Page 1 of 1

உலக கோப்பை ஆக்கி: இந்தியா-ஸ்பெயின் ஆட்டம் ‘டிரா

Posted: Fri Jun 06, 2014 8:12 am
by ரவிபாரதி
http://img.dailythanthi.com/Images/Arti ... SECVPF.gif[/fi] :ros: :ros: 12 அணிகள் பங்கேற்றுள்ள உலக கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்தில் உள்ள ஹாக் நகரில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் வகிக்கும் இந்திய அணி நேற்று ஸ்பெயினுடன் மோதியது. ஆட்டம் தொடங்கிய 28-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ரூபிந்தர் பால் சிங் எளிதில் கோலாக மாற்றினார். ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நிலைக்கவில்லை. 34-வது நிமிடத்தில் ஸ்பெயின் பதில் கோல் திருப்பியது. இந்திய கோல் கீப்பர் இரண்டு முறை பந்தை தடுத்த போதிலும், திரும்பி வந்த பந்தை ஸ்பெயின் வீரர் வின்சென்க் ருயிஸ் சூப்பராக கோலுக்குள் திணித்தார்.

இதன் பின்னர் இரு அணி வீரர்களும் கடுமையாக முயற்சித்தும் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கவில்லை. பல பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீணடித்தனர். முடிவில் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது. இந்திய அணி முதல் இரு ஆட்டங்களில் பெல்ஜியம், இங்கிலாந்து அணிகளிடம் தோல்வி கண்டிருந்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு :rock: அரைஇறுதி வாய்ப்பு மங்கி போய் விட்டது. இந்திய அணி அடுத்து மலேசியாவை நாளை எதிர்கொள்கிறது.

முன்னதாக நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி 3-வது வெற்றியுடன் அரைஇறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வென்றது. :rock: :great: