பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? பரிசு ரூ.1500

படுகையில் நடைபெறும் பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் ஓட்டெடுப்பினை நடத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்துவது மற்றும் அறிவிக்கப்பட போட்டிப் பதிவுகளை அத்தலைப் பதிவுடன் பின்னூட்டமாகச் செய்ய வேண்டிய மையம்.
Forum rules
உங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.
Locked
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12036
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? பரிசு ரூ.1500

Post by ஆதித்தன் » Mon May 26, 2014 11:01 pm

பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?
இன்றைய நாளில் பலரிடம் எழுப்பப்பட்டு வரும் முக்கிய கேள்விகளில் ஒன்றாக இதுவும் இணையத்தில் பரவலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இதற்கான சரியான பதிலை, விரிவான கட்டுரையாக சமர்ப்பிப்பவர்க்கு ரூ.500 வெகுமதி வழங்கப்படும்.


விதிகள்:


1. கட்டுரை 350 வரிகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும். கட்டுரையினை கூடுதல் மேற்கோள், தகவல்கள் மற்றும் படங்கள் மூலம் வலு சேர்ப்பது நல்லது.

2. மூன்று நபர்களுக்கு மட்டுமே பரிசுத்தொகை தலா ரூ.500 வீதம் வழங்கபடும்.

3. படுகை உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கட்டுரையினை சமர்ப்பிக்கலாம். ஆனால், குறைந்தப்பட்சம் 50 பதிவுகளை நிறைவு செய்த உறுப்பினர்களின் கட்டுரைகள் மட்டுமே பரிசுத்தொகைக்கு ஆலோசிக்கப்படும்.

4. மூன்று அல்லது அதற்கும் குறைவான கட்டுரைகள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், அக்கட்டுரை கேள்வியான பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? என்பதற்கான சரியான பதில் + சம்பாதிப்பதற்கான வழிகள் சில + அதனைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் + அதற்கான வரவேற்பு + வருவாய் எதிர்பார்ப்பு என முழுமையான தகவலுடன் இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கேள்வியினை பூர்த்தி செய்யும் அளவிற்கு சரியான கட்டுரைகள் வரவில்லை என்றால், பரிசுத் தொகையானது அடுத்தப் போட்டிக்கு பயன்படுத்திக்கப்படும்.

5. கட்டுரைகள் வருகிற ஜீன் 25-க்குள் இப்பதிவின் பின்னூட்டமாக சமர்ப்பிக்கப்பட்டுவிட வேண்டும்.

6. ஒருவர் சமர்ப்பித்த கட்டுரையையே மற்றொருவர் காப்பி அடித்தல் கூடாது. அவரவர் தன் கட்டுரைக்கான தனித்துவத்தினை சிறப்பாக அமைத்திடுதல் வேண்டும்.

7. சிறந்த கட்டுரையாளர்க்கான பரிசுத் தொகை ஜீன்-30 தேதி அறிவிக்கப்பட்டு வழங்கப்படும்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? பரிசு ரூ.1500

Post by கிருஷ்ணன் » Mon May 26, 2014 11:17 pm

வரவேற்கத்தக்கப் பரிசுப் போட்டி. :ros: :ros:

முழு முயற்சி செய்வோம். :rock:
Locked

Return to “படுகை பரிசுப் போட்டி மையம்.”