கண்ணம்மா -என் - காதலி

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

கண்ணம்மா -என் - காதலி

Post by muthulakshmi123 » Mon Apr 02, 2012 4:20 pm

சுட்டும் விழிச்சுடர் தான் –கண்ணம்மா

சூரிய சந்திரரோ?

வட்டக் கரியவிழி – கண்ணம்மா

வானக் கருமை கொல்லோ?

பட்டுக் கருநீலப் –புடவை

பதித்த நல் வயிரம்

நட்ட நடு நிசியில் –தெரியும்

நஷத்திரங் களடீ!

சோலை மலரொளியோ-உனது

சுந்தரப் புன்னகை தான்?

நீலக் கடல்லையே – உனது

நெஞ்சில்லைகளடீ!

கோலக் குயிலோசை- உனது

குரலினிமை யடீ!

வாலைக் க்மரி யடீ- கண்ணம்மா!

மருவக் காதல் கொண்டேன்.

சாத்திரம் பேசு கிறாய்- கண்ணம்மா!

சாத்திர மேதுக் கடீ

ஆத்திரங் கொண்டவர்க்கே-கண்ணம்மா!

சாத்திர முண்டோ டீ!

மூத்தவர் சம்மதியில் –வதுவை

முறைகள் பின்பு செய்வோம்

காத்திருப் பேனோடி!- இது பார்

கன்னத்து முத்த மொன்று!



umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: கண்ணம்மா -என் - காதலி

Post by umajana1950 » Mon Apr 02, 2012 4:46 pm

சாத்திரம் பேசு கிறாய்- கண்ணம்மா!

சாத்திர மேதுக் கடீ
பாரதியின் பாட்டுக்களில் என்னை மிகவும் கவர்ந்தவை கண்ணன் பாட்டு. அதை உங்கள் வழியே படிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: கண்ணம்மா -என் - காதலி

Post by muthulakshmi123 » Thu Apr 05, 2012 10:26 pm

மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே

வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;

மூலைக் கடலினையவ் வான வளையம்

முத்தமிட் டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்;

நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி

நேரங் கழிவதிலும் நினைப் பின்றியே

சாலப் பலபல நற்பகற் கனவில்

தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்

ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே

ஆள் வந்து நின்றெனது கண் மறைக்கவே

பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,

பட்டுடை வீசுக,அழ் தன்னி லறிந்தேன்.

ஓங்கி வரு முவகை யூற்றி லறிந்தேன்

“வாங்கி விட்டிகையை யேடி கண்ணம்மா.

மாய மெவரிட்த்தில்?” என்று மொழிந்தேன்.

சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே

திருமித் தழுவி “என்ன செய்தி சொல்”என்றேன்;

“நெரித்த திரைக் கடலில் என்ன கண்டிட்டாய்?

நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?

திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?

சின்ன குமிழிகளில் என்ன் கண்டிட்டாய்?

பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே

பெற்ற நலங்கள் என்ன பேசுதி” என்றாள்.

“நெரித்த திரைகடலில் நின் முகங் கண்டேன்;

நீல் விசும்பினிடை நின் முகங் கண்டேன்;

திரித்த் நுரையினிடை நின் முகங் கண்டேன்;

சின்னக் குமிழிகளில் நின் முகங் கண்டேன்;

பிரித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே

பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை;

சிரித்த ஒலியினிலுள் கை வில க்கியே,

திருமித் தழுவியதில் நின் முகங் கண்டேன்”

umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: கண்ணம்மா -என் - காதலி

Post by umajana1950 » Thu Apr 05, 2012 11:28 pm

பிரித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே

பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை;

சிரித்த ஒலியினிலுள் கை வில க்கியே,

திருமித் தழுவியதில் நின் முகங் கண்டேன்”
பாரதிக்கு நிகர் பாரதி தான்.படிக்கப் படிக்கத் திகட்டாத தேனமுதம்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: கண்ணம்மா -என் - காதலி

Post by muthulakshmi123 » Sat Apr 07, 2012 10:28 pm

தீர்த்தக் கரையினிலே –தெற்கு மூலையில்

செண்பகத் தோட்ட்த்திலே,

பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவே

பாங்கியோ டென்று சொன்னாய்

வார்த்தை தவறி விட்டாய் –அடி கண்ணம்மா!

மார்பு துடிக்குதடி!

பார்த்த விட்த்திலெல்லாம் –உன்னைப் போலவே

பாவை தெரியுதடீ!

மேனி கொதிக்குதடீ! தலை சுற்றியே

வேதனை செய்குதடீ!

வானி லிடத்தை யெல்லாம் – இந்த வெண்ணிலா

வந்து தழுவது பார்!

மோனத் திருக்கு தடீ! இந்த வையகம்

மூழ்கித் துயிலினிலே

நானொருவன் மட்டிலும் –பிரி வென்பதோர்

நரகத் துழலுவதோ?


கடுமை யுடைய தடீ!- எந்த நேரமும்

காவலுன் மாளிகையில்;

அடிமை புகுந்த பின்னும்- எண்ணும் போது நான்

அங்கு வருவதற் கில்லை;

கொடுமை பொறுக்க வில்லை- கட்டுங் காவலும்

கூடிக் கிடக்கு தங்கே

நடுமை யரசி யவள் –எதற்காகவோ

நாணிக் குலைந்திடுவாள்

கூடிப் பிரியாமலே-ஒரி ராவெலாம்

கொஞ்சிக் குலவி யங்கே

ஆடி விளை யாடியே- உன்றன் மேனியை

ஆயிரங் கோடி முறை

நாடித் தழுவி மனக் குறை தீர்ந்து நான்

நல்ல களி யெய்தியே

பாடிப் பரவசமாய் நிற்கவே தவம்

பண்ணிய தில்லை யடி!
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: கண்ணம்மா -என் - காதலி

Post by muthulakshmi123 » Mon Apr 09, 2012 4:03 pm

பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு

தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;

வாயுரைக்க வருக்தில்லை வாழி நின்றன் மேன்மையெல்லாம்

தூய சுடர் வானொளியே ! சூறையமுதே!கண்ணம்மா!


வீணையடி நீ எனக்கு மேயும் விரல் நானுனக்கு

பூணும் வடம் நீயெனக்கு புது வயிரம் நானுனக்கு;

காணுமிட்ந் தோறும் நின்றன் கண்ணினொளி வீசுதடி!

மாணுடைய பேர்ரசே வாழ்வு நிலையே! கண்ணம்மா!

வான மழௌ நீ எனக்கு வண்ணமயில் நானுனக்கு

பான மடி நீ யெனக்கு பாண்டமடி நானுனக்கு

ஞான வொளி வீசுதடி நங்கை நின்றன் சோதிமுகம்

ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா!

வெண்ணிலவு நீ யெனக்கு மேவு கடல் நானுனக்கு

பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு

எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்க்சுவைக்கே

கண்ணில் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா

வீசு கமழ் நீ யெனக்கு விரியுமல்ர் நானுனக்கு

பேசு பொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு

நேசமுள்ள வான் சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?

ஆசை மதுவே; கனியே அள்ளுசுவையே கண்ணம்மா!

காதலடி நீ யெனக்குக் காந்தமடி நானுனக்கு

வேதமடி நீ யெனக்கு வித்தையடி நானுனக்கு;

போதமுற்ற போதினிலே பொங்கி வருந்தீஞ்சுவையே!

நாதவடி வானவளே நல்ல உயிரே, கண்ணம்மா!

நல்லவுயிர் நீ யெனக்கு! நாடியடி நானுனக்கு

செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு

எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே

முல்லைநிகர் புன்னகையாய்! மோதுமின்பமே கண்ணம்மா!

தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;

வீரமடி நீ யெனக்கு வெற்றியடி நானுனக்கு;

தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெலாம்

ஒருருவமாஉச் சமைந்தாய்! உள்ளமுதே கண்ணம்மா!
Post Reply

Return to “படுகை ஓரம்”