Page 1 of 1

தமிழ் நாடு கொண்டு வந்தவர்

Posted: Mon Sep 18, 2017 6:24 am
by ஆதித்தன்
யுடியூப் தளத்தில்சிவசக்தி கணேசன் என்பவர் கொடுத்த தகவல்,

அறிஞர் அண்ணா தமிழகத்தில் பிறந்தவர். இவர் முன்னோர்களின் பூர்வீகம் இன்றைய ஆந்திரா....தந்தை நடராச முதலியார். நெசவுத் தொழிலாளர். தெலுங்கு முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். தாயார் பங்காரு அம்மாள். இவர் தெலுங்கு இன விஜயநகர வம்சாவளியைச் சேர்ந்தவர். சுய மரியாதைத் திருமணம் செய்து கொண்டவர்கள். வீட்டில் தெலுங்கிலும் உரையாடுவார்கள்... சிறுவயதிலேயே இவருக்கு ஆங்கிலப் புலமை அதிகம்.

இந்த உலகம் அதிகளவு அறிந்திராத அறிஞர் அண்ணா பற்றிய மற்றுமொரு விடயத்தையும் தங்களுக்கு கூற விளைகின்றேன். அண்ணா இலுமினாட்டிகளுக்கே உரித்தான அமெரிக்காவின் யேல் யுனிவர்சிட்டியின் ஸ்கல்ஸ் அன் போன்ஸ் துறையில் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றவர்.... இவர் இலுமினாட்டிகளின் ஏழாம் நிலை ப்ரீ மேசனரியாக இருந்தவர். அன்றைய காலகட்டத்தில் இலுமினாட்டிகள் மற்றும் கிரௌன் கார்ப்பரேசன் என்றால் எவருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை.

50 ஆண்டு கால ஆட்சி திராவிடக் கட்சிகளின் கையில்... திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள் பாடப் புத்தகத்தில் பெரியாரையும் அண்ணாவையும் உலகச் சிறந்த மகான்களாக திரித்து நம்மை நம்ப வைத்துவிட்டது.

தலமைச் செயலகத்தில் அனைத்து உயர் பதவிகளிலும் 100 சதவிகிதம் தமிழர்களை மாற்றல் செய்து தெலுங்கர்களை அமர்த்தினார்கள்..

ஆதலால் ஆட்சியாளர்களால் பாடப் புத்தகத்தில் நம் அனைவருக்கும் பெரியாரைப் பற்றியும் அண்ணாவைப் பற்றியும் நல்ல விடயங்கள் மட்டுமே நம் சிந்தைக்குள் செலுத்த வைக்கப்பட்டன .

இறுதியாக மற்றுமொரு விடயத்தையும் கூறி முடித்துவிடுகின்றேன்.

அண்ணா முதலமைச்சராக இருந்தபோது மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது.

அண்ணா பெரியாரின் கோரிக்கையை ஏற்று திராவிட நாடு எனப் பெயரிட பணிக்கப்பட்டார்.....

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மெட்ராஸ் இராஜதானியாக இருந்த மதராஸ் மாநிலம் சங்கரலிங்கனார் மற்றும் மா.பொ.சி. போன்ற தமிழினத் தலைவர்களின் இடைவிடாத போராட்டங்களினால் (76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சங்கரலிங்கனார் உயிர் நீத்தார் ) வேறு வழியில்லாமல் அப்போது முதலமைச்சராக இருந்த அண்ணா , திராவிட நாடு என்ற கொள்கையைக் கைவிட்டு தமிழ்நாடு எனப் பெயர் மாற்றினார்.

அண்ணா மாற்றவில்லை. தமிழர்களின் இடைவிடாப் போராட்டம் அண்ணாவை மாற்ற வைத்தது.

நன்றி.