத்தும் படங்களாகவோ, விடீயோவாகவோ என எப்படி வேண்டும் என்றாலும், உங்கள் திறமைகளைக் கொண்டு சிறப்பாக செய்து இந்நூலின் பின்னூட்டப் பதிவாக பரிசுப் போட்டிக்கான ஆக்கங்களை கொடுக்க வேண்டும்.

மேலும், எப்பொழுதும் போல.. எது செய்தாலும் முதல் கிரிடிட் படுகைக்கு வழங்க வேண்டும் என்பது கட்டாய விதிமுறை. அதாவது, கவிதை ஆனாலும் சரி கட்டுரை ஆனாலும் சரி... அது உங்களுடைய சொந்த ஆக்கமாய் இருக்க வேண்டும். அதனை முதல் முதலில் படுகையில் தான் பதிந்திருக்க வேண்டும். படங்கள் மற்றும் வீடியோ எனில் சொந்தமாக செய்து, ப்ளாக்கர்/யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டாலும் அதில் படுகை.காம் என்ற வார்த்தையை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.
[td=200,#008000][b][center][color=#FFFF00]பரிசு விவரம்:[/color] [color=#FFFFFF]முதல் பரிசு : ரூபாய். 1500 2 வது பரிசு : ரூபாய். 1000 3 வது பரிசு : 5000 பாயிண்ட்ஸ்[/color][/center][/b][/td]
[td=200,#FF0000][b][color=#FFFFFF] [center][size=150]போட்டி ஆரம்ப நாள் : 22.11.2011 ஓட்டெடுப்பு ஆரம்ப நாள்: 5.12.2011 போட்டியின் கடைசி நாள்: 11.12.2011 ஓட்டெடுப்பின் கடைசி நாள்: 12.12.2011 வெற்றியாளர்கள் அறிவிப்பு: 13.12. 2011 [/size][/center] [/color][/b][/td]
[td=200,#008000][b][center][color=#FFFF00][size=150][u]வெற்றியாளர்களின் விவரம்[/u]:[/size][/color] [color=#FFFFFF][size=150]முதல் பரிசு : Aruntha - ரூபாய். 1500 2 வது பரிசு : revathimani2011 - ரூபாய். 1000 3 வது பரிசு : sivasiva - 5000 பாயிண்ட்ஸ்[/size][/color] [size=200]* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * [/size] பரிசினைத் தட்டிச் செல்லும் நண்பர்களுக்கும், பரிசுத் தொகையினை பெறுவதற்கு சரியான போட்டியினைக் கொடுத்த பிற போட்டியாளார் நண்பர்களுக்கும், இவர்கள் அனைவரும் போட்டி ஆக்கங்களை சிறப்பாக கொடுக்க உற்சாகமூட்டிய மற்ற நண்பர்களுக்கும் என் தாழ்மையான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். =thanks[/center][/b][/td]
போட்டிக்கான நிபந்தனைகள்:

1. போட்டியின் வெற்றியாளர்கள் ஓட்டெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்க படுவார்கள். (படுகை பரிசுப்போட்டி விதிமுறைகள் அடங்கும்)

2. குறைந்தது 3 சிறந்த சொந்த ஆக்கங்களை போட்டிக்காக செய்து பின்னூட்டமாக கொடுத்தவர்கள் மட்டுமே வேட்பாளாராக தேர்ந்தெடுக்கப்படுவர். 15 க்கும் மேற்பட்டவர்கள் சிறந்த ஆக்கங்களை செய்தால், அதில் சிறப்பாக செய்தவர்களில் 15 பேர் மட்டுமே வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டியின் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படுவர்.

3. இது மிக முக்கியமான நிபந்தனை. அனைவரும் தனது சொந்த ஆக்கத்தை மட்டுமே இங்கு பதிய வேண்டும். மற்றவர்களின் பதிப்பையோ, பிற தளங்களில் வெளியானவற்றையோ இங்கு பதியக்கூடாது. மீறி பதிந்தால் அவர் போட்டியில் இருந்து நீக்கப்படுவார். அது மட்டுமல்லாமல் அபராதமும் விதிக்கப்படலாம்.

4. போட்டியின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் மாற்றி அமைக்கும் அதிகாரம் போட்டி அமைப்பாளருக்கும், படுகை நிர்வாகத்திற்கும் உண்டு.

விளக்கமாக:

போட்டி தொடங்கிய நாள் : 22.11.2011
போட்டிக்காக நீங்கள் செய்யும் அனைத்து ஆக்கங்களையும் இன்று முதல் இப்பதிவின் பின்னூட்டப் பதிவாக கொடுத்து வரலாம்.

போட்டி நிறைவு நாள் : 11.12.2011
ஒருவர் எத்தனை கவிதைகள், கட்டுரைகள், இமேஜ்கள் மற்றும் வீடியோ என செய்யும் ஆக்கங்களை அனைத்தையும் ஒவ்வொன்றாய் 11 ஆம் தேதிக்குள் பின்னூட்டமாக கொடுத்திட வேண்டும்.

போட்டிக்கான ஓட்டெடுப்பு தொடங்கும் நாள் : 5.12.2011

மேலும் இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் 5 ஆம் தேதிக்கு முன்னர் 3 சிறந்த சொந்த ஆக்கத்தையாவது செய்திருக்க வேண்டும், அதற்கு பின்னர் கலந்து கொள்பவர்கள் ஓட்டெடிப்பில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள். மேலும், ஓட்டெடுப்பிற்கு சிறந்த ஆக்கங்களை கொடுக்கும் 15 நபர்களே ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். அதற்கும் மேலானவர்கள் 3க்கும் மேற்ப்பட்ட சிறந்த சொந்த ஆக்கத்தினை செய்திருந்தால் 15 நபர்கள் என்பதில் விதிமுறை தளர்வு இருக்கலாம். ஆனால், அர்த்தமற்ற மொக்கை பதிவுகள் போட்டிப் பதிவாய் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும், வாக்கு அளிக்கும் உரிமை 50 பதிவுகளைக் கடந்தவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும்.

போட்டி ஓட்டெடுப்பு நிறைவு நாள் : 12.12.2011
போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அதிக வாக்குகளை பெறுபவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

வெற்றியாளர் அறிவிப்பு : 13.12.2011

ஓட்டெடுப்பினை வெளிப்படையாக நடத்துவதன் மூலம், வெற்றியாளரை 12 ஆம் தேதியே அறிந்தாலும்.... கள்ள ஓட்டுக்கள் விழுந்திருக்கலாம் என்ற கருத்து ஏற்படின், வோட்டெடுப்பை மறுபரீசிலனைக்கு உட்படுத்திய பின்னர் சரியான வெற்றியாளரை அறிவிக்கவே ஒர் நாள் தாமத அறிவிப்பு.

போட்டியின் வெற்றியாளர்க்கு பரிசுப் பணம் மூன்று வங்கி வேலை நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும். வங்கி கணக்கு இல்லாதவர்க்கு காசோலையாகவே அல்லது வெஸ்டர்ன் மணி ட்ரான்ஸ்பர் வாயிலாகவோ பரிசுப் பணம் வழங்கப்படும்.

=====================================================
:!! :!! :!! :!!
போட்டி தொடங்கியாற்றி.. சீக்கிரமாக உங்களது படைப்புகளை அள்ளித் தெளியுங்கள்.

:s_thumbsup :s_thumbsup
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12036
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: முடிவுற்ற தமிழக அரசியல் பார்வை -ரூபாய். 2500 பரிசுப்போட்டி - இன்றைய தமிழக அரசியல்

Post by ஆதித்தன் » Sun Jul 15, 2012 7:38 pm

எனக்கு சில பாடல் நினைவுக்கு வந்திச்சு

வந்தேண்டா பால்காரன் பசு மாட்ட கட்டி ஆட போறன்
புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி

இப்பிடி பாட்டு பாடி வச்சாங்க.

இப்போ புல்லு கொடுக்க பசு கொடுக்கும் பாலுக்கும் விலைய கூட்டி காசு குடுத்தும் நம்மளால பால வாங்க முடியாத அளவிற்கு விலைய கூட்டிட்டாங்க. நம்ம எல்லாரையும் பாலயே குடிக்காம பண்ணிடுவாங்க போல இருக்கு.

இத எங்கப்பா போய் சொல்லி அழுறது?


நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன் நாலுந் தெரிஞ்ச றூட்டுக்காரன்
நல்லா பாடும் பாட்டு காரன்

இந்த பாட்ட கேக்க கூட நல்லா தான் இருக்கு. ஆனால் ஆட்டோவ நினைச்சாலே வயித்த கலக்குது.
பெற்றோல் விலை எகிறின மாதிரில எப்பிடி ஆட்டோல போறது. றூட்டு தெரிஞ்சென்ன பாட்டு தெரிஞ்சென்ன ஆட்டோ ஓட்ட முடியலயே!பார்த்து பார்த்து கண்கள் பூத்திடிச்சு நீ வருவாய் என

என்ன சோக பாட்டு பாடுறன் எண்டு பாக்கிறீங்களா? தினமும் 12பி பஸ்சில வாற என்ர காதலிய இப்ப காணல. பெற்றோல் விலையேற்றத்தில பஸ்சில போறதுக்கு தான் முழுக்கு போட்டாளா காலேஜிக்கும் முழுக்கு போட்டிட்டாளா தெரியல. அது தான்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12036
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: முடிவுற்ற தமிழக அரசியல் பார்வை -ரூபாய். 2500 பரிசுப்போட்டி - இன்றைய தமிழக அரசியல்

Post by ஆதித்தன் » Sun Jul 15, 2012 7:39 pm

ஆட்டோ ஓட்டிய என்
அப்பாவின் தொழில் இங்கே
அரசியல் நிலவரத்தால்
அன்றாட வருவாய்க்கு
அடக்கம் வந்தமையால்
அன்றாட உணவிற்கு
அல்லல் பட்ட என்
அன்னையின் முலையிலே
அரவணைத்து ஊட்டுவதற்கு
பால் இங்கே பொய்த்தமையால்
அன்னையாய் நினைத்து என்
பசியினை போக்கிட
கோமாதாவே உன்
மடியினை அடைகிறேன்
பசியின் கொடுமையால்
தஞ்சமென நினைத்து!

=================

பற்பல கற்பனையில்
பல்லாயிரம் செலவு செய்து
படிப்பிலே தேறிய நான்
பட்டதாரி ஆகிவிட்டேன்!

பட்டத்திற்கு வேலையின்றி
படிப்பிற்கும் தொடர்பின்றி
பக்குவமாய் சேர்ந்து விட்டேன்
பஸ் நடாத்துனராக!

பல நாட்களின் முன்பு
பார்த்து பார்த்து வளர்த்த என்னை
பாசம் மிக்க பத்தினிக்கு
மணம் முடித்து வைத்தனர்!

பாசத்தின் பகிர்வாலும்
வாழ்க்கையின் துளிர்ப்பாலும்
பாலகனாய் வந்துதித்தான்
பாசமிக்க மகனொருவன்!

பணத்திற்கும் குறைவின்றி
பாசத்திற்கும் பஞ்சமின்றி
பக்குவமாய் என் மகன்
பாரினிலே வளர்ந்து வந்தான்!

பாழாய் போன விலைவாசி
நொடிகூட தயக்கமின்றி
பாசமான என் வாழ்வை
பறித்து இங்கு செல்கிறது!

பஸ் கட்டண உயர்வினால்
பஸ் நடாத்துனர் எனக்கு
வேலை வாய்ப்பு எல்லாம்
பார்த்திருக்க பறிபோனது!

பசி வீட்டிலே மேலெடுக்க
பத்தினியானவள் அங்கே
பத்திரகாளி ஆகிவிட்டாள்
பரதேசி ஆகினேன் நான்!

பாலின் விலை உயர்வால்
பாலகனின் தோற்றமிங்கே
பார்க்க முடியா கேவலமாய்
பட்டை தேய்ந்து போனது!

பாசமான என் குடும்பம்
பாதி இங்கே சீரழிந்து
படும்பாட்டை பார்க்கையிலே
பாழாய் போன அரசியலை
போட்டுடைக்க மனம் இங்கே!

விலைவாசிக்கெதிராக
வீறுகொண்டு எழுந்து செல்ல
விழியிலும் வழியில்லை
உடலிலும் தெம்பில்லை!
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12036
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: முடிவுற்ற தமிழக அரசியல் பார்வை -ரூபாய். 2500 பரிசுப்போட்டி - இன்றைய தமிழக அரசியல்

Post by ஆதித்தன் » Sun Jul 15, 2012 7:42 pm

அன்று நம் நாட்டினிலே
அடுக்கடுக்காய் கட்டிடங்கள்
உயர உயர சென்றது
அனைவரும் அதை பார்த்து
ஆனந்த வெள்ளத்தில் பிரமிப்பாய் நாம்!

வள்ளுவன் பெருமை கூற
பல அடி உயரத்தில்
பார்ப்பவர் மலைக்கும் படி
கன்னியா குமரியினில்
வள்ளுவர் சிலை!

உலக அதிசயத்தில்
உலகமே பாராட்டும்
காதலின் சின்னமான
பெயர் கூறும் தாஜ்மஹால்
நாட்டினின் பெருமையாய்!

இத்தனையும் நம் நாட்டின்
பெருமையை பெயர் சொல்ல
உலகமே ஓர் நொடி
கண்ணிமைக்க மறந்து
திரும்பிப் பார்த்தது!

இன்று நம் நாட்டில்
அடுக்கடுக்காய் எகிறுகிறது
அன்றாட தேவைகளின்
விலைவாசி உயர்வுகள்
ஆக்ரோஷ சோகத்தில் பிரமிப்பாய் நாம்!

இன்றும் நம் நாடு
வெளியுலகில் பிரமிப்பாய்
உலக அதியங்களால் அல்ல
உள்நாட்டில் உண்டான
உயர்வான விலைகளால்!

உலகமே நம்மை
ஒரு நொடி திரும்பி பார்க்கிறது
இத்தனை நிலையிலும்
இந்தியர் என்ற நிலையில்
தடுமாறாமல் வாழ்வதால்!

=====================

அணுமின் நிலையம் எனும் பெயரில்
அணுவணுவாய் மக்களின்
அருமையான உயிர்களை
அடாவடியாய் காவு கொள்வதில்
அரசே உனக்கேன் அப்படி
அளவில்லா அவசியம்?

கூடங்குளம் எனும் பெயரில்
கூட்டாக வாழும் நம்மை
கூண்டோடு அழிப்பதற்காய்
கூட்டங்கள் கூடி அங்கே
கூட்டு ஒப்பந்தங்களில்
சபதங்கள் எடுத்து வந்தாயா?

உலகினிலே உன் வளர்ச்சியை
உயர்த்துவதாய் எண்ணி இங்கே
உயிரோடு இருக்கும் எம்மை
குழிதோண்டி புதைத்துவிட
உன்னாலே முடியகிறதா
ஒரு நிமிடம் சிந்தித்திடு!

அணு உலையில் நீ வளர்ந்தால்
அகிலமே உன்னை போற்றும்
அப்பாவி உயிர்களிற்கு இங்கு
அமைதியான வாழ்வு
அப்போதே தொலைந்து விடும்
அரசே ஒரு நிமிடம் சிந்தித்திடு!

=====================

ஒருவர் - எம் பொண்ணுக்கு வாற மாதம் திருமணம் செய்ய நினைக்கிறன்.

மற்றவர் - நல்ல விடயமாச்சே. மாப்பிளை என்ன பண்ணுறார்? வரதட்சணை என்ன கேக்கிறாங்க?

ஒருவர் - நல்ல குடும்பம். மாப்பிளையும் பெரிய இடத்தில தொழில் பண்ணுறார். சீதனமா காசு நகை எதுவுமே வேணாமாம்.

மற்றவர் - அப்பிடியா நல்லதா போச்சே. சீக்கிரமா பொண்ண கட்டி குடப்பா உனக்கு இன்னும் 2 பொண்ணு இருக்கெல்லா இவள சீதனம் இல்லாம சும்மா எடுத்தா உனக்கு நல்லம் தானே

ஒருவர் - அட போப்பா அவங்க காசு நகை வீடு வளவு இந்த சீதனம் எதுவும் வேணாமாம். தங்களுக்கு 1 சோடி கறவை மாடு வேணுமாம். அப்பிடியே பையன் ஆபிஸ் போய் வாறதுக்கு நல்ல விலையுயர்ந்த குதிரை வண்டி வேணுமாம். அதோட ஒரு சோளர் (சூரிய அடுப்பு) வாங்கி தந்தால் போதுமாம். தாங்கள் பொண்ண சீமாட்டி போல பாப்பினமாம்.

மற்றவர் - நல்ல விபரமான குடும்பம் தான்

=====================================

]படுகை.காம் இங்கே
பரிசுப் போட்டி தொடங்கியது
பக்குவமாய் வென்றுவிட
பதிவுகள் தொடங்கினேன்!

ஒவ்வொரு பதிவையும்
ஒழுங்குபடுத்தி சேர்த்து
ஒழுங்காக பதிவதற்கு
ஒரு நாள் போதாது!

ஒவ்வொரு பதிவோடும்
நான் போட்டி போடுவது
போட்டியாளருடன் மட்டுமல்ல
மின்னசார சபையுடனும் தான்!

ஒரு பதிப்பு செய்து விட
ஓராயிரம் சிந்தனைகள்
ஒருங்கே வருகின்றது
ஒருநிலையற்ற மனதினிலே!

அத்தனையையும் சிந்தித்து
பதிவாக தொடுக்கையிலே
பாதியிலே மின்னசாரம்
பட்டென பறிபோனது!

ஒழுங்குபடுத்திய சிந்தனைகள்
ஒரு நொடிப் பொழுதிலே
ஒளியிழந்த அறை போல
இருள்சூழ்ந்து போனது!


பரிசினை வென்று விட
கரு எனக்கு தேவையில்லை
கணப்பொழுதும் நின்று வரும்
மின்சாரமே என் கரு!

இன்று எம் நாட்டினிலே
ஒளியிழந்து போவது
ஒவ்வொருவர் வாழ்க்கையல்ல
ஊரிலுள்ள தெருவிளக்குகளும்!

தினம் தினம் இங்கே நாம்
மின்சார சபையுடனும்
அதிகரிக்கும் கட்டணத்தோடும்
அணுதினமும் மோதுகிறேன்

இருந்தும் இங்கே நடக்கும்
அரசியல் நிகழை்ச்சிகளுக்கு
எத்தனை எத்தனை
கண்கவர் மின்குமிழ்கள்!

இத்தனையையும் பார்த்து
இறைவனை நோவதா?
இன்று நம் நாட்டின்
அரசியலை நோவதா?

=================

தேவிகா அக்கா நீங்க கேட்டதற்கிணங்க ஏதோ எனக்கு தெரிஞ்சத எழுதி இருக்கன். நீங்க சொல்ற போல கோவமா இருக்கா தெரியல. பாத்துகோங்க


சுதந்திரமான நாட்டை கேட்டேன்

லஞ்சமில்லாத சமூகம் கேட்டேன்;

இரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்;

ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்;

மக்களை சுரண்டாத அரசைக் கேட்டேன்;

வாக்களிக்க சுதந்திரம் கேட்டேன்;

ஒவ்வொருவருக்கும் உரிமை கேட்டேன்;

பெண்களிற்கு நல் வாழ்க்கை கேட்டேன்;

பெற்றவர்களை மதிக்க கேட்டேன்;

சினிமா மோகம் மறைய கேட்டேன்;

ஆன்மீக வழியில் நடக்க கேட்டேன்;

பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்;

பொருட்களின் விலையை குறைக்க கேட்டேன்;

போட்டியில்லாத அரசியல் கேட்டேன்;

ஒவ்வொருவருக்கும் தொழிலை கேட்டேன்

வேலையில்லாதோர் குறைய கேட்டேன்

தொழில் வழங்கலில் உயர்வை கேட்டேன்;

பட்டதாரிகளுக்கு வேலை கேட்டேன்;

படிப்பிற்கேற்ற வேலை கேட்டேன்;

தினமும் உண்ண உணவை கேட்டேன்;

பட்டினிச் சாவு மறைய கேட்டேன்

மக்கள் எல்லாம் மகிழ கேட்டேன்;பஸ்ஸின் கட்டணம் குறைய கேட்டேன்;

பெற்றோலிற்கு நிரந்தர விலை கேட்டேன்

பாலின் விலையை குறைக்க கேட்டேன்;

பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு கேட்டேன்

அணுமின் உலையை மூட கேட்டேன்;

ஆயுள் பிச்சை போட கேட்டேன்;

மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்;

ஏற்றத் தாழ்வு மறைய கேட்டேன்;

ஜாதிக் கொடுமை ஒழிய கேட்டேன்;

ஜாதிக்கட்சி மறைய கேட்டேன்;

படித்தவனுக்கு அரசியல் கேட்டேன்;

பண்பாட்டாளனுக்கு பதவி கேட்டேன்;

எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்

எல்லார் வாழ்வும் செழிக்க கேட்டேன்;

கண்ணீர் துளியை மறக்க கேட்டேன்

பணத்தின் மதிப்பை குறைக்க கேட்டேன்;

குழந்தை குடிக்க பாலைக் கேட்டேன்

பொருட்களின் விலையை குறைக்க கேட்டேன்;

போராட்ட வாழ்வை ஒழிக்க கேட்டேன்;

ஊழல் செய்வோரை தண்டிக்க கேட்டேன்;

வரதட்சணை கொடுமை மறைய கேட்டேன்;

பெண்களுக்கும் தொழிலைக் கேட்டேன்;

பேரம் பேசாத உறவுகள் கேட்டேன்;


மின்சார கட்டணத்தை குறைக்க கேட்டேன்;

அரசியல் ஆடம்பரம் ஒழிய கேட்டேன்

ஜனநாயக நாட்டைக் கேட்டேன்;

ஜனங்களின் கருத்தை மதிக்க கேட்டேன்

ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி கேட்டேன்

குழந்தை பேறிற்கு சலுகைகள் கேட்டேன்;

வளைகாப்பிற்கு உதவி கேட்டேன்;

ஏழைகளை மதிக்கும் அரசை கேட்டேன்;

இந்தியன் என்கின்ற உரிமையை கேட்டேன்;

ஒற்றுமையான மக்களை கேட்டேன்;

தீவிரவாதம் ஒழிய கேட்டேன்;

மதக்கலவரம் ஒழிய கேட்டேன்;

பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்;

பாரினில் மாதர்க்கு விடுவு கேட்டேன்;

மாயங்கள் யாவும் ஒழிய கேட்டேன்;

மண்ணில் யாவர்க்கும் நல்வழி கேட்டேன்;

சொந்த உழைப்பில் சோற்றைக் கேட்டேன்;

உழைப்பிற்கேற்ற ஊதியம் கேட்டேன்;

இயற்கையான உணவை கேட்டேன்;

செயற்கைகள் யாவும் குறைய கேட்டேன்;

இயற்கை வளத்தை காக்க கேட்டேன்;

இதமான நல் வாழ்வை கேட்டேன்;இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்;

துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்;

தொலைந்து விடாத பொறுமை கேட்டேன்;

அரசியல் பற்றிய அறிவை கேட்டேன்;

சட்டங்கள் பற்றிய தெளிவை கேட்டேன்;

கயவரை எரிக்கும் கண்கள் கேட்டேன்;

கலப்படமில்லா மருந்து கேட்டேன்;

சேமிக்கும் குணத்தை வளர்க்க கேட்டேன்

கூடாம்குளத்திற்கு முடிவு கேட்டேன்;

கூடிப் பேசி முடிவெடுக்க கேட்டேன்

ஏற்றுமதியை உயர்த்திட கேட்டேன்

வெளிநாடு செல்வோரை தடுக்க கேட்டேன்

உள்நாட்டிலே தொழில் செய்ய கேட்டேன்

கட்டாய கல்விக்கு பிரகடனம் கேட்டேன்

இலவசமான கல்வியை கேட்டேன்;

காசே வேண்டாம் கருணை கேட்டேன்;

தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்;

சுதந்திரமான வாழ்வை கேட்டேன்

இந்திய நாட்டின்வளர்ச்சியை கேட்டேன்;

இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை

இதிலே எதுவும் நடக்கவில்லை

வாழ்வே வாழ்வே வேண்டாமென்று

மரணம் மரணம் மரணம் கேட்டேன்..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12036
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: முடிவுற்ற தமிழக அரசியல் பார்வை -ரூபாய். 2500 பரிசுப்போட்டி - இன்றைய தமிழக அரசியல்

Post by ஆதித்தன் » Sun Jul 15, 2012 7:45 pm

அரசிற்கு அரசு போட்டி
அதிகமாக அன்றாட பொருளிற்கு
அதிக விலையேற்றுவது யாரென....!

ஐயா அரசு தோற்றது
அம்மா அரசு வென்றது
அதிகமான விலையேற்றத்தில்....!

சத்துணவு கொடுத்த நாட்டில்
சாப்பாட்டிற்கு கூட இன்று
சனங்கள் அல்லாடுது.....!

தினம் தினம் பஸ்ஸில்
பள்ளி சென்ற பிள்ளைகள்
நடந்து செல்ல தெம்பு இன்றி......!

நாளாந்த உணவிற்கும்
நல்லுணவு பாலிற்கும்
நாதியற்ற மக்களிங்கே......!

என்று தீரும் இந்த துன்பம்
எப்போ குறையும் விலையேற்றம்
ஏக்கத்தோடு நாம் இங்கே......!

====================

பாத்து பாத்து ஓட்டு போட்டு
பாழாய் போச்சு வாழ்க்கை இங்கே
பஸ் வண்டி ரிக்கற் முதல்
பாலிற்கான விலை மட்டும்
பார்த்திருக்க ஏறிப்போச்சு

விஞ்ஞான முன்னேற்றம்
விழுங்கி நிற்கு நம் வாழ்க்கைதனை
கூடாங்குளம் எனும் பெயரில்
குழிபறிக்குது குடும்பங்களை
வேண்டாமே விஞ்ஞானமிங்கே

காத்திருந்து காத்திருந்து
காலமிங்கே ஓடிப் போச்சு
கனவு கண்ட வாழ்க்கை எல்லாம்
கணப்பொழுதில் கானலாச்சு
கண்டிடுமா விடிவெள்ளி
காத்திருக்கும் வாழ்க்கைக்கு!

=====================

இன்றோடு படுகையில் நம்
போட்டிக்கு முடிவு வந்தது
இருந்தும் நம் போட்டியின்
தலைப்பிற்கு முடிவில்லை!
இது எம் வாழ்வின்
தொடர்கதையா அல்லது
தொடரும் கதையா?

எத்தனை எத்தனை
மனதின் குமுறல்கள்
எத்தனை எத்தனை
வேதனையின் வரிகள்
எத்தனை எத்தனை
கேலிச் சித்திரங்கள்
இத்தனையும் இங்கு
நம் அரசியலை மாற்றிடுமா?

உள்ளத்து குமுறல்களை
உடைத்தெறிய காத்திருந்த
உண்மை உறவுகளுக்கு
ஊக்கமளித்து வழிவகுத்த
படுகைக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்தென்ற வார்த்தைக்குள்
வார்த்தைகளை அடக்க முடியா
அரசின் காதுக்குள்
இத்தனையும் சென்று நின்றால்
இன்னும் மகிழ்ச்சியே!

பாலின் விலையுயர்வால்
பச்சிளம் பாலகர்கள் முதல்
பொல்லூன்றும் வயோதிபர் வரை
படும் பாட்டை இன்னும்
பாழாய் போன நம்
பகட்டு அரசியல்வாதிகள்
பார்க்கத்தான் இல்லையா?

பஸ் கட்டண உயர்வினால்
பள்ளி செல்லும் பிள்ளை முதல்
பதவிக்கு செல்லும் அலுவலர் வரை
பரிதவித்து நிற்பதை
பார்த்தும் பார்க்காது
பதுங்கியிருக்கும் அரசியலை
எப்படி தான் ஆதரிப்பது?

மின்சார பிரச்சினையால்
கல்லூரி மாணவர் முதல்
கடைத்தெரு வியாபாரி வரை
கதிகலங்கி நிற்பதை
காண்பவர் யாருமில்லையா?
பரீச்சைக்கு படித்திட
பள்ளி செல்லும் மாணவரை
பாழாய் போன மின்சாரம்
பழிவாங்கி நிற்கிறது!

தொழில்துறை வளர்ச்சியில்
விரைவு பயணத்தை எண்ணி
விரிவுபடுத்திய லிப்ட் பயணத்தில்
பாதியிலே மின்சாரம்
பறிபோய் நிற்கையிலே
பதறிப் போய் லிப்ட்க்குள்
மாட்டி நிப்பவர் நிலைகளை
என்று தான் அறிந்திடுமோ
இந்த எழுமாற்றான அரசியல்!

கூடங்குழம் எனும் பெயரில்
குழிதோண்ட காத்திருக்கும்
பணக்கார வர்க்கங்களும்
அதன் பலனாய் இங்கு
பறிபோக காத்திருக்கும்
ஏழைகளின் வாழ்க்கையும்
எத்தனை எத்தனை சோகம்
இத்தனையும் இங்கு
புரியவில்லையா நம் அரசிற்கு?

குளு குளு அறையிலே
24 மணி நேர மின்சாரத்தில்
பாதுகாப்பிற்கென பல
வாகனங்களை முன்னுக்கும் பின்னுக்கும்
அணிவகுக்க சென்று வரும்
பணக்கார வர்க்கத்து
அரசியல்வாதிகளே நீங்கள்
என்று தான் உணர்வீர்கள்
நம் ஏழை மக்களின்
அன்றாட கஷ்டங்களை?

======================

பெற்றவரை இழந்த நாம்
பற்பல இன்னலில்
பஸ் ஸ்ராப் முதல்
பால்கார கடை வரை
காலை மாலை என்றும்
கடும் மழை வெயிலென்றும்
கண்டு கொள்ளாது
பலரிடம் கையேந்தி
பிச்சை என்ற பெயரில்
சில சில்லறைகளை சேர்த்து
கிடைத்ததை வைத்து
சிறியவனிற்கு பாலும்
சற்றே பெரியவன் நான்
வயிற்றை கழுவ ஏதும்
வாங்கி உண்ட காலமது!

இன்று
பால் விலையேற்றத்தால்
பாலகன் பட்டினியாய்
தண்ணீர் மட்டும் தஞ்சமென
நானோ உண்ணவும் ஏதுமின்றி
கேட்கவும் ஆள் இன்றி
அம்மா........
உனக்கு எங்களின்
அவலக்குரல் இன்னும்
கேட்கவில்லையா?
விடிவு என்ற சொல்லை
நம் வாழ்க்கைக்கு
வழங்க மாட்டாயா?

====================
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12036
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: முடிவுற்ற தமிழக அரசியல் பார்வை -ரூபாய். 2500 பரிசுப்போட்டி - இன்றைய தமிழக அரசியல்

Post by ஆதித்தன் » Sun Jul 15, 2012 7:46 pm

எனது இரண்டாவது படைப்பு:
[td=575,green][center][size=200][color=#FFFF00][u]அரசு நிர்வாகமும் - விலை உயர்வும்[/u][/color][/size][/center] அன்பான என் தமிழ் மக்களே! தாயுள்ளம் கொண்டவர்களே! வணக்கம்! பல்வளமும் கொண்ட எம் தமிழ் நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொதியோ கொதி என்று கொதித்துக் கொண்டிருக்கும் நிலை, பால் விலை உயர்வு! பஸ் கட்டண உயர்வு! வர இருக்கும் மின்சாரக் கட்டணம் உயர்வு!!! பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரை, விலை ஏற்றம் என்பது நம்மை தொடர்ந்து கொண்டே வருகிறது என்பதனை அறியாதவர்களா நாம்? அறிந்தும், அறியா விலையேற்றத்தின் பின்பக்கம் காணாது கொதியோ கொதியென்று கொதிக்கும் உள்ளக் குமறல்களை காணின் கொண்ட விலை ஏற்றமும் தவறோ!! எனச் சிந்திக்க மறக்கவில்லை, விலை உயர்வின் தாக்கம் புரிய மறுக்கவில்லை. ஒன்றா? இரண்டா? ஐந்து ரூபாய் அல்லவா ஏற்றிவிட்டார்கள்! பஸ் கட்டணத்தின் அதிகபட்ச விலையில் குறைந்தபட்சம் ரூ.5 அல்லவா ஏற்றிவிட்டார்கள். இதற்கு முன்னர் எவரும் செய்யாத சாதனையையும் இதில் அல்லவா செய்துவிட்டது, தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றத் துடிக்கும் அரசு இயந்திரம். உணவுப் பொருள் மீதும் பார்வை கொண்டு.. கொண்ட கண் வாங்கி செல்லும் முன்னே! சிறிதும் சிந்தியாமல் ஏற்றிவிட்டனரே!!! ரூபாய் 6 அல்லவா ஏற்றிவிட்டனர். ஒர் லிட்டர் பாலின் விலையில்... பெரு ஏற்றமாய் ஆறு என்றல்லவா ஏற்றிவிட்டனர், ஆற்றின் நீளத்தைக் கூட்டத் தெரியாதவர்கள். குறைந்த விலை பாலினால், மக்களை விட இடைத்தரகர்கள் தான் இலாபம் ஈட்டுகின்றனர் என்ற குற்றம் சுமத்தியவர்கள், சிறிது காலத்தில் தனியாரும் விலையேற்ற துணையாக இருக்கும், இந்த விலை ஏற்றங்கள் என அறிய, உணர மறுப்பது ஏனோ? குற்றத்தை தடுக்க இதுதானா வழி? [color=#FFFFFF]கஜானா காலி!... நிர்வாகம் சீர்குழைந்தது!... கடனில் மூழ்கியது!... தத்தளிக்கும் அரசு யந்திரத்தை சீராய் இயங்க வைக்க, ஏற்றம் எனும் கசப்பு மருந்தும் கட்டாய தேவை! நட்டத்தில் இயங்கும் பேருந்து துறை நிர்வாகமும் .. கடனில் மூழ்கி இருக்கும் பால் துறை நிர்வாகும் மீள் பெற விலை உயர்வு கட்டாயம் தேவை! நிலையான நிர்வாகமும், நிலையற்ற அரசும் தூங்கி வழிந்ததாம் துறுகெட்டு போனதாம். அதனை தாங்கி நிலை நிறுத்த கட்டண ஏற்றமும் சரியானதே!.[/color] இவ்வாறாக எல்லாம் நான் சொல்லவில்லை, "இரட்டை இலை" காட்டி, பட்டி தொட்டி எல்லாம் மிகை படர்ந்த வாக்குகளைப் பெற்று, தமிழக மக்கள் யந்திரத்தின் நாடியைப் பிடித்த அரசு சொல்கிறது. பெட்ரோல் விலை ஏற்றத்தின் போதெல்லாம் அதனை திரும்பப் பெறச் சொன்ன கட்சி சொல்கிறது. நான் சொல்லமாட்டேன். அரசு நிர்வாகத்தினைப் பற்றி நான் சொல்லமாட்டேன். நிர்வாகத்தினை சீர்திருத்த எடுக்கப்பட்ட விலை ஏற்றத்தினைப் பற்றி நான் சொல்லமாட்டேன். ஏனெனில், லாபம் நட்டம் பார்த்து நிர்வாகம் பண்ண வேண்டுமான தொழில் மேலாண்மை மேற்படிப்பை நான் படித்திலனே! மெத்தப் படித்தவர்கள்... நிர்வாக மேலாண்மை பட்டம் பெற்றவர்கள்... நீண்ட அனுபவம் கொண்டவர்கள்... நிர்வாகத்திலே பல வெற்றிச் சாதனைகளைக் கொடுத்தவர்கள்... எடுத்த விலை ஏற்றத்தினைப் பற்றி கருத்துக் கூற நான் என்ன படித்தவனா? நிர்வாகப் படிப்பியல் பட்டம் என்றால், பறக்கவிட நூல்க்கண்டு கொண்டுவரவா? எனச் சொல்லும் அறிவினன் நான், கருத்துச் சொல்ல முடியுமா? .. தொழில் துறையிலே தோற்றவன் ... தொங்கிய வணிகத்திலே கால் பதிக்க தயங்குபவன் ... தொடங்கிய இணைய துறையிலே வெற்றிக்காக போராடி ... போராடி போராடி... போராட்டமே தொடர்களமாகி தொடக்கமே காணாதவன் ... நான் கருத்துக் கூற முடியுமா? அறிவுரையும் சொல்ல முடியுமா? ஆயினும், [b][i][color=#FF00FF]"உண்மையை சொல்வதற்கு படிப்பதெற்கு -எல்லாம் உணர்ந்தவர்போல் நடிக்கும் நடிப்பெதற்கு கண்கண்ட காட்சிகட்கு விளக்கெதற்கு -நெஞ்சில் கள்ளமில்லா தவர்க்கு பயமெதற்கு"[/color][/i][/b] என்ற பாடலின் படி, [color=#FFBFFF]சாட்டைக்குச் சாட்டையாய் சரியான பதிலடியாய் சார்ந்த அரசியலாரை சாரை சாரையாய் வாட்டியவர்கள் சற்றும் சிந்தியாமல் சர்வ சாதாரணமாய் சாதாரண மக்களை சந்தைக்கும் செல்லவிடாமல் பேரூந்தும் ஏறவிடாமல் பெரு ஏற்றத்தை விலைவாசியில் கொடுத்த, அரசே!!!! ஒற்றை ரூபாய்க்கு ஓர் கிலோ அரிசியை ஒன்றுமில்லாமால் ஆக்கியதேன்? ஒத்தை ரூபாய்கூட சம்பாதிக்க வழியற்றவன் என்பதனாலா? ஆட்சிப் பீடத்தை பிடித்துவிட்டோம் என்பதை சொல்லிக் காட்டவா? விழி பிதுங்க வைத்துவிட்டீர்களே!!! விட்டில் பூச்சியாய் எண்ணி விட்டீர்களே!!! செவி குளிர்ந்த வாக்குறுதியும் கண் குளிர்ந்த விளம்பரமும் நேர்த்தியாய் முடித்துவிட்டதே! நடுத்தர மக்களை நரக குழியில் தள்ளிவிட்டதே![/color] இன்றைய தவறான பொருளாதாரக் கொள்கையால் பெரும்பான்மையான பொருள்களின் விலைகள் ஏற்றம் கண்டுவிட்ட நிலையில், அரசின் இந்த விலை ஏற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்படுவது, மாதம் வரும் வருவாயில் முழுமையாக மகிழ்ச்சியான வாழ்வினை வாழ முடியாத நடுத்தர மக்களே! தாயுள்ளம் கொண்டு அனைத்து மக்களையும் ஒர் நிலையில் வைத்து அழகு பார்க்க வேண்டிய அரசு, நடுத்தர மக்களிடம் பிடுங்கி மேல்மட்ட மக்களுக்கு மானியத் தொகையாகவும், குறைந்த வட்டிக்கும் என அள்ளிக் கொடுப்பது எந்த விகிதத்தில் நியாயம்? அரசின் இந்த முடிவினைக் கண்டு என்ன சொல்வது என்றே பொதுமக்களுக்குத் தெரியவில்லை. ஆனாலும், பிற கட்சிகள் இந்த விலை ஏற்றத்தினை திரும்பப் பெற பல கண்டன குரல்களை ஒலித்தும் எந்தவொரு பலனும் இல்லை. அதிலும், கடன் கடன் ... முந்தைய ஆட்சியின் தவறான ஆட்சி முறையினால் கஜானாவே காலி எனச் சொல்லும் முதல் அமைச்சர், இந்த விலை ஏற்றத்தினை திரும்பப் பெறமாட்டார் என்பது நன்கு தெரிகிறது. சற்றேனும் குறைக்கமாட்டாரா என்ற கனவு தகர்ந்தது போலத்தான் இருக்கிறது இன்றைய அரசியல் சூழ்நிலை. நானும், விலை ஏற்றத்தினைப் பற்றி ஒர் சில பெண்மணிகளிடம் கருத்துக் கேட்டேன். அவர்கள் சொன்னது, [quote]நாம தான்.. அம்மா அம்மான்னு ஓட்டுப் போட்டோம். இன்று விலையை ஏற்றிப்பிட்டாங்க .. அவங்களுக்கு என்ன கஷ்டமோ .. என்ன கடன் பிரச்சனையோ!!!![/quote] [quote]கேள்வி: நீங்க பஸ்லயா வந்தீங்க? டிக்கெட் விலை குறைச்சிட்டாங்களாமே?? பதில் : ஆமா, குறைச்சிட்டாங்க .. 500 ரூபா குறைச்சிட்டாங்க ...[/quote] [quote]கேள்வி: பஸ் டிக்கெட் விலை ஏறிட்டாமே? பதில் : நாம என்ன பண்ண முடியும்.. அவங்க வந்தாங்க ஏத்திட்டாங்க ...[/quote] [quote] கேள்வி: பால் விலை ஏறிட்டாமே? பதில் : பால் மட்டுமா ஏறிடுச்சி.. எல்லாம் தான் விலை ஏறிடிச்சி...[/quote] இரட்டை இலை ஆட்சிக்கு வரவேண்டும்.. அம்மா ஆட்சிக்கு வரவேண்டும் என பலதர மக்களும் ஒட்டு மொத்தமாக குத்தி தள்ளினார்கள்... இன்று, என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்கிறார்கள் என்று சொல்லவா? அல்லது, இந்த விலை ஏற்றம் என்பது கட்டாயம் தேவை என்பது சொல்வதா??? ஏதுமே புரியவில்லை. அதுவும் பலரிடம் இருந்து வந்த விரக்தியான பதில்களிலிருந்து என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நாளுக்கு நாள் கூடிக் கொண்டுவரும் ஒவ்வொரு பொருட்களின் விலைவாசியினை கட்டுக் கொண்டுவரத் தெரியாத, முடியாத, அரசு! இன்று, புதியதோர் விலை ஏற்றத்திற்கு வித்திட்டுள்ளது என்பது மட்டுமே என் ஆதங்கம். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. ஆனாலும், நம் மோகம் அதன் மீது இருந்து குறைந்தபாடில்லை. இதனை நாம் என்னவென்று சொல்வது? எந்தவொரு பணியினையும் செய்யாமல் இன்று பணமே பணத்தினை சம்பாதிக்கும் புதியதொரு யுக்தியினை தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக சொன்னால், ஷேர்மார்கெட் மற்றும் ரியல் எஸ்டேட் பிசினஸ். இதனால் உழைக்கும் வர்க்கும் பெரிதும் பாதிக்கப்படுகிறது, என நான் நம்புகிறேன். அதனைக் கட்டுக்குள் கொண்டுவராமல் வேடிக்கைப் பார்க்கும் அரசு.. எந்தவொரு நடவடிக்கையின் மூலமாகவும் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர முடியாது. விலை ஏற்றம் என்பது தவிர்க்க முடியாது எனச் சொல்லும் அரசு, மானியமாகவும், இலவசமாகவும் பல திட்டங்களை அறிவிப்பது ஏன்? ஒற்றைக் கண்ணை பிடுங்கி மற்றொரு கண்ணை உயிருட்ட எங்களுக்குத் தெரியாதா? அரசே! தாங்களை எங்களது இரு கண்களிலும் ஒளியூட்டுங்கள் எனத்தான் கேட்டோம்... இப்படி முட்டாள்தனமாக செயல்பட அல்ல!!! அரசு இயந்திரத்தை சுதந்திரமாகவும் .. மக்கள் நலத்திட்டங்களை தடையின்றி தொடர்ந்திடவும், விலை ஏற்றம் சரியானது எனச் சொல்லும் அரசுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் நடத்துவது மக்கள் நல நிர்வாகம் என்று சொல்லும் அரசு நிர்வாகம் என்று சொன்னால் எவனும் ஏற்றுக் கொள்ளமாட்டான். [b][color=#FFFFFF][center]இலாபம் என்ற குறிக்கோளைக் கொண்டு, மக்களிடம் வியாபாரம் செய்கிறீர்கள்!.[/center][/color][/b] [b][i] கடனில் உலண்டு வரும் நடுத்தர மக்களின் வருவாயை மதிப்பீடு செய்யாமல், ஏற்றப்பட்ட விலை ஏற்றத்தை திரும்பப் பெறுவார்களா? என்ற ஏக்க பெருமூச்சு விடும் மக்களின் நிலைகண்டு, ஆற்றாதோ! இந்த அரசு???[/i][/b] ********************************* [color=#FF0040][b]இவண், செல்வ ஆதித்தன்.கு[/b][/color][/td]
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12036
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: முடிவுற்ற தமிழக அரசியல் பார்வை -ரூபாய். 2500 பரிசுப்போட்டி - இன்றைய தமிழக அரசியல்

Post by ஆதித்தன் » Sun Jul 15, 2012 7:47 pm

நகைச்சுவைப் போட்டி முடிந்ததும் முடிந்தது.. எல்லோரும் நகைச்சுவையில் இறங்கிவிட்டீர்கள். சரி, எல்லோரும் நகைச்சுவையில் இறங்கியப் பின்னர், அத்துறைக்கு நானும் கொஞ்சம் ஈடாக ஒர் படைப்பைக் கொடுத்தால் தான் வெற்றிக் காற்று என் பக்கமும் கொஞ்சம் பார்த்து வீசும். அதற்காக....

===========================================
Tamil Online Job Contest Article - Political Jokes.gif
[td=575,green][size=200][center][color=#FFFFFF][u]விலையேற்றமும் சப்பானியும் - நகைச்சுவை[/u][/color][/center][/size] [b][color=#FF8000]ஆத்தா : எய்யா சப்பானி, இந்தா இரண்டு ரூபா, அண்ணாச்சிக் கடைக்க்குப் போய் பால் வாங்கிட்டு வா...[/color] [color=#FFFF00]சப்பானி : சரி ஆத்தா.[/color] [color=#FF8000]சப்பானி : அண்ணாச்சி, இந்தாங்க இரண்டு ரூபா.. வைச்சிக்கிட்டு ஒர் பால் பாக்கெட்டும், குருவி முட்டாயும் கொடுங்க. :ymbringiton: [/color] [color=#FFFF00]கடைக்காரர்: வாயா சப்பானி, உன்னைத்தான் ரொம்ப நாளா ஆளைக் காணுமேன்னு பார்த்தேன்... வந்துட்டியா.. இந்தா இதைக் கொஞ்சம் படி.. =news [/color] [color=#FF8000]சப்பானி : அண்ணாச்சி, எனக்குத்தான் படிக்கத் தெரியாதுன்னு தெரியாதா .. சரி கொடுங்க , நான் மயிலுக்கிட்ட படிக்கச் சொல்லி கேட்டுட்டு வர்றேன்..[/color]. [color=#FFFF00]கடைக்காரர் : இந்தா பிடிச்சிக்கோ பேப்பர்.. நீயும் மயிலும் நல்லா சேர்ந்து படிங்க ..[/color] [color=#FF8000]சப்பானி : மயிலு... மயிலு ...[/color] [color=#FFFF00]மயில் : ஏன் இப்படி வந்ததும் வராததுமா, கத்துற .. நான் இங்கத்தானே இருக்கிறேன்.[/color] [color=#FF8000]சப்பானி : அது இல்ல மயிலு .. மளிகை கடை அண்ணாச்சி இருக்கிறாரே .. அவருக்கு பேப்பரே படிக்கத் தெரியல ... அதான், உனக்கு படிக்கத் தெரியும்னு சொல்லி, கேட்டு வாங்கிட்டு வந்திருக்கிறேன்... இது என்னென்னு படிச்சி சொல்லு மயிலு... [/color] [color=#FFFF00]மயில் : ஆமா .. எனக்கு ஊர்ல இருக்கிறவனுக்கு எல்லாம் படிச்சி காட்டுறதுதான் வேல ... போ .. [/color] [color=#FF8000]சப்பானி : இல்ல மயிலு .. நீ பெரிய படிப்பு படிச்சிருக்கிறேன்னு சொல்லியிருக்கிறேன் .. மயிலு ... படிச்சிக்காட்டு மயிலு ... படிச்சிக்காட்டு மயிலு ... [/color] [color=#FFFF00]மயில் : சரி சரி கொண்டா .. எதப்படிக்கனும் .. =read [/color] [color=#FF8000]சப்பானி : இந்தா .. இதத்தான் படிக்கச் சொன்னார் ..[/color] மயில் : [size=150]அரசு அதிரடி! பால் மற்றும் பேரூந்து கட்டணம் விலை உயர்ந்தது.[/size] [quote]பஸ் கட்டணம் உயர்ந்ததை தொடர்ந்து நள்ளிரவு முதல் பால் விலை உயர்வும் அமலாகியது.இதன்படி 1 லிட்டர் ஆவின் நீல பாக்கெட் பால் விலை ரூ.6.25 அதிகரித்து ரூ.24 ஆக உயர்ந்தது. இதுபோல் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் 1 லட்டர் ரூ.28 லிருந்து ரூ.34 ஆனது.ஆவின் பச்சை நிற பாக்கெட் 1 லிட்டரின் விலை ரூ.26 லிருந்து ரூ.5 அதிகரித்து ரூ.31 ஆனது.[/quote] [color=#FFFF00]சப்பானி : சரி மயிலு .. நான் போய் அண்ணாச்சிக்கிட்ட சொல்லிட்டு வர்றேன்..[/color]. [color=#FFFF00] சப்பானி : அண்ணாச்சி .. இன்னாங்க .. நான் படிச்சிட்டு வந்திட்டேன், சொல்றேன் கேளுங்க .. [size=150]பாலு ... பாலு ..[/size][/color] [color=#FF8000]அண்ணாச்சி : என்ன சப்பானி பாலு... பாலு..[/color] [color=#FFFF40]சப்பானி : இல்ல .. மயிலு அப்படித்தான் படிச்சா ... மறந்திடுச்சி .. [/color] [color=#FF0000]அண்ணாச்சி : சரி சரி.. வீட்ல போய் .. என்னும் நாலுமுறை உட்கார்ந்து மயிலும் நீயும் படிங்க ...[/color] [color=#FFFF00]சப்பானி : சரி அண்ணாச்சி .. பாலும் குருவி முட்டாயும் கொடுங்க..[/color] [color=#FF0040] அண்ணாச்சி : நீ கொடுத்த இரண்டு ரூபாய்க்கு பேப்பர் மட்டும் தாண்டா கிடைக்கும் ... பாலும் .. முட்டாயும் ஆத்தா தருவா ..போ ..போ .. [/color] [color=#FFFF40]சப்பானி : ஆத்தா வையும் .. பால் கொடு ...[/color] [color=#FF0080]அண்ணாச்சி : டேய் .. இரண்டு ரூபாய்க்கு பால் எல்லாம் கிடைக்காதுடா .. :ymtongue: [/color] [color=#FFFF40]சப்பானி : ஆத்தா வையும் வீட்டுக்குப் போகனும்.. பாலக்கொடு..[/color] [color=#FF0040]அண்ணாச்சி : டேய் டேய் .. கோபத்த கிளராதடா ...போய்டு ..[/color] [color=#FFFF40]சப்பானி : ஆத்தா வையும் .. மயிலுக்கு காப்பி போடனும் .. பாலக் கொடு..[/color] [color=#FF8000]கவுண்டமணி : என்ன அண்ணாச்சி, சப்பானிக்கிட்ட ஊர்க்கதை கேட்கிறீங்களா.. :D [/color] [color=#FFFF40] அண்ணாச்சி : அட போப்பா .. நீ வேற, இந்தப் பயபுள்ளக்கிட்ட தெரியாம மாட்டிக்கிட்டு நான் படுகிற அவஸ்த இருக்கே,,, ~X( [/color] [color=#FF8000]சப்பாணி : ஆத்தா வையும் ,,, மயிலுக்கு காப்பி போடனும் .. பாலக் கொடு...[/color] [color=#FFFF40] கவுண்டமணி : அண்ணாச்சி... இவன பரட்டையாளாயே சமாளிக்க முடியல .. நீங்க என்ன பேசி சமாளிக்கப் போறீங்க .. பேசாமல், பாலக் கொடுத்து அனுப்புங்க அண்ணாச்சி ... :p :p [/color] [color=#FF8000]சப்பானி : ஆத்தா வையும் .. மயிலுக்கு காப்பி போடனும் ,,, பாலக்கொடு ...[/color] [color=#FFFF40]அண்ணாச்சி : %-( டேய் .. 200 மில்லி பாக்கெட் பால் விலை. 6 ரூபாடா ... [/color] [color=#FF8000] சப்பானி : :( ஆத்தா வையும் .. மயிலுக்கு காப்பி போடனும் ,,, பாலக்கொடு ... [/color] [color=#FFFF00]கவுண்டமணி : அவன் அழுதிடப்போறான் அண்ணாச்சி.. பேசாமல் கொடுத்து அனுப்புங்க ...[/color] [color=#FF8000]சப்பானி : =p~ ஆத்தா வையும் .. மயிலுக்கு காப்பி போடனும் ,,, பாலக்கொடு ... [/color] [color=#FFFF00]அண்ணாச்சி : காலையில .. :( எவன் கண்ணுல முழிச்சேனோ .. இந்தாப் பிடி ...[/color] [color=#FF8000]சப்பானி : :D :D .. முட்டாயி :) ...[/color] [color=#FFFF40]அண்ணாச்சி : :-o இந்தா பிடி .. [/color] [/b] =walk =walk =walk[/td]
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12036
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: முடிவுற்ற தமிழக அரசியல் பார்வை -ரூபாய். 2500 பரிசுப்போட்டி - இன்றைய தமிழக அரசியல்

Post by ஆதித்தன் » Sun Jul 15, 2012 7:48 pm

பால் குடிக்க தவற தெரியவில்லை

பேரூந்து கட்டணம் கூட்டியதற்காக
பேரூந்தை தவிர்க்க முடியவில்லை

மின் கட்டணம் உயர இருப்பதை அறிந்தும்
மின்சாரம் இன்றி வாழ பிடிக்கவில்லை

தொலை வாழ்க்கை அழியும் எனவறிந்தும்
தொட்ட அணு உலை மூட வழியில்லை

தோளை உயர்த்திக்கத்தான் போட்டி என்ற போதினில்
தோல்வியினைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12036
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: முடிவுற்ற தமிழக அரசியல் பார்வை -ரூபாய். 2500 பரிசுப்போட்டி - இன்றைய தமிழக அரசியல்

Post by ஆதித்தன் » Sun Jul 15, 2012 7:50 pm

Image
ஏதோ என்னால் முடிந்த அதிரடி தலைப்பு செய்தியுடன் உங்களை எல்லாம் மிக்க மகிழ்ச்சி. அதிலும், மின்சாரக் கட்டணத்தின் விலையினை ஏற்றும் திட்டத்தினை அரசு ரத்து செய்தது என்ற மகிழ்ச்சியான செய்தியை கொண்டு வந்ததில் பெருமை கொள்கிறேன்.
Locked

Return to “படுகை பரிசுப் போட்டி மையம்.”