முடிவுற்ற ரூபாய் 1000 பரிசுப் போட்டி : Happy New Year 2012 Wishes, Calender Wallpapers, Articles, Images

படுகையில் நடைபெறும் பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் ஓட்டெடுப்பினை நடத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்துவது மற்றும் அறிவிக்கப்பட போட்டிப் பதிவுகளை அத்தலைப் பதிவுடன் பின்னூட்டமாகச் செய்ய வேண்டிய மையம்.
Forum rules
உங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.
Locked
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12036
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

முடிவுற்ற ரூபாய் 1000 பரிசுப் போட்டி : Happy New Year 2012 Wishes, Calender Wallpapers, Articles, Images

Post by ஆதித்தன் » Sun Jul 15, 2012 7:24 pm

புத்தாண்டு படைப்புகள் - 2012

புதிய ஆண்டை வரவேற்கும் விதமான, வாழ்த்து படங்கள், கணிணி நாட்காட்டி வால்பேப்பர், 2012 Calender Wallpapers, வாழ்த்து கவிதை, புத்தாண்டு கட்டுரைகள், புத்தாண்டு வரவேற்பு விடியோ, புத்தாண்டு அனிமேஷன், புத்தாண்டு சிறப்பு இமேஜ்.
நாளை வரயிருக்கும் ஆங்கில புத்தாண்டினை வரவேற்கும் விதமாக உங்கள் பார்வையில் கட்டுரையாகவோ, கதையாகவோ, கவிதையாகவோ, நகைச்சுவை துணுக்குத் தொகுப்பாகவோ, அல்லது அதனை வெளிப்படுத்தும் படங்களாகவோ, விடீயோவாகவோ, புத்தாண்டு காலண்டர் வால்பேப்பராகவோ என எப்படி வேண்டும் என்றாலும், உங்கள் சிறப்பு திறமைகளைக் கொண்டு, படைப்பினை சிறப்பாக செய்து இந்நூலின் பின்னூட்டப் பதிவாக பரிசுப் போட்டிக்கான ஆக்கங்களாக கொடுக்க வேண்டும்.

மேலும், எப்பொழுதும் போல.. எது செய்தாலும் முதல் கிரிடிட் படுகைக்கு வழங்க வேண்டும் என்பது கட்டாய விதிமுறை. அதாவது, கவிதை ஆனாலும் சரி கட்டுரை ஆனாலும் சரி... அது உங்களுடைய சொந்த ஆக்கமாய் இருக்க வேண்டும். அதனை முதல் முதலில் படுகையில் தான் பதிந்திருக்க வேண்டும். படங்கள் மற்றும் வீடியோ எனில் சொந்தமாக செய்து, ப்ளாக்கர்/யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டாலும் அதில் படுகை.காம் என்ற வார்த்தையை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். [td=200,#FF0000][b][color=#FFFFFF] [center][size=150]போட்டி வெற்றியாளர்கள் முதல் இடம் - revathimani2011- Rs.1000/= இரண்டாம் இடம் : Aruntha - 5000 Points மூன்றாம் இடம் : Sumayha - 3000 Points[/size][/center] [/color][/b][/td]
[td=200,#008000][b][center][color=#FFFF00]பரிசு விவரம்:[/color] [color=#FFFFFF]முதல் பரிசு : ரூபாய். 1000 2 வது பரிசு : 5000 பாயிண்ட்ஸ்[/color][/center][/b][/td]
[td=200,#FF0000][b][color=#FFFFFF] [center][size=150]போட்டி ஆரம்ப நாள் : 10.12.2011 ஓட்டெடுப்பு ஆரம்ப நாள்: 30.12.2011 போட்டியின் கடைசி நாள்: 31.12.2011 ஓட்டெடுப்பின் கடைசி நாள்: 3.1.2012 வெற்றியாளர்கள் அறிவிப்பு: 4.1. 2012 [/size][/center] [/color][/b][/td]
போட்டிக்கான நிபந்தனைகள்:

1. போட்டியின் வெற்றியாளர்கள் ஓட்டெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்க படுவார்கள். (படுகை பரிசுப்போட்டி விதிமுறைகள் அடங்கும்)

2. குறைந்தது 3 சிறந்த சொந்த ஆக்கங்களை போட்டிக்காக செய்து பின்னூட்டமாக கொடுத்தவர்கள் மட்டுமே வேட்பாளாராக தேர்ந்தெடுக்கப்படுவர். 15 க்கும் மேற்பட்டவர்கள் சிறந்த ஆக்கங்களை செய்தால், அதில் சிறப்பாக செய்தவர்களில் 15 பேர் மட்டுமே வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டியின் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படுவர்.

3. இது மிக முக்கியமான நிபந்தனை. அனைவரும் தனது சொந்த ஆக்கத்தை மட்டுமே இங்கு பதிய வேண்டும். மற்றவர்களின் பதிப்பையோ, பிற தளங்களில் வெளியானவற்றையோ இங்கு பதியக்கூடாது. மீறி பதிந்தால் அவர் போட்டியின் வேட்பாளர் தகுதிக்கு தேர்ந்தெடுக்கப்படமாட்டார். [-X

4. போட்டியின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் மாற்றி அமைக்கும் அதிகாரம் போட்டி அமைப்பாளருக்கும், படுகை நிர்வாகத்திற்கும் உண்டு.

விளக்கமாக:

போட்டி தொடங்கிய நாள் : 10.12.2011
போட்டிக்காக நீங்கள் செய்யும் அனைத்து ஆக்கங்களையும் இன்று முதல் இப்பதிவின் பின்னூட்டப் பதிவாக கொடுத்து வரலாம்.

போட்டி நிறைவு நாள் : 31.12.2011
ஒருவர் எத்தனை கவிதைகள், கட்டுரைகள், இமேஜ்கள் மற்றும் வீடியோ என செய்யும் ஆக்கங்களை அனைத்தையும் ஒவ்வொன்றாய் 31 ஆம் தேதிக்குள் பின்னூட்டமாக கொடுத்திட வேண்டும்.

போட்டிக்கான ஓட்டெடுப்பு தொடங்கும் நாள் : 30.12.2011

மேலும் இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் 30 ஆம் தேதிக்கு முன்னர் 3 சிறந்த சொந்த ஆக்கத்தையாவது செய்திருக்க வேண்டும், அதற்கு பின்னர் கலந்து கொள்பவர்கள் ஓட்டெடிப்பில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள். மேலும், ஓட்டெடுப்பிற்கு சிறந்த ஆக்கங்களை கொடுக்கும் 15 நபர்களே ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். அதற்கும் மேலானவர்கள் 3க்கும் மேற்ப்பட்ட சிறந்த சொந்த ஆக்கத்தினை செய்திருந்தால் 15 நபர்கள் என்பதில் விதிமுறை தளர்வு இருக்கலாம். ஆனால், அர்த்தமற்ற மொக்கை பதிவுகள் போட்டிப் பதிவாய் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும், வாக்கு அளிக்கும் உரிமை 50 பதிவுகளைக் கடந்து வாக்குரிமைப் பெற்ற Voters, Gold Members, Private Friends, Contributors மற்றும் படுகை முக்கிய அங்கத்தினர்களுக்கு மட்டுமே உண்டு.

போட்டி ஓட்டெடுப்பு நிறைவு நாள் : 3.1.2012
போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அதிக வாக்குகளை பெறுபவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். மேலும் வாக்கெடுப்பு , இந்த தேதியின் 24 மணி நேரத்தில் எந்த நேரத்திலும் நிறுத்தப்படலாம், அது நிர்வாகத்தின் உரிமை.


வெற்றியாளர் அறிவிப்பு : 4.1.2012

ஓட்டெடுப்பினை வெளிப்படையாக நடத்துவதன் மூலம், வெற்றியாளரை 12 ஆம் தேதியே அறிந்தாலும்.... கள்ள ஓட்டுக்கள் விழுந்திருக்கலாம் என்ற கருத்து ஏற்படின், வோட்டெடுப்பை மறுபரீசிலனைக்கு உட்படுத்திய பின்னர் சரியான வெற்றியாளரை அறிவிக்கவே ஒர் நாள் தாமத அறிவிப்பு.

போட்டியின் வெற்றியாளர்க்கு பரிசுப் பணம் மூன்று வங்கி வேலை நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும். வங்கி கணக்கு இல்லாதவர்க்கு காசோலையாகவே அல்லது வெஸ்டர்ன் மணி ட்ரான்ஸ்பர் வாயிலாகவோ பரிசுப் பணம் வழங்கப்படும்.

=====================================================
:!! :!! :!! :!!
போட்டி தொடங்கியாற்றி.. சீக்கிரமாக உங்களது படைப்புகளை அள்ளித் தெளியுங்கள்.

:s_thumbsup :s_thumbsup
Image
Image
Image
Image
ஆண்டு மாறும் ஆட்கள் மாறுவார்களா?

நாளை முதல் இதை தொடமாட்டேன்
என சிகரெட் குடிப்பவனும்
இன்றே கடைசி
என சொல்லும் குடிகாரனும்
ஒவ்வொரு வருட இறுதியிலும்
சொல்லும் ஒரு வார்த்தை
புத்தாண்டு பிறக்கட்டும்.

ஆண்டு மாறியதே தவிர
ஆட்கள் மாறவில்லை.

---ராஜாதிராஜா

2012 wallpapers, Happy Wishes Images, Happy New Year, 2012 Wallpaper Calender
Locked

Return to “படுகை பரிசுப் போட்டி மையம்.”