டாய்லெட்டில் காத்திருக்கிறது ஆபத்து!

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

டாய்லெட்டில் காத்திருக்கிறது ஆபத்து!

Post by rajathiraja » Wed Mar 07, 2012 9:34 pm

சமீபத்தில் டாய்லெட்டில் இருந்து கீழே விழுந்து இரத்தக்காயங்களுடன் ஒருவர் படுத்திருக்கும் போட்டோவை ஒரு சகோதரர் அனுப்பிய மெயிலில் பார்த்தேன். அது சம்பந்தமாக படுகை வாசகர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு கட்டுரையை இங்கு வரைகின்றேன்.

பண்டைய காலங்களில் மக்கள் தங்களுடைய காலை கடன்களை வெளிப்புறங்களில் கழித்து வந்தனர். நாகரிகம் உயர்ந்த பிறகு ஓலைகளால் தடுப்பு ஏற்படுத்தி குழி கக்கூஸ் ஏற்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டன. கக்கூஸ் என்று சொல்லக் கூடிய டாய்லெட், பின்னர் பீங்கானால் ஆன கோப்பைகளாக மாறின, பிரபலமாயின. வயதானவர்களும் நோயாளிகளும் பயன்படுத்தும் பொருட்டு உட்கார்ந்து கொண்டே மலம் கழிக்கும் விதத்தில் புதிய கோப்பைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கு ஐரோப்பிய டாய்லெட் அல்லது வெஸ்டர்ன் டாய்லெட் என்று பெயர். பேண்ட், சூட் போட்டிருப்பவர்கள் பேண்டை முழுவதுமாக கழட்டாமல் சிறதளவு கழட்டி விட்டு அப்படியே அமருவதற்கு வசதியாக இருந்ததால் அது சந்தையில் அணி வகுத்தன. பேண்ட் அணியும் பெண்களுக்கு இது வசதியாக இருந்தது. இதுவே தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டும் வருகின்றன.

இது நமது நாட்டில் அதிகமாக பழக்கத்திற்கு வராததால் அதில் எப்படி அமர்வது என்றே அதிகமானோருக்கு தெரிவதில்லை. இரண்டாவதாக பயன்படுத்தியவர்கள் அதை சுத்தம் செய்யாமல் போய்விடும் பொழுது அடுத்து வருபவர் அவசரம் காரணமாக அதிலேயே அமர்ந்து விடுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகின்றது. அது மட்டுமின்றி சிலர் நின்று கொண்டே மூத்திரம் பெய்யும் பொழுது அடுத்து வருபவர் நோயை இலவசமாகவே பெறுகிறார். இந்த ஐரோப்பிய டாய்லெட்டுகளை பயன்படுத்துபவர்களை அதிகமாக நோய் தாக்கும் அபாயம் இருப்பதால் அமரும் பகுதியில் அதன் மீது துணியோ பேப்பரோ விரித்து விட்டு அமர்வது நோய் வருவதிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

Image
நம்முடைய தேவை முடிந்து விட்டதல்லவா என நினைத்து முறையாக தண்ணீர் ஊற்றாமல் செல்லக் கூடாது. ஒவ்வொருவரும் பயன்படுத்திய பிறகு தாங்களாகவே சுத்தம் செய்யும் போது அது பிறருக்கு அருவருப்பை தராது. பின்னர் வருபவர்களும் அதை பார்த்து சுத்தம் செய்து விட்டு செல்வர்.

Image

அடுத்ததாக நான் ஏற்கனவே குறிப்பிட்ட போல அதில் எப்படி அமர்வது என தெரியாதவர்களும், அமரும் பகுதி அருவறுப்பாக இருப்பதாலும் சிலர் அதன் மீது ஏறி அமர்கின்றனர். இது எத்தனை பெரிய ஆபத்து என்பதை அவர்கள் உணர்வதில்லை. கால்களை தரையில் வைத்து அமரும் விதத்தில் குறைந்த அளவு எடையை தாங்கும் விதத்தில் தான் அந்த கோப்பைகள் வடிவமைக்கபட்டுள்ளன. அதன் மீது ஏறி அமர்ந்து முழு எடையையும் தாங்கும் அளவிற்கு அது தயாரிக்கப்படாததால் எளிதில் அது உடைந்து விடுகிறது.

Image
மேலும் தண்ணீர் எப்பொழுதும் அதில் பயன்படுத்ததப்படுவதால் அது விரைவிலேயே பலம் குன்றி விடுகின்றது. அதன் காரணமாக அதன் மீது ஏறும் போதே இறங்கும் போதோ அது உடைந்து விடுகிறது. எனவே அதன் மீது ஏறுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதன் மீது ஏறி அமர்ந்ததால் அது உடைந்த அந்த பீங்கானால் கால்களில் மிகப்பெரிய அளவில் காயமடைந்த இந்த படத்தை பார்த்த பிறகாவது அதில் கவனம் செலுத்துவது நல்லது.
Image

படுகைக்காக ராஜா
Last edited by rajathiraja on Sat Mar 24, 2012 5:59 pm, edited 1 time in total.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: டாய்லெட்டில் காத்திருக்கிறது ஆபத்து!

Post by umajana1950 » Wed Mar 07, 2012 10:36 pm

இது நமது நாட்டில் அதிகமாக பழக்கத்திற்கு வராததால் அதில் எப்படி அமர்வது என்றே அதிகமானோருக்கு தெரிவதில்லை. இரண்டாவதாக பயன்படுத்தியவர்கள் அதை சுத்தம் செய்யாமல் போய்விடும் பொழுது அடுத்து வருபவர் அவசரம் காரணமாக அதிலேயே அமர்ந்து விடுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகின்றது. அது மட்டுமின்றி சிலர் நின்று கொண்டே மூத்திரம் பெய்யும் பொழுது அடுத்து வருபவர் நோயை இலவசமாகவே பெறுகிறார். இந்த ஐரோப்பிய டாய்லெட்டுகளை பயன்படுத்துபவர்களை அதிகமாக நோய் தாக்கும் அபாயம் இருப்பதால் அமரும் பகுதியில் அதன் மீது துணியோ பேப்பரோ விரித்து விட்டு அமர்வது நோய் வருவதிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
இந்த வகை டாய்லெட், கண்டிப்பாக சுகாதாரம் பேண முடியாத் ஒன்று தான். அதை, பயன்படுத்துபவர்கள் சரியாக பராமரிக்காமல் விட்டுவிடுவது தான் காரணம். மேலும் இதில் வசதிகளை விட, சுகாதாரக் கேடு வருவது தான் அதிகம்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: டாய்லெட்டில் காத்திருக்கிறது ஆபத்து!

Post by muthulakshmi123 » Thu Mar 08, 2012 9:04 pm

umajana1950 wrote:
இது நமது நாட்டில் அதிகமாக பழக்கத்திற்கு வராததால் அதில் எப்படி அமர்வது என்றே அதிகமானோருக்கு தெரிவதில்லை. இரண்டாவதாக பயன்படுத்தியவர்கள் அதை சுத்தம் செய்யாமல் போய்விடும் பொழுது அடுத்து வருபவர் அவசரம் காரணமாக அதிலேயே அமர்ந்து விடுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகின்றது. அது மட்டுமின்றி சிலர் நின்று கொண்டே மூத்திரம் பெய்யும் பொழுது அடுத்து வருபவர் நோயை இலவசமாகவே பெறுகிறார். இந்த ஐரோப்பிய டாய்லெட்டுகளை பயன்படுத்துபவர்களை அதிகமாக நோய் தாக்கும் அபாயம் இருப்பதால் அமரும் பகுதியில் அதன் மீது துணியோ பேப்பரோ விரித்து விட்டு அமர்வது நோய் வருவதிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
இந்த வகை டாய்லெட், கண்டிப்பாக சுகாதாரம் பேண முடியாத் ஒன்று தான். அதை, பயன்படுத்துபவர்கள் சரியாக பராமரிக்காமல் விட்டுவிடுவது தான் காரணம். மேலும் இதில் வசதிகளை விட, சுகாதாரக் கேடு வருவது தான் அதிகம்.

நம்முடைய தேவை முடிந்து விட்டதல்லவா என நினைத்து முறையாக தண்ணீர் ஊற்றாமல் செல்லக் கூடாது. ஒவ்வொருவரும் பயன்படுத்திய பிறகு தாங்களாகவே சுத்தம் செய்யும் போது அது பிறருக்கு அருவருப்பை தராது. பின்னர் வருபவர்களும் அதை பார்த்து சுத்தம் செய்து விட்டு செல்வர்.

உண்மையில் பலர் தங்கள் வேலை முடிந்து விட்டது என நினைத்து ,சுத்தம் செய்யாமல் சென்று விடுகின்றனர். இது மிகவும் தவறு...
Post Reply

Return to “படுகை ஓரம்”