கைநாட்டு - படிச்ச முட்டாள்

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12145
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

கைநாட்டு - படிச்ச முட்டாள்

Post by ஆதித்தன் » Wed Apr 10, 2019 5:11 pm

20-ஆம் நூற்றாண்டில் ஏமாற்றப்பட்டு, 21-ஆம் நூற்றாண்டில் அடிமுட்டாளக்கப்பட்ட மக்கள் பலர் வாழும் ஊரு நம்ம ஊராத்தான் இருக்கும் போல நினைக்கிறேன்.

தாத்தா பாட்டிங்க கைநாட்டு போட்டா ரொம்ப கேவலமா பார்க்கப்பட்ட அதே 20-ஆம் நூற்றாண்டில் நீங்களும் பிறந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்... அறிவொளி இயக்கம் ... முதியோர் பள்ளிக்கூடம் என எல்லோர்க்கும் எழுத்தறிவு என்ற மிகப்பெரிய கோஷம் எழுப்பப்பட்ட நூற்றாண்டில் நீங்களும் பிறந்து, இன்று நீங்களும் கையெழுத்து போட தெரிந்த ஓருவர் என்ற பெருமையை அவர்கள் கல்வி என்றப் பெயரில் கொடுத்ததில் மிகப் பெரிய பங்கு இருக்கும்.

ஆனால், என்ன எழுத்தறிவு கொடுத்தாங்க? என்பதனை நீங்கள் என்றாவது கொஞ்சம் யோசிச்சி பார்த்தீர்களா?

ஆனால், எனக்கு திடீர்னு ஒர் மொபைல் போன் FingerPrint Lock வசதி என கைரேகை கைநாட்டு லாக் வசதியினை கொண்டிருப்பதனை மிகப்பெரிய அட்வான்ஸ் டெக்னாலஜியாக பேசிக் கொள்வதனைப் பார்க்கும் பொழுது.... கொஞ்சம் யோசிச்சிப்பு பார்த்தேன்.

ஒவ்வொருவரது கைரேகையும் வெவ்வேறு மாதிரியானது என்பதனை தெரிந்துதான், நம் முன்னோர்கள் முக்கியமான பத்திரங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் சம்பந்தப்பட்டவர்களின் கைரேகையை பதிந்து உறுதி கொண்டனர். அதைப்போல். அந்த பதியப்பட்ட ரேகையை சரிபார்க்கும் திறனும் கொண்டிருந்தனர்.

ஆனால், இடையில் வந்த படிப்பாளிகள், அந்த கைரேகையை படிக்கத் தெரியாமல், தனக்குப் படிக்கத் தெரிந்தது என்று மொழியினைக் கொண்டு எழுத வைத்து உறுதிமொழி கையெழுத்து பெற்றனர்.

இப்படி கையொப்பம் போட்டால் தங்களால் உறுதிப்படுத்த முடியும் என்ற அந்த படித்த படிப்பாளிகள், நாளடைவில் எவர் வேண்டும் என்றாலும் இப்படி கையொப்பம் போட்டு ஏமாற்றிவிட முடியும் என்பதனை அறிந்து கொண்டனர்.

ஆனால், எவரால் போட முடியாத தன் கைநாட்டை தன்னகத்தே கொண்ட நமக்கு அதன் அருமை தெரியாமல், கையெழுத்து போடுவதுதான் பெருமை என்று கையெழுத்து போட கற்றுக் கொண்ட நபர் அதிகம்... அதிலும் கொஞ்சம் ஸ்டைலா தனித்துவமா கையெழுத்து போட முயற்சிப்பவர்கள் பலர்... நானும் எனக்குன்னு ஸ்டைலா கையெழுத்துப் போட பள்ளிக்காலத்திலே முயற்சித்து ஒர் ஸ்டைல்.... அப்புறம் ஒர் ஸ்டைல்... அப்புறம் லாஜிப்படி ஒர் ஸ்டைல்னு மாத்திக்கிட்டதும் உண்டு... கடந்த மாதம் கூட வேற ஸ்டைலா போடலாம்... இது சரிவரல என்று நினைத்ததும் உண்டு.

இப்படி ஸ்டைல் ஸ்டைலா... உறுதித்தன்மை அற்ற ஒர் கையெழுத்தைத்தான் சிறந்த உறுதித்தன்மை வாய்ந்ததாக போதித்த அந்த படித்த படிப்பாளிகள், பின்னாளில் இது சரிபட்டு வராது... வேற ஏதாவது உண்மையான மாற்ற முடியாத அத்தாட்சி இருக்கா என்று ரொம்ப யோசிச்சி கண்டிபிடிச்சி... FingerPrint, EyeVerification என அட்வான்ஸ் டெக்னாலாஜில நமக்கு கொடுத்திருக்காங்க.... ஆனால் அது முன்னோர்கள் பயன்படுத்திய பழைய புடவைன்னு சொன்னா யாரு நம்புவா?

அதைவிடுங்க.... எல்லோர்க்கும் எழுத்தறிவு என்று சொன்னார்களே? யார் அந்த எழுத்தறிவாளர்கள்? ஒன்றுக்கும் உதவாத கையெழுத்து போடத்தெரிந்தவங்களா?

அட.... ஒர் பத்திரம் எழுதனும்னா எழுதத் தெரியாது..
காவல் துறைக்கு புகார் மனு எழுதனும்னா எழுதத் தெரியாது..
அலுவல் சம்பந்தமா ஏதாவது எழுதனும்னா தெரியாது..

இப்படி எல்லாம் எழுதுவதற்கு ஒருத்தர் வேலைக்கு இருக்காங்க.... அவங்கதான் எழுதிக்கிறாங்க...
காசு கொடுப்பது மட்டும்தான் அந்த எழுத்தறிவு பெற்றவர்களின் வேலை.

அன்றும் அப்படித்தான் இருந்தது.. இன்றும் அப்படித்தான் இருக்கிறது....

படிக்கத் தெரிந்தும்... படிக்க முடியாதபடி பல பக்கம், படித்தும் அறிய முடியா மொழி... என்று ஒழுங்காக படிக்காமல்தான் பெரும்பான்மையோர் கையெழுத்து போட்டுக் கொண்டிருக்கிறோம்... வங்கிக் கணக்கு திறக்கும் பொழுது பக்கம் பக்கமா கையெழுத்து போட்டேன்... அதில் இருக்கும் விதிமுறைகள், ஏற்புரைகள் பற்றி எதுவும் தெரியாது.. ஆனால் கையெழுத்து போட்டால் வங்கிக் கணக்கு கொடுத்துவிடுவாங்க... கொடுத்திட்டாங்க... ஆனால், வங்கி திவால் ஆனால், வங்கியில் போட்ட என் பணம்? அதான் ஏற்புரையில் கையெழுத்து போட்டுத்தானே வங்கிக்கணக்கு ஒபன் பண்ணிங்க.. அப்படித்தான்.... இப்படி பல திட்டங்களுக்கு படிக்காமல் தெரியாமல் தான் கையெழுத்து வாங்கி, பல கொள்ளைகள் நடந்து கொண்டிருக்கிறது.

மொத்தத்தில் உழைப்பை வாங்கிவிட்டு, கொசுறாய் கொடுத்த பணத்தினையும் வித்தியாசம் வித்தியாசமா சுரண்டி... மொத்தத்தில் உடலையும் ... வாழும் இடத்தினையும் சுரண்டிட்டு போகுறா படித்த படிப்பாளிகள்... நம்ம கைநாட்டுக்கு சினிமா படம்லாம் எடுத்து, எழுத்தறிவு கொடுத்து படிக்க வைச்சது எதுக்கு?

அவங்களுக்கு கைநாட்டினை படிக்கத் தெரில... அதனால் படிக்கத் தெரிந்த வகையில் நம்ம காசிலேயே நம்ம தேவையில்லாமல் படிக்க வைச்சி... கடைசியில் தேவையான குடிநீர்க்கு சண்டை வரும்னு கட்டுரை எழுதி படிக்க வைச்சி அழகு பார்க்கிறாங்க!

சரி... சொல்றது இருக்கட்டும்... நீங்கள் எழுதிறது... படிக்கிறது எல்லாம் அந்த படிப்புத்தானே!

நான் எழுதிறேன்... படிக்கிறேன் சரி... உங்களால் எழுத முடியுதா?

எத்தனையோ புத்தகங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது... நீங்கள் ஒர் புத்தகம் எழுதி வெளியீடு செய்திருக்கிறீர்களா?

மொத்தத்தில் எந்தவொரு திருத்தமும் வரவில்லை... அன்று கைநாட்டு வாங்கி ஏமாற்றிட்டான்னு சொல்லுவாங்க.... இன்று கையெழுத்து வாங்கிட்டு ஏமாற்றுராங்க... எந்த வித்தியாசமும் இல்லை.

அரசியல் கொள்ளைன்னு தெரிந்தும்... அந்த வாய்ப்புலதானே ஏதோ என்றை செய்ய முடியுது... மீற முடியுதா?

49-ஓ-நு படம் எடுத்து, அதுலையும் ஒர் திசைத் திருப்பலா இன்னொரு கெடுதலைத்தான் விதைத்து விடுறாங்களே தவிர, சரியானது அல்ல.

மாற்றம் வேண்டும்.. அந்த மாற்றம் எவ்வாறானது என்று அவர்கள் அவர்களுக்கு சாதகமாக விதைத்துவிடுகிறார்களே தவிர... உங்களது சுய மாற்றத்தினை ஏற்பது இல்லை.

அவர்களது தேவைகளேயே புதிய நல்மாற்றமாக சொல்லி விதைக்கிறார்கள்... அறுவடை செய்கிறார்கள்.

கைநாட்டு என்பது பெரிய தவறல்ல... அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளைக்கூட்டம் ரொம்ப புத்திசாலிகள்.

இப்போது உங்களிடம் கைநாட்டும், கண்கருவும் ஆதாரமாக எடுத்துக் கொண்டிருக்கும் அதே கொள்ளைக்கூட்டம், இந்த அளவுக்கு புத்திசாலிங்க ஆகிட்டாங்கன்னா... வரும் காலத்தில் எந்தளவுக்கு புத்திசாலித்தனமா முதுகில் சவாரி செய்வார்கள் என்பதனை எண்ணிப்பாருங்கள்.
Post Reply

Return to “படுகை ஓரம்”