Page 1 of 1

!~!என் வாக்கு உங்களுக்குத்தான் @ (_) @ உண்மை!

Posted: Tue Mar 20, 2012 10:52 pm
by ஆதித்தன்
:ros:
வணக்கம் நண்பர்களே!

படுகை மிக விரைவில் களை கட்டத் தொடங்கிவிடும் என்பதனை, ஒவ்வொருவரின் மகிழ்ச்சி ஆராவர பதிவுகள் மூலம் அறிய முடிகிறது. அதே நேரத்தில் பழைய படுகையில் இருந்த ஒரே ஒர் வசதி இல்லாதது மட்டும் குறையாகத் தெரிகிறது, இருந்தாலும் அதனையும், User Control Panel link க்கு அடுத்து கடைசியாக உள்ள View Your posts என்ற லிங்க் வழியாக, நினைக்கும் பொழுது நம் பதிவிற்கு யார் பின்னூட்டம் கொடுத்திருக்கிறார்கள் என பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இப்படியான சின்னச் சிரமத்தினைக் படுகை கொடுத்தாலும்... பிற்காலத்தில் மிக அற்புதமான வடிவமாய் படுகை மிளிர, ஒர் சில கஷ்டங்களை அனுபவித்துத்தான் ஆக வேண்டும், என்ற நோக்கில் எல்லோரும் ... என்னுடன் ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறேன்.

:wai: :wai:

சரி தானே??

Re: !~!என் வாக்கு உங்களுக்குத்தான் @ (_) @ உண்மை!

Posted: Wed Mar 21, 2012 8:21 pm
by ஆதித்தன்
வாக்கெடுப்பில் பெரும் பிரச்சனை, எவர் வாக்களித்தார் என்பது தெரியாமல் இருப்பது.

நீங்கள் எதற்கு வேண்டும் என்றாலும் வாக்களித்துக் கொள்ளுங்கள், தவறில்லை. ஆனால், வாக்களித்தப்பின் ஒர் பின்னூட்டம் கொடுத்துவிட்டுச் சென்றால் எத்தனை நன்றாக இருக்கும்.

ஏனெனில், நடந்து முடிந்த கடைசி பரிசுப் போட்டியின் வாக்கெடுப்பில், ஒர் சிறு குழப்பம். எனக்குத் தெரியும், இப்படித்தான் வாக்கு முறை நடைபெறுகிறது... ஒருவரால் ஒர் வாக்குத்தான் போட முடியும்... கள்ள வாக்கு இராது என்பது எல்லாம்.

ஆனால், ஒர் சிலருக்குத் தெரியவில்லையே!!!

ஆகையால், ஓட்டெடுப்பிலும் ஒர் சிறிது மாற்றத்திற்குப் பின்னான முடிவிற்குத்தான், இச்சிறு சோதனை ஓட்டம்.

ஆம், வாக்களிப்பவர்கள்... தங்கள் கருத்தினையும் பதிந்து சென்றால் தான் வாக்கு முழுமைப் பெறும், என நிர்ணயிக்கலாம் என நினைக்கிறேன்.

ஆகவே வாக்கினையும், உறுதியான வெளிப்படையான கருத்தினையும் சொல்ல வேண்டியிருந்தால் மன சாட்சிக்குத் துரோகமாக வாக்களிக்க முடியாது அல்லவா???

சரி, இப்போவாவது, வாக்கு அளித்தவர்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்... வாக்களிக்காதவர்களும் வாக்களித்துவிட்டு கருத்தினைச் சொல்லுங்கள்.

காத்திருக்கிறேன்.

Re: !~!என் வாக்கு உங்களுக்குத்தான் @ (_) @ உண்மை!

Posted: Wed Mar 28, 2012 11:44 am
by mnsmani
நான் ஒட்டுபோட்டுட்டேன், ஆமா எதுக்கு இந்த ஓட்டெடுப்பு. எதுவும் தெரியலைன்ன்னலும், நான் ஓட்டுபோட்டுடேன். (அப்பப்பா ஒன்னும்லாத விஷயத்துக்கு பின்னுட்டம் இடுவது ரொம்ப கஷ்டம்பா)

Re: !~!என் வாக்கு உங்களுக்குத்தான் @ (_) @ உண்மை!

Posted: Wed Mar 28, 2012 12:18 pm
by rajathiraja
நான் ஓட்டு போட்டுட்டேனுங்க.
எல்லாரும் yes க்கு போடுறாங்க. அதனால ஒரு சேஞ்சுக்கு No க்கு போடலாமேன்னு போட்டு விட்டேன்.
ஓட்டு போட்டுவிட்டு பின்னூட்டம் போடலாம் என்பது சரி. ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கு.
எனக்கு 5 ஓட்டு கிடைச்சுருக்குன்னு வையுங்க. அடுத்ததாக 6வது ஓட்டு எனக்கு விழுந்ததை பின்னூட்டத்தை பார்த்து தெரிஞ்சுக்கலாமே? அப்போ இவங்க எனக்கு போடலையேன்னு மத்தவங்களுக்கும் தெரிஞ்சுடும். அதற்கு என்ன பண்ணலாம்?

Re: !~!என் வாக்கு உங்களுக்குத்தான் @ (_) @ உண்மை!

Posted: Wed Mar 28, 2012 4:16 pm
by umajana1950
ஆதி,
போட்டி வைக்கும் போது, இந்த ஓட்டெடுப்பு முறையில் எனக்கு உடன்பாடில்லை. இருந்தாலும் எனது கருத்தை சொல்கிறேன். விஜய் டி.வி. போன்றவற்றில் பல லட்சக் கணக்கானோர் வாக்கெடுப்பில் பங்கு கொள்கிறார்கள். அதனால், அங்கே அங்கு சரியான வெற்றியை தீர்மானிக்கும். ஆனால் நம் படுகையில் அதிகபச்சமாக பத்து பேர் கூட ஓட்டெடுப்பில் கலந்து கொள்வதில்லை. இதில், வேட்பாளர்கள் ஐந்து அல்லது ஆறு பேர் இருப்பார்கள். மீதமுள்ள நான்கைந்து பேர் தான் வெற்றியையோ அல்லது தோல்வியையோ தீர்மானிக்கிறார்கள். இது அவ்வளவு பொருத்தமாக இல்லை.
இதற்கு பதிலாக ஒவ்வொரு பதிவையும் பார்க்கும் யார் வேண்டுமானாலும் ஓட்டு போடலாம் என்று வையுங்கள். ஒவ்வொரு பதிவிலும் மூன்று ஆப்ஷன்கள் வையுங்கள். அதாவது,GOOD,BETTER, BEST.இப்படி ஒவ்வொரு பதிவைப் பார்ப்பவர்கள் வாக்களித்து விட்டால், முடிவை நீங்களோ, அல்லது நீங்கள் அமைக்கின்ற குழுவுக்கோ அந்த பொறுப்பை விட்டு விடுங்கள். இதில் உள்ள டெக்னிகல் விஷயங்கள் எனக்கு தெரியாது. ஆனால், இது நடை முறையில் சாத்தியம். எனது கருத்தை முன் வைக்கிறேன். செயல் படுத்துவதும், வேறு வகையில் சிந்திப்பதும் உங்கள் பொறுப்பு. நன்றி.

Re: !~!என் வாக்கு உங்களுக்குத்தான் @ (_) @ உண்மை!

Posted: Wed Mar 28, 2012 8:39 pm
by ஆதித்தன்
rajathiraja wrote:
ஓட்டு போட்டுவிட்டு பின்னூட்டம் போடலாம் என்பது சரி. ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கு.
எனக்கு 5 ஓட்டு கிடைச்சுருக்குன்னு வையுங்க. அடுத்ததாக 6வது ஓட்டு எனக்கு விழுந்ததை பின்னூட்டத்தை பார்த்து தெரிஞ்சுக்கலாமே? அப்போ இவங்க எனக்கு போடலையேன்னு மத்தவங்களுக்கும் தெரிஞ்சுடும். அதற்கு என்ன பண்ணலாம்?
யாருக்கு ஓட்டு போட்டார்கள் என்பதனையும், ஏன் போட்டேன் என்ற கருத்தையும் பதிவாக கொடுக்க வேண்டும் என வைத்துக் கொள்வோமா? என்பதுதான் கேள்வி.

அப்படியாக கருத்துக் கொடுக்க வேண்டியிருக்கும் பொழுது, எந்தவொரு தகுதியும் இல்லாதவர்க்கு வாக்கு அளித்துவிட்டு, இதுக்காண்டி தான் ஓட்டுப்போட்டேன் என்று சொன்னால், டவுசர் கிளிஞ்சிடும் இல்லையா?? ஆகையால் மனசாட்சிக்கு பயந்து சரியாக வாக்கு அளிப்பார்கள் என கருதுகிறேன்.

100% உறுதிப்பாடு கிடையாது.

====================================
umajana1950 wrote:ஆதி,
போட்டி வைக்கும் போது, இந்த ஓட்டெடுப்பு முறையில் எனக்கு உடன்பாடில்லை. இருந்தாலும் எனது கருத்தை சொல்கிறேன். விஜய் டி.வி. போன்றவற்றில் பல லட்சக் கணக்கானோர் வாக்கெடுப்பில் பங்கு கொள்கிறார்கள். அதனால், அங்கே அங்கு சரியான வெற்றியை தீர்மானிக்கும். ஆனால் நம் படுகையில் அதிகபச்சமாக பத்து பேர் கூட ஓட்டெடுப்பில் கலந்து கொள்வதில்லை. இதில், வேட்பாளர்கள் ஐந்து அல்லது ஆறு பேர் இருப்பார்கள். மீதமுள்ள நான்கைந்து பேர் தான் வெற்றியையோ அல்லது தோல்வியையோ தீர்மானிக்கிறார்கள். இது அவ்வளவு பொருத்தமாக இல்லை.
இதற்கு பதிலாக ஒவ்வொரு பதிவையும் பார்க்கும் யார் வேண்டுமானாலும் ஓட்டு போடலாம் என்று வையுங்கள். ஒவ்வொரு பதிவிலும் மூன்று ஆப்ஷன்கள் வையுங்கள். அதாவது,GOOD,BETTER, BEST.இப்படி ஒவ்வொரு பதிவைப் பார்ப்பவர்கள் வாக்களித்து விட்டால், முடிவை நீங்களோ, அல்லது நீங்கள் அமைக்கின்ற குழுவுக்கோ அந்த பொறுப்பை விட்டு விடுங்கள். இதில் உள்ள டெக்னிகல் விஷயங்கள் எனக்கு தெரியாது. ஆனால், இது நடை முறையில் சாத்தியம். எனது கருத்தை முன் வைக்கிறேன். செயல் படுத்துவதும், வேறு வகையில் சிந்திப்பதும் உங்கள் பொறுப்பு. நன்றி.
ஜனா சார், உங்களை எல்லாம் கருத்தில் கொண்டு தான் ஓட்டெடுப்பில் என்ன மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதனையே ஆரம்பித்திருக்கிறேன்.

ஏனெனில் உங்களுக்கு போட்டியில் பங்கெடுத்துக் கொள்ளும் திறமையிருந்தும் பங்கெடுத்துக் கொள்வதில்லை, மாற்றுக் கருத்தினால். அதைப் போன்று கடந்த போட்டியில் நசீர்க்கு மாற்றுக் கருத்து.

அதற்கு முன்னர், ஷாஜகான் சாரரை போட்டியில் காப்பி அடித்தார் என கூற, படுகையை விட்டே விலகிவிட்டார்.

இப்படி ஒவ்வொரு போட்டியிலும் ஒர் சிறு குழப்பம்.

சட்ட திட்டம் என்பது காலத்திற்கு தகுந்தவாறு வடிவமைப்பதுதானே சரி, ஆனாலும் அடுத்து அடுத்து என புதிய விதிமுறையுடன் நெறிமுறைப் படித்தினாலும், பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை.

ஜானா சார் சொல்லும் படி, ஒவ்வொரு பதிவிற்கும் மூன்று ஆப்சன் கொடுத்து தேர்வு செய்வது என்பது, படுகை ஸ்கிரிப்ட்டில் இணைக்கப்படவில்லை. இணைக்க முயற்சிக்கலாம் என்றால் என்னிடம் சரியான நெட் ஸ்பீடு கிடையாது, ஆகையால் இப்போதைக்கு முடிகிற கதை அல்ல. இருக்கிறதை சரியாக பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

அடுத்து, யாரையாவது நடுவராக அமைக்கலாம் என்றால்... நடுவர் என்பவர் பெரியவர் மற்றும் அத்துறையில் சிறந்தவராக இருக்க வேண்டும். அப்படியான நபர்களை தேர்ந்தெடுத்து வாய்ப்பு பெற, நான் ஒன்றும் அத்தனை பெரிய படிப்பு கொண்டவனும் இல்லை.. வசதி வாய்ப்பு கொண்டவனும் இல்லை... அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு படுகையும் ஒர் சிறந்த தளமாய் பெயர் எடுக்கவில்லை. ஆகையால், நடுவர் என்பது படுகை.காம் பெயரினை ஊர் அறிய சிறப்படையச் செய்வதன் மூலம் தான் முடியும்.

என்னும் சிந்திப்போம்... எப்படி என?

Re: !~!என் வாக்கு உங்களுக்குத்தான் @ (_) @ உண்மை!

Posted: Wed Mar 28, 2012 9:17 pm
by Aruntha
நான் யெஸ் போட்டன் ஆனால் பின்னூட்டம் குடுக்க மறந்திட்டன். அது தான் இப்ப சொல்றன். நான் யெஸ் போட்டன் நான் யெஸ் போட்டன் நான் யெஸ் போட்டன் சரியா

Re: !~!என் வாக்கு உங்களுக்குத்தான் @ (_) @ உண்மை!

Posted: Sat Mar 31, 2012 7:01 am
by Oattakaran
ஆதி சார் ஓட்டு போடசொன்னேங்க போட்டாச்சு ஆனால் யெஸ்தான் போட்டேன்

Re: !~!என் வாக்கு உங்களுக்குத்தான் @ (_) @ உண்மை!

Posted: Sat Mar 31, 2012 7:42 am
by muthulakshmi123
ஆதித்தன் சார் ஒரு ஓட்டு தான் நோ...அது யார் போட்டார்கள் என் தெரியாதா...