காக்கிச் சட்டைகள் அச்சம் - தூண்டிவிட்ட நாளிதழ்

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12145
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

காக்கிச் சட்டைகள் அச்சம் - தூண்டிவிட்ட நாளிதழ்

Post by ஆதித்தன் » Mon Jan 16, 2017 9:30 pm

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பினை தடை செய்வதற்காகவும் தமிழ்நாட்டு மக்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கும் வேலையில் தமிழக காக்கிச்சட்டை நிலவரத்தினை செய்தித்தளம் வெளியிட்டிருப்பது காவல்துறைக்கு அச்சத்தினை உருவாக்கியிருக்கிறது.


தமிழ்நாட்டு காவல்துறையில் மொத்த பணியிடங்கள் 1,35,830 மட்டுமே. அதில், 17,700 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.


8 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில், 1,18,130 காவலர்கள் பணி புரிகின்றனர். இதில் பலர் சென்னை மாநாகரிலும், பிற நகரிலும் பணிபுரிகின்றனர்.


தமிழகத்தின் பல இலட்சக் கணக்கான மக்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களது ஆதரவினைக் கொண்டு, சில நூறு நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடத்தியிருக்கின்றனர்.


ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது காவல்துறையினை தடியடி நடத்தியுள்ளனர்.


சில நூறு நபர்கள் மட்டுமே கலந்து கொண்டமையால்தான் இந்த தடியடி நடத்தப்பட்டுள்ளது என்பதனை படித்த இளைஞர்கள் நன்றாகப் புரிந்து கொண்டதோடு, சமூக வலைதளங்களின் வசதியினை பயன்படுத்தி தங்களுக்கான ஆதரவினை வலுப்படுத்தி வருகின்றனர்.


தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட பகுதியில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெற்றால் காவல்துறையினால் கட்டுக்குள் கொண்டுவர முடியாது என்பதே உண்மை நிலவரம். அதுமட்டுமில்லாமல், காவல்துறையினர் பல்வேறு பகுதிக்கும் பிரிந்து செல்ல வேண்டிய சூழல் அமையும் பொழுது தங்களது பலம் ஆயுதமிருந்தாலும், மக்கள் கூட்டத்திற்குள் மாட்டிக் கொண்டால் ஆபத்தாகவே முடியும் என்று தற்பொழுது காக்கிச்சட்டையினர் அச்சம் கொண்டுள்ளனர்.


காக்கிச் சட்டை அச்சம் கொள்ள மிக முக்கியக் காரணம், தமிழக மக்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டினை தடுப்பது என்பதே தவறு. அவ்வாறு மக்களுக்காக இயங்க வேண்டிய சட்டம், மக்களுக்கு எதிராகச் செயல்பட இயங்க வைப்பது என்பதே போராட்டத்தினை தூண்டியுள்ளது.


தவறு செய்பவர்களை துணிந்து தடுக்க முடியும். ஆனால் இங்கே பாரம்பரிய விளையாட்டினை விளையாடாதே என்று தடுக்கும்படி காவல்துறையே தவறு செய்ய சட்டத்தினை தூண்டிவிட்டதால், பொதுமக்கள் தங்களது உரிமையை நிலைநாட்ட தவறான சட்டத்தினை நீக்க போராடி வருகிறார்கள்.


தற்பொழுது காவல்துறையின் நிலவரமும் தெரிந்துள்ளதால், ஒர் இடத்திற்குப் பதில் பல்வேறு இடங்களில் மக்கள் திரள காவல்பணியாளர்களின் எண்ணிக்கையை வெளியிட்டு செய்தித்தளம் அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளது.


மக்கள் எங்கும் ஒன்றிணைந்து போராட்டத்தினை மேலும் வலுப்படுத்தும் பொழுது, தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தினை மதித்து ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அவசரச் சட்டத்தின் மூலம் வழிவகை செய்யும் என்பதில் எந்தவொரு மாற்றும் இல்லை.
Post Reply

Return to “படுகை ஓரம்”