ஆகஸ்ட் 2017 -இல் தமிழக சட்டசபை பொதுத் தேர்தல்

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12145
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஆகஸ்ட் 2017 -இல் தமிழக சட்டசபை பொதுத் தேர்தல்

Post by ஆதித்தன் » Sun Mar 05, 2017 9:14 am

ஆகஸ்ட் 2017-இல் சட்டசபைக்கான பொதுத்தேர்தல் வரலாம், என்றத் தலைப்பை பார்த்ததும் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் உண்மையில் இன்றைய தமிழக பொதுமக்களின் நிலைதான் மிகவும் கேளிக்கைக்கூறியதாக இருக்கிறது.

தமிழகத்தில் என்ன நடக்கிறது, அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்பதுகூட ஒர் திட்டமிட்டச் சதிச் செயலாகவே நடந்து வருவதால் தமிழக மக்கள் மனதளவில் ஆவேசப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஜெயலலிதா மரணம் ஆகட்டும், பணத்தடை ஆகட்டும், ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகட்டும், சசிகலா எதிர்ப்பு ஆகட்டும், நெடுவாசல் போராட்டம் ஆகட்டும், அடுத்து நடக்க இருக்கிற உண்மை அறியும் போராட்டம் ஆகட்டும், அனைத்துமே மக்களுக்கு எதிரான சதிகார கும்பலின் பேராசையால் உருவான போராட்டம்.

பணத்தடையால் நன்மை நடக்கும் என்று எதிர்பார்த்த அன்றாட வாழ்வாதாரத்திற்கான வருவாய்க்கே கடினப்படும் ஏழைமக்களுக்கு கிடைத்தப் பரிசு, மேலும் ஏமாளியாக்கும் கடன் திட்டம் அறிவிப்பு.

ஜெயலலிதா முதல்வராக வந்தால் மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடரும் என்று நம்பி வாக்களித்து முதல்வராக்கிய பொதுமக்களுக்கு கிடைத்தப்பரிசு, அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறையால் சேர்க்கப்பட்டிருந்த பொழுது எப்படி இருக்கிறார் என்ற விவரத்தினைக்கூட கேள்வி கேட்க உரிமையில்லாமல், ஏமாற்று அறிக்கை என்று வர்ணிக்கப்படும் செய்தி விவரத்தோடு மர்மமான முறையில் மருத்துவமனைக்குள் வைத்துக் கொண்டு, பிணமாக திரும்பப் பெற்றது.

தமிழக மக்களின் பாரம்பரிய விளையாட்டான சல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறுவதற்கான இருந்த தடையினை நீக்க என்ன செய்ய வேண்டும் என்பதனைக்கூட மூன்று வருடங்களாக சிந்திக்காத அரசு நிர்வாகத்தினால், தடைபட்டுக் கிடந்த சல்லிக்கட்டு விளையாட்டினை மீட்டெடுக்க இளைஞர்களின் மெரினா போராட்டாத்தினால் தீர்வு கிட்டியது. அதுமட்டுமில்லாமல், ஒற்றுமையாக போராடினால் மட்டுமே கிடைக்கும் என்பதனை இளைஞர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்தது மட்டுமில்லாமல், அரசு பொதுமக்கள் நலனுக்கு எதிரான வியாபாரம் செய்கிறது என்ற நிலவரங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் தகவல் பரவியது. இதனால், மக்கள் அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கையையும் அரசு நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையும் இழந்துவிட்டனர்.

மிகப் பெரிய குற்றவாளியாக தமிழக மக்கள் கருதும் சசிகலா, தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில் அரசாங்கம் நடத்த தாங்கள் தேர்ந்தெடுத்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், பின்னர் தமிழக முதல்வராக பதவியேற்கப் போவதாகவும் செய்தி வெளிவந்தவுடன் பொதுமக்கள் அனைவருமே மனம் நொந்துப்போகினர் என்பதனை ஒவ்வொரு டீக்கடையிலும் நடக்கும் விவாதம் பத்திரிக்கை வரை எட்டி, மக்கள் எதிர்ப்பு சுட்டிக்காட்டப்பட்டது. ஆனாலும் சசிகலா முதல்வ்ர் ஆவதற்காக எடுத்த நடவடிக்கைகள், தமிழக அரசியலில் அசாதாரண சூழல்களை ஏற்படித்தியதோடு, ஜெயலலிதா மர்ம மரணத்தினை மையமாகக் கொண்டு அதிமுக இரண்டாக பிளவுபட்டுக் கிடைப்பதனையும், அரசியல் ஆதாயத்திற்காவும் பதவி ஆசைக்காகவும் நடந்துவரும் அரசியல் கேளிக்கை கூத்துகளைப் பார்த்து பொதுமக்கள் மனம் நொந்து கொண்டிருக்கையில் நெடுவாசல் போராட்டாம்.

தமிழகத்தில் மீத்தேன் திட்டம் வருவதனை எதிர்த்து பலவருடங்களாகவே மக்கள் தங்கள் கருத்தினை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அதனை கண்டுகொள்ளாத மத்திய அரசு தமிழகத்தில் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது. மக்களது கருத்துகளை கொஞ்சம் கூட சிந்திக்காத அரசு மீண்டும் வியாபார நோக்கில் மக்கள் நலனுக்கு எதிரான கார்ப்ரேட் கம்பெனிகளின் கைக்கூலியாக வேலை செய்கிறது என்றுக்கூறி நெடுவாசல் போராட்டம் நடந்தது.

தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழலில், நீதித்துறை ஒர் பக்கம் தனது செயல்பாடாக மே மாதத்திற்குள் தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. ஜெயலலிதா மர்ம இறப்பிற்குப்பின் பதவி ஆசையால் பிளவுபட்டு நிற்கும் அதிமுக, தன் சொந்த அரசியல் ஆதாயத்திற்காக பொதுமக்கள் மத்தியில் ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருக்கிறது என்றுக் கூறி பதட்டத்தினை உருவாக்கும் வகையில், ஜெயலலிதா அவர்கள் சசிகலாவால் தாக்கப்பட்டதாலேயே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பார், என்ற கருத்தினை மருத்துவமனையில் இருக்கும் பொழுது சொல்லாதவர்கள் தற்பொழுது பத்திரிக்கைக்கு அளிப்பதும், வீடு வீடாக துண்டுச் சீட்டு பிராச்சாரம் செய்ய முயல்வதும், மெரினாவில் போராட்டாம் நடத்த அழைப்பு விடுப்பதும் தமிழகத்தில் பதட்டத்தினை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

தொடர்ச்சியாக தமிழகத்தில் அசாதாரண சூழலே நிலவிவரும் இத்தருணத்தில் உள்ளாட்சி தேர்தல் என்பது சாத்தியமற்றது என்பதோடு, கலவரத்தினை உருவாக்கவும் வாய்ப்பிருக்கிறது. சல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் உட்புகுந்து கலவரத்தினை துண்டியதாக காவல்துறையும் அரசும் கூறியது. சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் விரோதிகள் என்று போராட்டம் நடந்தது. அதைப்போல் நெடுவாசல் போராட்டத்திலும் சமூக விரோதிகள் உள்ளனர் என்று காவல்துறை சந்தேகத்தினை வெளிப்படுத்தியது.

இப்பொழுது உள்ளாட்சி தேர்தல் ஆதாயத்திற்காக, அரசில் தலைவர்களுக்குள்ளே போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்காக மக்களை திசை திருப்பி கவரும் நோக்கமாக ஜெயலலிதா மர்ம மரணத்தினை கையில் எடுத்திருப்பது மிகப்பெரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறை, ஒர் தரப்பினர் ஜெயலலிதா இறப்பிற்கான நீதி கேட்டு செய்ய இருக்கிற துண்டு பிரச்சாரத்திற்கும், உண்ணாவிரதத்திற்கும் அனுமதி வழங்கவில்லை.

மக்கள் வாழ்வாதர தேவையான நீர் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, அரசியல் தலைவர்கள் தேவையற்ற போராட்டாங்களை முன்னெடுத்து மக்கள் மத்தியில் அதிருப்தியினை சம்பாதித்து வருகின்றனர். இதனால் உள்ளாட்சி தேர்தலின் பொழுது அரசியல் தலைவர்கள் வாக்கு கேட்டு வந்தால் எதிர்ப்பு தெரிவிக்கும் வாய்ப்பு பெரிதும் காணப்படுகிறது. ஆனால், மக்கள் பிரச்சனையை திசை திருப்பி சசிகலாவுக்கு எதிரானதாக மாற்றத் துடிக்கும் அரசியல்வாதிகள், ஆளும் அரசுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.எ- க்களை பிரித்தெடுத்து ஆட்சிக்கவிழ்ப்புக்கு வித்திட துடித்துக் கொண்டிருக்கின்றனரோ என்று தோன்றுகிறது.

ஆகையால், உள்ளாட்சி தேர்தல் நடக்குதோ இல்லையோ, ஆகஸ்ட் மாதத்தில் சட்டசபை பொதுத் தேர்தல் வந்தாலும் வந்துவிடலாம்.

செய்தி நினைவுகள்:
பணத்தடையை வரவேற்ற ரஜினி
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுப்பிய கெளதமி
மெரினாவில் லாரன்ஸ்
சசிகலாவா? அதிரும் கமல்
பினாமி ஆட்சி - குஷ்பூ
நெடுவாசலை காப்பாற்றுங்கள் - விஷால்
அடுத்து தேர்தல் களத்தில் யார்???
Post Reply

Return to “படுகை ஓரம்”