Page 1 of 1

அரசால் காவல்துறை குடிக்கும் தண்ணீரையும் மக்களுக்கு கொடுப்பதனை தடுத்தனர்

Posted: Tue Jan 17, 2017 7:37 am
by ஆதித்தன்
ஜல்லிக்கட்டு என்றாலே மதுரை அலங்காநல்லூர்தான் என்று சொல்லும் அளவில் உலக அளவிலிருந்து சுற்றுலா ஆர்வலர்கள் கலந்து கொள்ளும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஏற்பட்ட தடையை முறைப்படி நீக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் காட்டிய மெத்தனம் மக்கள் மத்தியில் மிகப் பெரிய போராட்டத்திற்கு வித்திட்டுள்ளது.


மக்களுக்காக சட்டம் இயற்றப்பட்டு, சட்டப்படி ஆளும் அரசு, மக்கள் விரோத சட்டங்களை நீக்கவும் திருத்தவும் அதிகாரம் பெற்றது.


ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் என்று வெகுநாட்களாக அரசு சார்ந்தவர்கள் கூறிவிட்டு, விழா நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதும்... நீங்கள் கடந்த ஒர் வருட காலத்தில் அனுமதி வாங்காமல் என்ன செய்தீர்கள் என்று செயல்பட வேண்டிய அரசு, செயலற்ற அரசினை குறைகூறிக்கொண்டு, தன் செயல்பாடுகளை கிடப்பில் போட்டு தவறு செய்தியிருப்பதனை மூடி மறைப்பதும் மக்கள் மத்தியில் பெரிய கொந்தளிப்பினை ஏற்படுத்தி வருகிறது.


இதனை தொடர்ந்து அலங்காநல்லூர் வாடிவாசலில் இளைஞர்கள் அமைதியான முறையில் உள்ளூர் மக்கள் ஆதரவுடன் ஜல்லிக்கட்டுக்கு அனுமதிகேட்டு காலையில் கூடிய மக்கள் இரவிலும் தொடர்ச்சியாக கலைந்து செல்லாமல் அனுமதி கிடைக்கும் வரை இருப்பு போராட்டம் நடத்தும் சிந்தனையுடன் நள்ளிரவு தாண்டி விடியலிலும் தொடர்ச்சியாக போராட்டம் நடக்கிறது.


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசும் அரசுகள் 24 மணி நேரமாக பாதுகாப்போடு கவனித்து வரும் காவல்துறையினர், கூடியிருப்பவர்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதனை வெளியிலிருந்து தடுத்து வருவதாகவும், இரவிலும் உணவு மற்றும் தண்ணீர் கொண்டு செல்லும் ஊர்மக்களை தடுத்ததாகவும் தகவலை நாளிதழ் செய்தியில் பார்க்கும் பொழுது, அரசே தன் பணியாளர்களுக்கு கட்டளையிட்டு, மக்களை தவிக்க விடுகிறார்கள் என்று சிந்திக்க தூண்டுகிறது.

நீர் மற்றும் உணவு கொண்டு செல்ல காவல்துறை தடுத்ததால், கூடியிருந்தவர்களில் பலர் மயக்கமடைந்து வருவதாக நாளிதழ் தகவல் கொடுத்து, மக்களுக்கு செய்தியினை பரவச் செய்து, அவர்களை காப்பாற்றக்கூடிய ஏதுவான சூழலை அமைத்துக் கொடுத்திருப்பதனை பாராட்டலாம்.


ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பம்.


மக்களின் நல்விருப்பத்தினை நல்லமுறையில் ஒழுங்காக செயல்படுத்தவே சட்டமும் அரசும்.


இன்று அரசு ஜல்லிக்கட்டுக்கு நடத்த அவசர ஆணை வெளியிடும் என்று நம்பப்படுகிறது. அதுவரை, அலங்காநல்லூரில் இருப்பு போராட்டத்தினை மக்கள் தொடர்ந்து நடத்துவார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மீடியா முயற்சிகளால், சுற்றுவட்டார மக்களும் இணைந்து போராடுவார்கள் என்பது தற்போதைய சூழல் வெளிப்படுத்துகிறது.


எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் அமைதி முறையில் போராட்டத்தினை நடத்தி ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற அனுமதி பெறுவார்கள் என நம்பலாம்.