தலைகளுக்குத்தான் எப்போது வலிக்கிறது

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

தலைகளுக்குத்தான் எப்போது வலிக்கிறது

Post by cm nair » Mon Nov 04, 2013 12:07 pm

கழுத்துக்கு கீழே எல்லாம் நன்றாய்த்தான் இருக்கு
தலைகளுக்குத்தான் எப்போது வலிக்கிறது
உடலாகட்டும்
ஊராகட்டும்
உலகமாகட்டும்
உறுப்புகளும் உறுப்பினர்ளும்
சிவனே என்றுஅவரவர் வயிற்றுப்பாட்டுக்காக‌
உழைத்து உண்டு,உறங்கி சுகமாக இருக்கிறார்
இந்தத் தலையாகட்டும் தலைகளாகட்டும்
ஏதாவது ஒரு பிரச்சனையை பிடித்துக்கொள்கிறது
பிரச்னையே இல்லையென்றாலும் அதை உருவாக்குகிறது
பிறகு அதற்கு நெய்யூற்றி வளர்த்து விடுகிறது
எதற்காக தான் எப்போதும் தலையாக இருப்பதற்காக‌
ஆனையிடுவது தலை தான்
அடிவாங்குவது என்னவோ அதன் உறுப்புகள் தான்


ஆனாலும் என்ன செய்ய? தலையில்லாது வாலில்லையே.......
Post Reply

Return to “படுகை ஓரம்”